தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்

கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்பட்டது. இயல் விருது விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்திலும் நடைபெற்றன.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வந்த திரு கோவை ஞானிக்கும், கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தமிழின் தொன்மையை உலகுக்கு உணர்த்திய திரு ஐராவதம் மகாதேவனுக்கும் இவ்வருடத்திய இயல் விருதுகள் வழங்கப்பட்டன.

ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்தில் 17 ஜூலை அன்று நடைபெற்ற விழாவில் ஏனைய விருதுகள் வழங்கப்பட்டன.

   புனைவு விருது ஜெயமோகனுடைய கொற்றவை நாவலுக்கு வழங்கப்பட்டது.

அபுனைவு பிரிவில் இரு பரிசுகள் வழங்கப்பட்டன.
    ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துக்காக  கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்களுக்கும்
    ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் என்ற நூலை எழுதிய ஆ.சிவசுப்பிரமணியன்
    அவர்களுக்கும் இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன.

   கவிதை விருது ' பூமியை வாசிக்கும் சிறுமி' கவிதை தொகுப்புக்காக கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது.
   
  சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும்  கணிமை விருது  இந்த வருடம்  தமிழ் லினக்ஸ் கே.டி.ஈ குழுவினருக்கு வழங்கப்பட்டது.

மாணவர் பரிசுத்திட்டத்தின் கீழ் அவர் எழுதிய கட்டுரைக்காக  கிருபாளினி கிருபராஜாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் சிகாகோ பல்கலைக் கழக பேராசிரியர் சாஷ எபலிங் ( Sascha Ebeling) சிறப்புரை ஆற்றினார்.

ரொறொன்ரோ விருது விழா 17 ஜூலை 2010 வீடியோ கொழுவி:
http://www.youtube.com/watch?v=bst9BgEMrpM

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta