அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே" "வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்" – அ.முத்துலிங்கம் இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால...
நெடும் பயணம்
எட்டு வருடங்களுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். ஒரு கலந்துரையாடலில் பாலஸ்தீனியர் ஒருவரைச் சந்தித்தேன். அதுதான் நான் முதல் தடவையாக ஒரு பாலஸ்தீனியரைச் சந்தித்தது. நான் இலங்கை என்று சொன்னதும் எங்களை அறியாமல் ஒரு சகோதர உணர்வு உடனேயே உண்டானது. ஒரு விதவை இன்னொரு விதவையை சந்திப்பதுபோல. ஓர் அனாதை இன்னொரு அனாதையை சந்திப்பதுபோல. ஒரு நாடிழந்தவன் இன்னொரு நாடிழந்தவனை சந்திப்பதுபோல. எங்கள் துயரத்தை அவர்கள்...
பேனாவும் துப்பாக்கியும்
அவருக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன. அவர் பேனாவைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காரணத்தினால் வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டிருந்தார். அவர் கால்களும் ஓயவில்லை. அவர் பேனாவும் ஓயவில்லை. எஸ். சிவநாயகத்தை நினைக்கும்போது பவளமல்லிகை ஞாபகத்துக்கு வருகிறது. சிவநாயம் வீடு கொக்குவிலில் எங்கள் வீட்டுக்கு சில வீடுகள் தள்ளி இருந்தது. சிறுவயதில் அந்த வீட்டுக்கு அதிகாலையில் போவேன் நிலத்திலே விழுந்துகிடக்கும் பவள மல்லிகை...
ஒரேயொரு புத்தகம்
இப்பொழுதெல்லாம் என்னைச் சந்திக்கும் நண்பர்கள் 'இம்முறை எத்தனை புத்தகங்கள் போடுகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். பணக்கார வீட்டுக் கல்யாணத்துக்கு ஒரேயொரு நகைபோட்டுக்கொண்டு போன பெண்போல இதற்கு மறுமொழி சொல்ல எனக்கு கூச்சமாக இருக்கிறது. முன்னால் நிறையப் பேர் ஓடுகிறார்கள். பின்னால் திரும்பிப் பார்த்தால் ஒருவருமே இல்லை. என்ன செய்வது? என்னால் வேகமாக எழுதவே முடியவில்லை. இன்றைக்கும் ஒவ்வொரு எழுத்தாக...
விஷ்ணுபுரம் இலக்கிய விருது
ஆ.மாதவனின் படைப்புகளில் நான் முதலில் படித்தது 'கிருஷ்ணப் பருந்து' நாவலைத்தான். அது இருபது வருடங்களுக்கு முன் என நினைக்கிறேன். நான் அப்பொழுது பாகிஸ்தானின் பெஷவார் நகரத்தில் வேலையாக இருந்தேன். இந்தியாவில் இருந்து ஒரு நண்பர் நான் கேட்டதன் பேரில் இந்த நாவலை வாங்கி எனக்காக அனுப்பியிருந்தார். அது நீண்டநாட்களுக்கு பிறகு நனைந்து மெலிந்து உருமாறி என்னிடம் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து வரும் பார்சல்கள்...
அற்புத விளக்கு
அமெரிக்காவில் கேப்கொட் என்ற சிறிய நகரத்தில் ஒரு புத்தகக்கடை உண்டு. சமயம் கிடைக்கும்போது நான் அங்கு போவேன். அந்தக் கடையின் உரிமையாளர் ஒரு பெண்மணி. மற்றைய புத்தகக் கடைகளுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கடை நடத்தும் பெண்மணி நிறைய வாசித்தவர். இலக்கியத் தரமான புத்தகங்களே அங்கே கிடைக்கும். அதுமட்டுமல்ல அங்கே விற்கும் புத்தகங்கள் அனைத்தையும் அவர் ஏறக்குறைய படித்திருப்பார்...
புகைப்படம் எங்கே?
பலர் கேட்டு எழுதியிருந்தார்கள் புகைப்படம் எங்கே என்று.
இதோ புகைப்படத்தின் கொழுவி.
பக்கம் 28
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!†ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா’வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார். பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார். ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும்...
அ.முத்துலிங்கம் நேர்காணல் – தீராநதி
ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம் By: கடற்கரய் Courtesy: தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007 Article Tools E-mail this article Printer friendly version Comments [ – ] Text Size [ + ] சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று...
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் (2009-05-30) ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து நடந்த உரையாடல் அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய ...
Recent Comments