பல் வேலைக்கு வசந்த காலம் சிறந்த காலம். பல் வைத்தியரின் வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த தட்டையான பெண் தட்டையான சிரிப்புடன் என்னை வரவேற்றாள். என் பெயர் நோயாளிகள் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு என்னை உட்காரச் சொன்னாள். என்னுடைய முறைக்காக வழக்கம்போல காத்திருக்கவேண்டும். யாரோ படித்துவிட்டு போன அன்றைய பேப்பர் அங்கே கிடந்தது. அதைக் கையில் தூக்கிக்கொண்டு நோயாளிகள் தங்கும் அறையை நோக்கி...
மூன்று குருட்டு எலி
இரவுகள் ஒன்றிரண்டு மணித்தியாலங்களை பகலிடம் இருந்து திருடிக்கொள்ளும் பனிக்காலம். ஓர் இரவு தொலைபேசி வந்தது. நண்பர் தமிழ் மழலைப் பாடல்கள் (nursery rhymes) புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை. மனைவியைக் கேட்டேன். எல்லாம் தெரிந்த அவளுக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் நாங்கள் மூவரும் கனடாவின் கடைகளில் ஏறி இறங்கினோம். ஆங்கிலத்தில் nursery rhymes இருந்தன. ஆனால் தமிழில் அப்படி...
ஒன்றுக்கும் உதவாதவன்
எனக்குத் தெரியும், என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு தெரியும், என் நண்பர்களுக்கும் தெரியும். நான் அடிக்கடி தொலைந்து போகிறவன். வாழ்க்கையில் ஒன்றிரண்டு முறை தொலைந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு தொழிலாகச் செய்வது நான்தான் என நினைக்கிறேன். ஒன்பது வயதாயிருந்தபோது கிராமத்தில் பக்கத்துக் கடைக்கு ஏதோ வாங்கப் போன நான் திரும்பவும் வீட்டுக்கு வரவில்லை. என்னைத் தேடி ஆட்கள் புறப்பட்டு ஒன்றரை...
ட்யூலிப் பூ
சிறுவயதிலே நான் முதலில் அறிந்த வெளிநாட்டுப் பூ ட்யூலிப்தான். அதன் அழகோ நிறமோ மணமோ எனக்கு ஒன்றுமே தெரியாது. எங்களுக்கு பாடப் புத்தகமாக The Black Tulip என்ற நாவலை யாரோ ஓர் ஆசிரியர் வைத்துவிட்டார். ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து எப்படித்தான் இந்த நாவலை அவர் கண்டுபிடித்தாரோ தெரியாது. ஆங்கிலத்தை முழுமனதோடு வெறுக்க வைத்தது அந்தப் புத்தகம்தான். எல்லா வார்த்தைகளும் தனித்தனியாக தெரிந்த வார்தைகளாக இருக்கும்...
ராமானுஜம் எழுதியது
த்ரிஷாவும் திருக்குறிப்பு நாயனாரும் தமிழ் இலக்கிய வட்டாரத்தில் 'வாசிப்பு இன்பம்' என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க ,ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.கச்சேரிகளைக் குறிப்பிடும் போது 'களைகட்டி விட்டது என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும்...
எல்லோர்க்கும் பெய்யும் மழை
[பல வருடங்களுக்கு முன்னர் ஒரு கட்டுரை எழுதினேன். அதை ஆனந்த விகடன் பிரசுரித்திருந்தது. எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் எங்கேயிருந்து எழுதினேன் என்பது மறந்துபோனது. சமீபத்தில் ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் அதை மீண்டும் வெளியிட்டிருந்தது. படித்து நான் அதிசயித்தேன். முற்றாக மறந்துவிட்டிருந்தேன். அதை திரும்பவும் இங்கே வெளியிடும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே வெளியிடுகிறேன். என் நண்பர் , மனநல...
காசு இல்லை
திங்கட்கிழமை என்றால் லொத்தரி டிக்கட் வாங்கும் நாள். அவர் தன் தயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். அங்கே தாயார் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு டிக்கெட்டுகளை பார்வையிட்டுவிட்டு இறுதியில் ஆறு இலக்கங்களை தெரிவு செய்வார். நண்பர் பொறுமையாக காத்திருப்பார். தெரிவு முடிந்ததும் காசை கொடுத்து, டிக்கட்டை வாங்கி தாயாரின் கைப்பையை திறந்து அதற்குள் வைத்து கிளிக் என்று சத்தம் வர பூட்டி...
சொற்கோவை – 2
தேவையான சொற்கோவை என்றொரு பதிவு ஏற்கனவே (2010-04-22) பதியப்பட்டிருக்கிறது. இப்பொழுது பெருப்பிக்கப்பட்ட சொற்கோவை வந்திருக்கிறது. இன்னும் வரும். சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகத்தை படித்து முடித்தேன். அப்படியே கட்டிப் போட்டது எனச் சொல்லலாம்; அவ்வளவு சிறப்பாக இருந்தது. ஆனால் சிலவொரு இடங்களில் சாதாரண ஆங்கில வார்த்தைகள்கூட அப்படியே வந்திருந்தன. டூர், பர்னிச்சர், செமஸ்டர், நார்மல், சில்வர், கிரேட்...
ஆயுளைக் கூட்டுவது
என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் இடையில் என்னால் சண்டை மூண்டது. விசயம் சின்னதுதான். புது வருடம் பிறந்தபோது நண்பர் எனக்கொரு புத்தகம் பரிசு தர விரும்பினார். அவரும் மனைவியும் புத்தகக் கடைக்கு போனார்கள். நண்பர் தெரிவு செய்த புத்தகம் மனைவிக்கு பிடிக்கவில்லை, மனைவி தெரிவு செய்தது நண்பருக்கு பிடிக்கவில்லை. நண்பர் தன்னுடைய தெரிவைத்தான் கொடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். மனைவி அது தக்க புத்தகம்...
Recent Comments