எனக்கு சில புது வாசகர்களிடம் இருந்து கடிதங்கள் வந்தன. ஒன்றுமே புரியவில்லை. பிறகு பார்த்தால் ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் என் எழுத்தைப் பற்றி எழுதியிருந்தார். என் எழுத்தை கவுண் அணிந்த தமிழன்னை என்று சொல்லியிருந்தார். படித்ததும் சிரித்துவிட்டேன்.
’’நண்பருடைய அறை ஒரு பழைய கட்டிடத்தின் 16வது மாடியில் இருந்தது. ஒரு ரயில்பெட்டி எப்படி காட்சியளிக்குமோ அப்படி ஒடுக்கமாக நீண்டிருந்தது. நடுவிலே ஒரு தூண் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் நின்றது. கழுத்தை இப்படியும் அப்படியும் நீட்டித்தான் டிவியை பார்க்கமுடியும். அவர் முனைவர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்தார். நாலுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசை. நடுவிலே ஒரு பலகையை செருகினால் அது ஆறுபேர் அமர்ந்து சாப்பிடும் மேசையாக மாறிவிடும்’’.
’’ஒரு சீனப் பெண் கையிலே வட்டமான வைன் கிளாசை தூக்கிப்பிடித்தபடி கூடத்தின் நடுவுக்கு வந்து நின்றார். தரையை தொடும் ஆடையில் அவர் நடந்து வந்தபோது அவர் பாதங்களை ஒருவரும் பார்க்கவில்லை. இனிமேல் பாடப்போகும் மெட்டுக்கு ஏற்ப அசைந்து வந்தார்’’.
அ.முத்துலிங்கத்தின் நாட்குறிப்புகள். பெரிய எழுத்தாளன் எழுத ஆரம்பிக்கையில் தமிழ் திடீரென நாமறியா புதிய தோற்றத்துடன் வந்து நிற்கும். இங்கே தமிழை பிரித்தானிய ஆங்கிலத்தின் நுண்மை கூடிய அங்கதத்துடன் பார்க்கிறேன். கவுன் அணிந்த தமிழன்னை
http://www.jeyamohan.in/?p=8842
சில வேளைகளில் மலை மடுவைப் பார்க்கிறது.