Categoryகட்டுரைகள்

ராமானுஜம் எழுதியது

த்ரிஷாவும்  திருக்குறிப்பு நாயனாரும்  தமிழ் இலக்கிய வட்டாரத்தில் 'வாசிப்பு இன்பம்' என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது 'களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும்...

எல்லோர்க்கும் பெய்யும் மழை

[பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதினேன். அதை ஆனந்த விகடன் பிரசுரித்திருந்தது. எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கேயிருந்து எழுதினேன் என்பது மறந்துபோனது. சமீபத்தில் ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் அதை மீண்டும் வெளியிட்டிருந்தது. படித்து நான் அதிசயித்தேன். முற்றாக மறந்துவிட்டிருந்தேன். அதை திரும்பவும் இங்கே வெளியிடும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே வெளியிடுகிறேன். என் நண்பர் , மனநல...

காசு இல்லை

திங்கட்கிழமை என்றால் லொத்தரி டிக்கட் வாங்கும் நாள். அவர் தன் தயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். அங்கே  தாயார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை பார்வையிட்டுவிட்டு இறுதியில் ஆறு இலக்கங்களை தெரிவு செய்வார். நண்பர் பொறுமையாக  காத்திருப்பார். தெரிவு முடிந்ததும் காசை கொடுத்து, டிக்கட்டை வாங்கி தாயாரின் கைப்பையை திறந்து அதற்குள் வைத்து கிளிக் என்று சத்தம் வர பூட்டி...

சொற்கோவை – 2

தேவையான சொற்கோவை என்றொரு பதிவு ஏற்கனவே (2010-04-22) பதியப்பட்டிருக்கிறது. இப்பொழுது பெருப்பிக்கப்பட்ட சொற்கோவை வந்திருக்கிறது. இன்னும் வரும். சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்து முடித்தேன். அப்படியே கட்டிப் போட்டது எனச் சொல்லலாம்; அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் சிலவொரு இடங்களில் சாதாரண ஆங்கில வார்த்தைகள்கூட அப்படியே வந்திருந்தன. டூர், பர்னிச்சர், செமஸ்டர், நார்மல், சில்வர், கிரேட்...

ஆயுளைக் கூட்டுவது

என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் என்னால் சண்டை மூண்டது. விசயம் சின்னதுதான். புது வருடம் பிறந்தபோது நண்பர் எனக்கொரு புத்தகம் பரிசு தர விரும்பினார். அவரும் மனைவியும் புத்தகக் கடைக்கு போனார்கள். நண்பர் தெரிவு செய்த புத்தகம் மனைவிக்கு பிடிக்கவில்லை, மனைவி தெரிவு செய்தது நண்பருக்கு பிடிக்கவில்லை. நண்பர் தன்னுடைய தெரிவைத்தான் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மனைவி அது தக்க புத்தகம்...

என்ன கதைப்பது

ஓரு துறையில் பிரசித்தி பெற்றவரை திடீரென்று சந்தித்தால் வாயடைத்து நிற்பது என் வழக்கம். அப்படியிருக்க வீடு தேடிவந்த கொலைகாரனிடம் பேசவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது. அத்தோடு மொழிப்பிரச்சினை வேறு எனக்கு இருந்தது. இது நடந்தது பல வருடங்கள் முன்பு. இன்று அதையெல்லாம் தாண்டி நான் வந்திருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேசுவதை கலையாகவே வளர்த்து வைத்திருக்கும் சிலரை...

குரல் மட்டுமே எஞ்சியிருக்கிறது

அந்தக் கட்டிடத்தை அணுகியதும் நான் பார்த்த காட்சி எதிர்பாராதது. அதிர்ச்சியூட்டுவதாகவும் இருந்தது. பனி தூவி முடிந்து,  மழை தூற ஆரம்பித்த  ஒரு ஜனவரி வியாழன் காலை நேரம். பொஸ்டன் நகரத்து 20 பார்க் பிளாஸா உயர் கட்டிடத்தின் வரவேற்பறை. நான் உள்ளே கால் வைக்கமுடியாதபடி வரவேற்பறையை மறித்து குறுக்காகப் படுத்தபடி கிடந்தன மனித உடல்கள். நான் என்ன செய்வதென்று அறியாது திகைத்துப்போய் நின்றேன். எனக்கு...

பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்

17ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் இரண்டாவது சார்ல்ஸ் மன்னரின் ஆட்சி நடந்தபோது பிளேக் எனும் கொடிய கொள்ளை நோய் பரவியது. இது பயங்கரமான தொற்று வியாதி. மக்கள் நூற்றுக் கணக்கில் தினமும் செத்து விழுந்தனர். செல்வந்தர்கள் ஊரை விட்டு, நாட்டை விட்டு  தப்பி ஓடினர். அரசன்கூட ஒரு தருணத்தில் வேறு ஊருக்கு தன் அரண்மனையை மாற்றினான். அவன் கட்டளைப்படி தினம் அரச சேவகர்கள் கைவண்டிகளை தள்ளிக்கொண்டு தெருத் தெருவாகச்...

உங்கள் பெயர் என்ன?

ரொறொன்ரோவில் உள்ள பிரபலமான தமிழ் புத்தகக் கடையில் நுழைந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு திரும்பும்போது கடைக்காரர் என்னைப் பார்த்து 'உங்களுக்கு ஒரு டிவிடி இருக்கிறது' என்றார். '1960 களில் கலைஞர் கதை வசனம் எழுதி, சமீபத்தில் வெளிவந்த 'உளியின் ஓசை' திரைப்படத்தின் டிவிடி. இந்தப் படத்தில் வரும் ஏழு பாடல்களுக்கும்  இளையராஜா ஒரே நாளில் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.' அவர்...

இருளில்

எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்?  கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரபா பார்வையற்றவர். அவருடைய கனவில் அம்மா  வருகிறார். அவருடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் வருகிறார்கள். அவருக்கு கண்பார்வை போனது ஏழுவயதில் என்பதால் அவர் காட்சிகள் எல்லாம் ஏழுவயதோடு உறைந்து...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta