எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்? கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன். பிரபா பார்வையற்றவர். அவருடைய கனவில் அம்மா வருகிறார். அவருடன் படித்த பள்ளிக்கூட நண்பர்கள் வருகிறார்கள். அவருக்கு கண்பார்வை போனது ஏழுவயதில் என்பதால் அவர் காட்சிகள் எல்லாம் ஏழுவயதோடு உறைந்து...
ஆப்பிரிக்காவில் அரை நாள்
முப்பது வருடங்களுக்கு முன்பு British Caledonian என்று ஒரு விமான சேவை இருந்தது. இதுதான் என்னை முதன்முதல் ஆப்பிரிக்காவிற்குக் காவிச் சென்ற விமானம். இந்த விமானம் சியாரா லியோனின் வெளி எல்லைக்குள் 350 மைல் வேகத்தில் நுழைந்தபோது சூரியன் தன் அன்றைய வேலையை முடித்துவிட்டான். நீலமான முகில்கள் ஒன்றையொன்று சத்தம் இல்லாமல் இடித்துக் கொண்ட அந்த மாலை வேளையில் அவற்றைக் கிழித்துக்கொண்டு பிளேன் கீழே...
உடலழகன் போட்டி
உடலழகன் போட்டிக்கு போவதென்பது முடிவாகிவிட்டது. இதற்கு முன்னர் நான் அப்படியான ஒரு போட்டியை பார்க்க எங்கேயும் போனதில்லை. பிரச்சினை என்னவென்றால் நான் ரொறொன்ரோவில் இருந்தேன், போட்டி 350 கி.மீட்டர் தூரத்திலிருந்த ஒட்டாவாவில் நடந்தது. நான் மனைவியிடம் போட்டி எத்தனை மணிக்கு ஆரம்பம் என்று கேட்டேன். அவர் 'காலை ஒன்பது மணி, பழைய நேரம் பத்து மணி' என்றார். ஒக்டோபர் மாதத்து...
அருமையான பாதாளம்
இம்முறை நான் அமெரிக்காவுக்கு சென்றபோது ஒரு பிரம்மாண்டமான நூலகத்துக்கு போனேன். அங்கே அபூர்வமான நூல்கள் எல்லாம் இருந்தன. எனக்குப் பிடித்த அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன். அவர் எழுதிய அத்தனை புத்தகங்களும் இந்த நூலகத்தில் பூர்வ அட்டைகளுடன் கிடைத்தன. அமெரிக்க இலக்கியத்தின் ஆரம்பமே மார்க் ட்வெய்ன் என்று சொல்வார்கள். இவருக்கு பின்னால் வந்த அமெரிக்க எழுத்தாளர்களில் எவரும் இவரைத் தாண்டவில்லை...
நான் பாடகன் ஆனது
என் பள்ளிப் பருவத்தில் பல பாடசாலைகளில். பல வகுப்புகளில், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறேன். பல மாணவர்களை பரிச்சயம் செய்துகொண்டு பல வாங்குகளைத் தேய்த்திருக்கிறேன். பலவகைப்பட்ட வண்ண மைகளில் தோய்த்து தோய்த்து தொட்டெழுதும் பேனாவினால் ஊறும் தாள் கொப்பிகளை நிரப்பியிருக்கிறேன். ஊறாமல் தேங்கி நிற்கும் எழுத்துக்களை ஒற்றுத்தாள்களில் ஒற்றி எடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு கிளாஸை மட்டும் என்னால்...
பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும்
இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய...
விட்டுப்போச்சுது
[கலாநிதி செவாலியர் அடைக்கலமுத்து ஐயா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ வந்திருந்தபோது அவரைச் சென்று சந்தித்தேன். அந்தச் சந்திப்பு எனக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஐயா எழுதிய 'இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள்' நூலினை படித்து அனுபவித்தேன். சென்ற மாதம் அவர் இறந்துபோனது தமிழுக்கு பெரும் இழப்பு. அவர் ஞாபகமாக இந்தப் பதிவு.] அடைக்கலமுத்து...
நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு
நான் எங்கு போவதானாலும் குறித்த நேரத்துக்குப் போய்விடுவேன். எனக்கு ஒருவரையும் காக்க வைத்துப் பழக்கமில்லை. ஆனபடியால் கனடா விமான நிலையத்துக்கு நான் ஐந்து நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். அன்று பார்த்து விமானம் 25 நிமிடங்கள் முன்னதாக வந்து என்னை லேட்டாக்கிவிட்டது. பார்த்தால் அங்கே ஏற்கனவே பெரும்கூட்டம் திரண்டிருந்தது. நான் நடிகை பத்மினியை நேரே கண்டவன் அல்ல. சினிமாவில்...
சட்டவிரோதமான காரியம்
பல வருடங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் வேலை செய்தார். அவர் ஒரு போர்த்துக்கீய பெண்ணை மணமுடித்து. அந்த நாட்டிலேயே தங்கிவிட்டவர். அப்பொழுது ஆப்கானிஸ்தான் பிரிவில் என்னுடன் பெஷாவாரில் வேலை பார்த்தார். அவர் பங்களுர்க்காரர் ஆகையால் கொங்கணி என்று ஒரு பாஷை இருக்கிறதாம், அதை பேசுவார். ஆங்கிலத்தையும் அதே மாதிரி பேசுவார். சில நிமிடங்களும், முதல் நாலு வார்த்தைகளும் தவறிய பிறகுதான் அவர் ஆங்கிலம்...
ஐந்து பணத்துக்கு ஒரு குதிரை
என்னைப் பார்த்து ஒரு பெண் கண்ணடித்தாள். இது நடந்தது கனடாவில் ஒரு பலசரக்குக் கடையில். நான் ஓர் உணவுப் பக்கற்றை தூக்கி வைத்து இது பழசா? இதை வாங்கலாமா? என்று விசாரித்தேன். அவள் கீழ்ப்படிவதற்கு பழக்கப்பட்ட ஒரு விற்பனைப் பெண். ஒரு மயிலின் தலைபோல தானாக ஆடுகிற சிறய தலை அவளுக்கு. என்னை உற்றுப் பார்த்தாள். என்னிடம் அவளுக்கு இரக்கம் உண்டாகியிருக்கலாம். உடம்பின் சகல அங்கங்களையும் ஒடுக்கி, விறைப்பாக வைத்துக்...
Recent Comments