ArchiveJuly 2011

மாம்பழம்

அந்த வருடம் எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் எக்கச்சக்கமாக காய்த்து தொங்கின. ஐயாவும், அம்மாவும் தங்கள் வாழ்நாளில் மரங்கள் அப்படி காய்த்து கொட்டியதை கண்ணால் கண்டதில்லை என்று சொன்னார்கள். எங்கள் வளவில் பலவிதமான மாமரங்கள் நின்றன. இப்பொழுதுபோல அப்போதெல்லாம்  ஒட்டுமாங்கன்றுகள் கிடையாது. மரங்களின் பெயர்களோ புதுவகையாக இருக்கும். ’ஆராய்ச்சி’ என்று ஒரு மாமரம். அதன் காய்கள் பனங்காய்...

புதிய வார்த்தை

எம். ஏ. நுஃமானிடமிருந்து ஒரு மின்னஞ்சல் இன்று வந்தது. பேராசிரியர் கா. சிவத்தம்பி காலமானார். கடந்த 25 வருடங்களாக நான் அவரைக் காணவில்லை. அவருடன் தொலைபேசியில் உரையாடி 15 வருடங்கள் ஓடிவிட்டன. கடைசிக் கடிதம் எழுதி 10 வருடம் இருக்கும். ஒரு காலத்தில் எவ்வளவு அணுக்கமாக அவருடன் இருந்தேன் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.   காலை ஆறு மணி இருக்கும். ஒடுக்கமான மாடிப்படிகளில் ஏறி ஓர் அறையின் கதவை...

பழுப்பு இனிப்பு

  எங்கள் வீட்டு குழாயில் நீர் கொட்டியது. அதுதானே அதன் இயல்பு எனச் சிலர் நினைக்கலாம்., ஆனால் குழாயை இறுக்கிப் பூட்டிய பின்னரும் அது ஒழுகியது. மணிக்கூடு நேரத்தை அளப்பதுபோல குழாயின் வாயிலிருந்து தண்ணீர் டக் டக்கென்ற ஒலியுடன் விழுந்தது.   ரொறொன்ரோவில் மஞ்சள் பக்க புத்தகத்தை வீடு வீடாக இலவசமாக தந்திருப்பார்கள். நான் அப்படிக் கிடைத்த புத்தகத்தை திறந்து குழாய் திருத்துபவரை அழைப்பதற்காக...

கையெழுத்து

இன்று, 2 ஜூலை 2011, ஏர்னெஸ்ட் ஹெமிங்வே இறந்து 50 ஆண்டுகள் கழிந்துவிட்டன. உலகத்தின் பல பாகங்களிலும் இருந்து உலகப் பிரபலமான இந்த அமெரிக்க எழுத்தாளரை பல எழுத்தாளர்களும் வாசகர்களும் நினைவுகூர்வார்கள்.    ஹெமிங்வே அவருடைய கடைசிக் காலங்களில் அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் கெச்சம் என்ற சிறு நகரத்தில் வாழ்ந்தார். ஒருநாள் அதிகாலை அவருடைய துப்பாக்கியுடன் ஒருவித காரணமும் இன்றி அவர் நின்றதைக் கண்ட...

அம்மாவின் பெயர்

                   நான் அனுப்பிய செக் திரும்பி வந்தது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என் வாழ்நாளில் நான் எழுதிய ஆயிரக்கணக்கான காசோலைகளில் ஒன்றுகூட திரும்பியது கிடையாது. இது எனக்கு பெரும் அவமானமாகப் பட்டது. நண்பர் ஏன் சொன்னோம் என்பதுபோல எனக்கு முன் மியூசியத்தில் நிறுத்திவைத்த உருவம்போல நின்றார்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta