ArchiveDecember 2011

புளிக்கவைத்த அப்பம்

இப்படித்தான் நடந்தது. யூதப் பெண்மணி ஒருவர் எங்களை மாலை விருந்துக்கு அழைத்திருந்தார். இதிலே என்ன அதிசயம். நான் பலவிதமான கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டு சென்றிருக்கிறேன். விருந்துகளும் அனுபவித்திருக்கிறேன். இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் சகல பண்டிகைகளிலும் விருந்துகளிலும் பங்கேற்றிருக்கிறேன். யூத வீட்டுக்கு மட்டும் போனது கிடையாது. பெரும் எதிர்பார்ப்பில் நானும் மனைவியும்...

வெள்ளிக்கிழமை

பசிபிக் சமுத்திரத்தில் சமோவா என்ற மிகச் சின்னத் தீவு ஒன்று இருக்கிறது. சர்வதேச தேதிக் கோடு இதற்கு மிகச் சமீபமாகச் செல்கிறது. கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் கோட்டில் இது அமெரிக்கா பக்கம் இருக்கிறது. இந்தக் கோட்டை தாண்டும்போது ஒரு நாள் கூடுகிறது; அல்லது குறைகிறது. அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் ஒருவர் இந்தக் கோட்டை தாண்டியதும் ஒரு முழு நாளை கடந்துவிடுவார்.   இந்த ஆண்டு...

சரித்திரத்தில் நிற்கும் அறை

இந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ம் தேதி வந்தபோது நான் பெரிதாக எதிர்பார்த்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு பத்திரிகை ஏதோ முணுமுணுத்தது. வானொலியோ தொலைக்காட்சியோ மூச்சுவிடவில்லை. வார இதழ்கள் மௌனம் சாதித்தன. 17ம் தேதி வந்தது போலவே போய்விட்டது. என்ன மகத்தான தேதி? மனித சரித்திரத்தில் நிலைத்து நிற்கவேண்டிய முக்கியமான நாள் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த வருடத்தின் அதி முக்கியமான நிகழ்வு என்னவென்று...

அடுத்து என்ன?

  இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பாகிஸ்தானில் வேலை செய்த காலத்தில் முதன்முதலாக செல்பேசி அங்கே அறிமுகப்படுத்தப் பட்டது. ஒன்றின் விலை ஆயிரம் டொலருக்கு மேலே. என்னிடம் ஒன்றிருந்தது. இடது கையால் தூக்க முடியாது, அத்தனை பாரம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை மின்னேற்ற வேண்டும். அப்படியும் பேசும்போது அடிக்கடி தொடர்பு அறுந்துவிடும். சில இடங்களில் இருந்து எவ்வளவு முயன்றாலும் தொடர்பு கிடைக்காது. அது...

இலவசம்

  பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் ரொறொன்ரோவின் பிரபலமான பல்கடை அங்காடி ஒன்றுக்குச் சென்றேன். நண்பர் தேடிப்போன பொருள் கிடைக்கவில்லை. உடனே திரும்ப வேண்டியதுதானே. நண்பர் விளம்பரப் பலகையில் கழிவு விலையில் விற்கப்படும் சாமான்களின் விவரங்களைப் படித்து அதனால் கவரப் பட்டார். ’இரண்டு காட்டு அரிசி பக்கெட் வாங்கினால் ஒரு கத்தரிக்கோல் இலவசம்’ என்றிருந்தது. யோசிக்காமலே இரண்டு பக்கெட்...

விஷ்ணுபுரம் விருது 2011

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta