கவியாகப் போகிறார்

 

 சில வருடங்களுக்கு முன்னர் ஆட்டோகிராஃப் என்று ஒரு தமிழ் படம் வந்தது. அதில் பா.விஜய் ஒரு பாடல் எழுதியிருந்தார்.
  ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
  வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
இந்தப் பாடல் பெரும் விவாதத்தை தமிழ் அறிஞர்களிடையே கிளப்பியது. 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' என்பது இலக்கணப் பிழை. ஒவ்வொரு பூ என்பதுதான் சரியானது. ஆனால் அவர் ஒரு கவிஞர் என்பதால் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது என்று மன்னித்துவிட்டார்கள்.

 

சேக்ஸ்பியர் தன்னுடைய ஹாம்லெட்டில் இப்படி ஓர் இடத்தில் சொல்கிறார்.
To be or not to be, that is the question. இங்கேயும் இலக்கணக்காரர்கள் வந்துவிட்டார்கள். அதிலே இரண்டு கேள்விகள் உள்ளன. That is the question என்பது பிழை என்றார்கள். ஆனால் சேக்ஸ்பியர் மாபெரும் கவி. அவரையும் மன்னித்துவிட்டார்கள்.

சமீபத்தில் பிபிசியில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சேயின் நேர்காணல் வந்து அதை பலரும் பார்த்தார்கள். ஒரு சின்னக் கேள்வி. ஜெனரல் பொன்செகா போர்க் குற்றங்களை தான் மறைக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கிறாரே என்று பிபிசி கேட்டது. கோத்தபாய அந்தக் கேள்வியால் நிலைகுலைந்து வெடித்துவிட்டார்.
He can't do that. He was the commander. That's treason. We will hang him if he do that. I am telling you. How can he betray the country. He is a liar, liar, liar.
கோபத்திலும் ஆத்திரத்திலும் பதற்றத்திலும் கோத்தபாய ஆங்கில இலக்கணத்தை மறந்துவிட்டார். We will hang him if he do that. இந்த இலக்கணப் பிழை சரித்திரத்தில் அழியா இடம்பிடித்து விட்டது.

கோத்தபாய விரைவில் ஒரு கவியாகப் போகிறார். 

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta