அண்டன் செக்கோவின் கண்ணாடி சிறுகதை 1600 வார்த்தைகள்தான். புதுமைப் பித்தனின் மகாமசானம் சிறுகதை 1000 வார்த்தைகள். இவை வார்த்தைகளின் கனதியாலும் வசனங்களின் அமைப்பாலும் சொன்ன விசயத்தினாலு,ம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் படைத்த அன்று கிடைத்த அதே புதுமையுடன் இன்றைக்கும் இருக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. உங்கள் பார்வையை மாற்றுகின்றன. உலகத்தின் ஆகச் சிறிய சிறுகதை என்று ஒன்றைச் சொல்வார்கள். மூன்றே மூன்று...
குறும்படம்
ஒருமுறை நான் பொஸ்டனில் இருந்தபோது வழக்கம்போல காலை குளியலறையில் முகத்தில் நுரை தடவிவிட்டு, சவரம் செய்வதற்கு முன்னர் ஒரு நிமிடம் என் முகத்தை நானே கண்ணாடியில் உற்று நோக்கினேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தேன். அந்தக் கணம் என் மூளையில் ஏதோ ஒன்று உதித்தது. எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு சின்னக் கதை. ஒன்றரைப் பக்கம்தான். அந்த நிமிடத்தில் அதை எழுதி முடித்தேன். இதிலென்ன...
இன்னும் சிறிது தூரம்தான்
இரண்டு புறநானூறுப் பாடல்கள் நினைவுக்கு வரும்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. நான் மருத்துவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவ அறைகளில் காத்திருந்த மணித்தியாலங்களின் கூட்டுத்தொகை பத்து முழு நாட்களுக்கு சமமாக இருக்கும். அப்பொழுது அந்த தம்பதியினர் வந்தனர். இருவரும் முதியவர்கள். ஆணுக்கு 70 வயதுக்கு மேலே; பெண் கொஞ்சம் இளமையானவராகத் தோன்றினார். அந்த மனிதர் அவர்...
காலத்தை முந்தியவர்
நான் படித்த அவருடைய சிறுகதையின் பெயர் ’மைசூர் ராசா.’ அதுதான் அவர் எழுதிய முதல் சிறுகதையோ தெரியாது. ஆனால் நான் முதலில் படித்தது அதைத்தான். பத்து வருடத்திற்கு முன்னர் என்று நினைக்கிறேன். அசிரத்தையாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதை எழுதியவரின் பெயரை நான் வேறு எங்கேயும் கண்டதில்லை. ஒரு காலத்தில் இலங்கையில் பருப்பு தட்டுப்பாடு இருந்தது. செல்வந்தர் வீட்டில் மட்டுமே அது அகப்படும்...
Recent Comments