பாரசூட் கடிதம்

 

அன்புள்ள முத்துலிங்கம் அவர்களுக்கு, என்னுடைய மகன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, sky diving போவதற்கு என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுத்த போது, அடம்பிடித்து தான் எப்படியும் அதனை செய்து முடிப்பேன் என்று புறப்பட்டான். உலகத்து தெய்வங்களை எல்லாம் வேண்டியபடியே அந்த நாளை மிகவும் சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்தேன். வெற்றிகரமாக பரசூட்டிலிருந்து இறங்கி, அந்த நிகழ்வின் படங்களுடன் பாதி ராத்திரியில் வந்து சேர்ந்தான். உயிர் போய் வந்த மாதிரி இருந்தது. செல்ல பிள்ளைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு சீவன் போன கதைதான். இப்போ உங்களுடைய ஆசையை படித்தபோது, என்னுடைய மகன் பின்னாளில் வருத்தப்படமாட்டான் என்று ஒரு திருப்தி. இது tandem jumping அல்ல. ஒரு சில மணி நேரம் வகுப்பறை பயிற்சி, பிறகு ஜம்பிங். உங்களுக்கு தேவைப்பட்டால் அந்த தகவல்களை அனுப்புகிறேன், நீங்கள் முயற்சி செய்யலாம். ஒரு சராசரி மனிதனை விட அறிவிலும் அனுபவத்திலும் எத்தனயோ படி மேலேதான் உங்களது வரிசை, இதனையும் செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். தமயந்தி

 

சரி. நான் குதிப்பேன். என்னை ஆஸ்பத்திரியில் வந்து பாருங்கள்.

அ.மு

 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta