விஷ்ணுபுரம் விருது 2011

அன்புடையீர்!


வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.


கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் ஆ.மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.


2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள். விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். 


தாங்கள் வருகை தந்து விழாவினைச் சிறப்பிப்பதோடு, விழா குறித்த செய்தியினை தங்களது பத்திரிகை / தொலைக்காட்சி / வலைதளம் / முகநூல்  வெளியிடச் செய்து உதவுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி.


மிக்க அன்புடன்,


செல்வேந்திரன்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
900 393 1234

 


 

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta