ஒரேயொரு புத்தகம்

 

இப்பொழுதெல்லாம் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் 'இம்முறை எத்தனை புத்தகங்கள் போடுகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்கு ஒரேயொரு நகைபோட்டுக்கொண்டு போன பெண்போல இதற்கு மறுமொழி சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. முன்னால் நிறையப் பேர் ஓடுகிறார்கள். பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒருவருமே இல்லை. என்ன செய்வது? என்னால் வேகமாக எழுதவே முடியவில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு எழுத்தாக விசைப்பலகையில் பார்த்து குத்தி குத்தி தட்டச்சு செய்கிறேன். ஒரு புத்தகம் எழுதி முடித்ததே பெரிய சாதனை.

அதன் பெயர் 'அமெரிக்க உளவாளி.' கட்டுரைகளும் நான் அவ்வப்போது பதிந்து வந்த நாட்குறிப்புகளும் அடங்கியது. கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வருகிறது. நிச்சயம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு முன்னரும் வெளியாகலாம். நான் இன்றுவரை சந்திக்காத, பேசியிராத நண்பர் பா.ராகவன் முன்னுரை எழுதியிருக்கிறார். அதன் கொழுவியை கீழே கொடுத்திருக்கிறேன்.

http://www.writerpara.com/paper/?p=1692#more-1692

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta