தமிழ் இலக்கியத் தோட்டம்
இயல்விருது– 2011
கனடா தமிழ்இலக்கியத்தோட்டத்தின்இயல்விருதுவிழாவழமைபோலரொறொன்ரோவில் யூன் 18ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறைவாழ்நாள்இலக்கியசாதனைக்கானஇயல்விருது எஸ்.பொ என்று அறியப்படும் திரு எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயல் விருதை வழங்க எஸ்.பொ பெற்றுக்கொண்டார்.
இயல்விருதைதொடர்ந்துமற்றைய விருதுகளும்வழங்கப்பட்டன:
புனைவுஇலக்கியப்பிரிவில்'பதுங்கு குழி' நாவலுக்காக பொ. கருணாகரமூர்த்திக்கும், ’காவல் கோட்டம்’ நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், அபுனைவுஇலக்கியப்பிரிவில்'பண்பாட்டுப் பொற்கனிகள்’ நூலுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ நூலுக்கு சு.தியடோர் பாஸ்கரனுக்கும், கவிதைப் பிரிவில் ’இருள் யாழி’ தொகுப்புக்காக திருமாவளவனுக்கும், ’அதீதத்தின் ருசி’ தொகுப்புக்காக மனுஷ்யபுத்திரனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட ’கணிமை விருது’ முத்து நெடுமாறனுக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற சுரா 80 விழாவில் வழங்கப்பட்டது.
மாணவர் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவர் சிரோதி இராமச்சந்திரன்.
http://www.jeyamohan.in/?p=16133
http://www.jeyamohan.in/?p=16156
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4468