ArchiveJuly 2018

முதல் சம்பளம்

முதல் சம்பளம் அ.முத்துலிங்கம் வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன்.  சம்பளத்துக்கு வேலை. என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சுப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை.  மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம்...

இரண்டு டொலர்

இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக  காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல்.   தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம்  மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது  ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள்.  அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும்  பார்க்க உயர்ந்த வேலை  எனக்கு...

ராஜன் என்பவர் எடுத்த நேர்காணல்

  நேர்காணல் – அ.முத்துலிங்கம்     ஏன் எழுதுகிறீர்கள்?   உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார்...

இப்பொழுது நாங்கள் ஐவர்

இப்பொழுது நாங்கள் ஐவர் அ.முத்துலிங்கம் டேவிட் செடாரிஸ் என்ற அமெரிக்க எழுத்தாளரை பல தடவை சந்தித்திருக்கிறேன். அவர் பற்றி எழுதியும் இருக்கிறேன். அவருடைய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக விற்றுக்கொண்டிருக்கிறது. அது வேறு ஒன்றும் இல்லை. அவருடைய டைரிக் குறிப்புகள்தான். அவர் எழுதியவற்றை ஒரு தொகுப்பாக இப்பொழுது வெளியிட்டிருக்கிறார்கள்.  இந்த புத்தகத்தின் பெயர் Theft by Finding. தமிழில்...

கோப்பிக் கடவுள்

கோப்பிக் கடவுள் அ.முத்துலிங்கம் சில வாரங்களுக்கு முன் ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடையில் இரண்டு கறுப்பின வாடிக்கையாளர்கள் போலீசாரினால் கைது செய்யப்பட்டனர். இது நடந்தது அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஃபிலெடெல்ஃபியாவில். இந்த விவகாரம் நொடியில் ஆர்ப்பாட்டமாகி கறுப்பின மக்கள் ஒன்று திரண்டு போலீசாரின்  இந்த அட்டூழியத்தை எதிர்த்து புரட்சி செய்தனர். ஸ்டார்க்பக்ஸ் நிர்வாகம் அநீதிக்கு பொறுப்பேற்று  இனிமேல்...

மோசமான விடைபெறுதல்

மோசமான விடைபெறுதல் லாரி டேவிட் [சமீபத்தில் இந்தக் குறிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது நேரடியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு அல்ல. தழுவல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எழுத்து எழுத்து என்று சொல்கிறோமே. இதுதான் எழுத்து. இலக்கியம் என்றும் சொல்லலாம். – அ.முத்துலிங்கம் ] 1942ம் ஆண்டு, ஜூன் 25. நான் போருக்குப் புறப்பட்ட நாள். உயர்நிலை...

எக்ஸ் தந்த நேர்காணல்

எக்ஸ் தந்த நேர்காணல் அ.முத்துலிங்கம் சினிமா என்று வரும்போது நடிகர் நடிகைகளையே எல்லோரும் சந்திக்க விரும்புவார்கள். அடுத்து இயக்குநர். அதற்கும் அடுத்தபடியாக  இசையமைப்பாளர். பின்னர் பாடகர் இப்படிப் போகும். நான் பார்க்க விரும்புவது தயாரிப்பாளர்களைத்தான். அவர்கள்மேல் நெடுங்காலமாக எனக்கு இருக்கும் ஈர்ப்பை வர்ணிக்கமுடியாது. அதைப்பற்றி விளக்கவும் இயலாது. அவர்கள் எதற்காக படம் தயாரிக்கிறார்கள்? பணமா அல்லது...

ஐயாயிரம் வருடத்துக் கதை

ஐயாயிரம் வருடத்துக் கதை அ.முத்துலிங்கம் சிவகாமியின் சபதம் நாவலை கல்கி பன்னிரெண்டு வருடங்களாக தொடர்ந்து பத்திரிகையில் எழுதினார். பின்னர் அது நாவலாகவும் வந்தது. அதன் கதைச் சுருக்கத்தை  அரைப் பக்கத்தில் எழுதிவிடமுடியும். தமிழ்மகன் எழுதிய ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் 182 பக்கங்கள்தான். அதன் கதைச் சுருக்கத்தை எழுதவே முடியாது.  ஏனென்றால் நாவல்தான் சுருக்கம். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய...

எதிர்பாராதது

எதிர்பாராதது அ.முத்துலிங்கம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் இலகுவில் நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார்கள். தட்டிக் கழிக்கவே செய்வார்கள். ஆனால் சமீபத்தில் எனக்கு ஒரு சின்ன...

அந்திமழை நேர்காணல்

அந்திமழை நேர்காணல் கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன?   பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை  சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta