ArchiveApril 2011

இரண்டு பூமிகள் தேவை

 நன்றி கூறல் நாள் மறுபடியும் வந்து போனது. அமெரிக்க ஜனாதிபதி வழக்கம்போல ஒரு வான்கோழியை மன்னித்து அதற்கு விடுதலை வழங்கினார். அந்த வான்கோழி ஒருவித குற்றமும் செய்யவில்லை. குற்றம் செய்தது மனிதன்தான். அன்றிரவு மட்டும் அமெரிக்காவில் ஐந்து கோடி வான்கோழிகள் கொல்லப்பட்டு அவனுக்கு உணவாகின. இந்த விழாவுக்காக இரண்டு வான்கோழிகளை வெள்ளை மாளிகையில் பாதுகாப்பார்கள். விருந்துக்கு முன்னர் ஒன்றுக்கு ஏதாவது...

தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி

அப்பூதியடிகள் என்ற தொண்டரைப்பற்றி பெரியபுராணத்தில் படித்திருப்போம். அவர் திருநாவுக்கரசரில் அளவில்லாத பக்தி கொண்டவர். திருநாவுக்கரசரை அவர் பார்த்தது கிடையாது, கேள்விப்பட்டதுதான். ஆன்மீக குருவாக அவரை வரித்து நிறைய தானதருமங்கள் செய்து வந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் 'திருநாவுக்கரசர்' என்றே பெயர் சூட்டினார். ஆடு மாடுகளுக்கும் அதே பெயர்தான். திருநாவுக்கரசர் பெயரால் ஒரு தண்ணீர் பந்தல்...

நாளுக்கு ஒரு நன்மை

     நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன்.    அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம்...

குழையல்

   நான் சின்ன வயதாயிருந்தபோது அம்மா சமைப்பதை பார்த்திருக்கிறேன். தினமும் பத்து பேருக்கு அவர் சமைப்பார். கிணற்றடியிலிருந்து தண்ணீர் அள்ளுவதிலிருந்து சமைப்பதற்கு விறகு பொறுக்குவதுவரை எல்லாம் அவர்தான் செய்யவேண்டும்.காலை ஐந்து மணிக்கு அடுப்பு மூட்டினார் என்றால் இரவு பத்துமணிக்கு படுக்கப்போகும்வரை அது எரிந்துகொண்டே இருக்கும். அவ்வளவு நேரமும் அம்மா அடுக்களையில்தான். காலை உணவு, மதிய உணவு, மாலை...

உனக்கு எதிராக ஓடு

    [ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது மான் எழும்பும். அன்று, வேகமாக ஓடும் ஒரு சிங்கத்திலும் பார்க்க அதிவேகமாக அது ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.  ஆப்பிரிக்கக் காட்டில் சூரியன் எழும்போது சிங்கம் எழும்பும். அன்று, ஆக வேகம் குறைந்த ஒரு மானைக்காட்டிலும் அது வேகமாக ஓடவேண்டும். அல்லது உயிர் பிழைக்காது.  நீ சிங்கமோ, மானோ, சூரியன் எழும்போது எழு...

மூன்றாம் சிலுவை

   உமா வரதராஜன் எழுதிய 'மூன்றாம் சிலுவை' நாவல் வெளியான சில நாட்களிலேயே அதை நான் வாங்கிப் படித்துவிட்டேன். ஏனென்றால் அவர் எனக்கு பிடித்தமான எழுத்தாளர். பல வருடங்களுக்கு முன்பிருந்தே அவருடைய எழுத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஆகவே  புத்தகத்துக்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று நினைத்து அதை படிக்கவில்லை. அந்த வேலையை விமர்சகர்களுக்கே விட்டுவிடுகிறேன். சொமர்செட் மோம் சொல்வார்...

கடன்

என் வாழ்க்கையில் நான் பட்ட கடன்களை வரிசைப் படுத்தும்போது பல கடன்களை நான் தீர்க்கவில்லை என்பது இப்போது தெரிகிறது. சிறுவயதில் பக்கத்து மேசை நண்பனிடம் பென்சில் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்கவில்லை. கோயிலுக்கு நேர்ந்து கடவுளுக்கு இது செய்வதாக, அது செய்வதாகச் சொல்லி செய்யாமல் விட்டது. புத்தகங்கள் கடன் வாங்கிப் படித்தால் தவறாமல் திருப்பிவிடுவது என் வழக்கம். ஒரு முறை என் புத்தகத் தட்டை ஆராய்ந்தபோது...

மோசமான எழுத்து

  இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி திரைப்படம் வெளியானபோது நண்பர்களின் பரிந்துரையின் பேரில் நான் அதைப் பார்த்தேன். படத்தில் கதை சொல்லப்பட்டவிதம், பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டேயின் தோற்றப் பொருத்தம், செல்லம்மாவாக நடித்த தேவயானியின் அடக்கமான நடிப்பு, இளையராஜாவின் இசை எல்லாமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.  பாரதியின் தகப்பனாராக நடித்தவர் மிக சொற்ப நேரமே திரையில் வந்து...

நண்பரின் பரிசு

  கனடாவில் ஆண்களின் சாரசரித் தூக்க நேரம் நாளுக்கு 8 மணி 7நிமிடம்; அதே மாதிரி பெண்களின் சராசரி தூக்க நேரம் 8 மணி 18 நிமிடம். கனடா புள்ளி விவரம் இப்படித்தான் சொல்கிறது. இதை படித்த நேரத்திலிருந்து எனக்கு பெரும்  வெட்கமாகிவிட்டது. பெண்களின் நேரம் ஆண்களின் நேரத்தை முந்திக்கொண்டிருந்தது இன்னும் பெரிய அவமானமாகப் பட்டது. எப்படியும் ஆண்களின் சராசரி தூக்கநேரத்தை கூட்டுவதற்கு என்னாலான பங்களிப்பை...

படித்ததை எப்படி மறப்பது?

   நான் அடிக்கடி ஆலோசனை கேட்கும் நண்பர் என்னிடம் சொல்வார் 'அந்த எழுத்தாளர் புத்தகத்தை படிக்கவேண்டாம். அவர் மோசடிக்காரர். ஏமாற்றும் பேர்வழி' என்று. நான் ஏற்கனவே புத்தகத்தை காசு கொடுத்து வாங்கியிருப்பேன். இவர் சொன்னதற்காக படிக்காமல் இருக்கவேண்டுமா? ஒரு புத்தகத்தை படிக்காமல் அதன் தரத்தை எப்படி தீர்மானிப்பது. நண்பர் சொல்கிறார் ஆசிரியர் கெட்டவர் என்றால் அவருடைய புத்தகமும்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta