ஒரு கடிதம்

ஐயா வணக்கம். 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' வாசித்து முடித்து நிறைவாக நெஞ்சோடு புத்தகத்தை அணைத்திருந்த கையோடு உங்களுக்கு எழுதுகிறேன். (ஜெயகாந்தன் சொல்லுவார், 'உங்கள் கைகளில் தவழ்வது புத்தகம் அல்ல; எழுதியவனின் இதயம் என்று'.) மனம் நிறைந்த வாசிப்பனுபவம். ஒரு மனிதருடைய வாழ்க்கை கண் முன்னே பல்வேறு சம்பவங்களோடு நிகழ்கிறது. வாழ்க்கையின் அன்றாட விஷயங்களின் மீது உள்ள உங்களுடைய தேர்ந்த ரசனையால் மனதைப் புதுப்பிக்கிறீர்கள். ஆழமாக சோகம் இழையோடும் தருணங்களிலும், மேலோடும் நகைச்சுவை, வாழ்க்கையில் உங்களுடைய அனுபவத்தையும், உயர்ந்த பக்குவத்தையும் காட்டுகிறது. ஒரு நல்ல புத்தகம் வாசிக்கும் போது, அந்த புத்தகத்தோடு, அதை எழுதிய ஆசிரியனோடு நமக்கு ஏற்படுகிற நெருக்கம் அலாதியானது. ''பாம்பு வந்தது' தொடங்கி, 'extraordinary' food கடந்து, நீங்கள் மிதி வண்டி பழகியது வரை……குடல் வரை சிரிக்கச் செய்தது; தேர்ந்த சுவையோடு. என் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தியவை ஜெயகாந்தனின் எழுத்துக்கள். இன்று ஜெயமோகன், ராமகிருஷ்ணன், நீங்கள் என்று படர்கிறது….. என் வயது (27) காரணமா தெரியவில்லை….என் தகப்பன் போல ஒரு மரியாதை கலந்த உணர்வு இப்புத்தகம் வாசித்த கையோடு உங்களைப் பார்க்கிறபோது…….

நன்றியுடன்,
வள்ளியப்பன், சென்னை.

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta