இம்முறையும் நான் மொன்ரானா போனபோது ஒரு சம்பவம் நடந்தது. சுப்பர்மார்க்கட்டில் சில சாமான்கள் வாங்கி அவற்றை ஓடும் பெல்ட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். காசாளர் பெண்மணி படு வேகமாக ஒவ்வொரு பொருளாக எடுத்து சிவப்புக் கோட்டில் காட்டி விலையை பதிந்துகொண்டு வந்தார். அவருக்கு ஓர் ஐம்பது வயது இருக்கும். அவர் பொருளை எடுத்து பதிந்த விதம் அவரை அனுபவப் பட்டவராகக் காட்டியது. வேகமாக வேலைசெய்த அவருடைய கைகள்...
மனுஷ்யபுத்திரனின் கேள்வி.
சமீபத்தில் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்னிடம் உயிர்மை பத்திரிகைக்காக ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி இதுதான். புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? என்னுடைய பதில் இது. பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது...
காயத்ரி சித்தார்த்
பண்புடன் என்று ஒரு மின்னிதழ்.(www.panbudan.com). இரண்டு நாள் முந்தித்தான் அதுபற்றி அறிந்துகொண்டேன். அதில் நல்ல தரமான கதைகள் கட்டுரைகள், கவிதைகள் நூல்மதிப்பீடுகள் என்று அனைத்துமே படிக்கக்கூடியதாக இருந்தன. மதிப்புமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்கள். காயத்ரி சித்தார்த் எழுதிய கட்டுரையை இரண்டு தடவை படித்தேன். அவர் எழுதியிருந்த ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அதை உங்களுடன்...
மறதி
கதவு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் செல்லவேண்டும் என்றால் கதவை திறக்க வேண்டும். கதவை திறக்கவேண்டும் என்றால் திறப்பை துவாரத்தினுள் நுழைக்கவேண்டும். அதற்கு முதலில் திறப்பை கண்டுபிடிக்கவேண்டும். அது மனைவியின் கைப்பையில் கிடந்தது. மனைவியின் அதே கைப்பையில் வேறு 256 பொருட்களும் வசித்தன. மனைவி கைப்பையை வாசலில் கவிழ்த்து கொட்டி திறப்பைத் தேடத் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம்...
இயல் விருது 2011
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது 2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி...
கடிதம்
அன்பு நண்பர் ஒருவரின் கடிதம் அன்புத் தோழர் அ முத்துலிங்கம் அவர்களுக்கு இன்று அதிகாலை என்னை அலைபேசியில் அழைத்த எனது நண்பர் இளம் தோழர் மோகன் (காஞ்சிபுரம்) அவர்கள் அந்த ஆள் ஒரு கொலைகாரர் தான் சந்தேகமே இல்லை என்று திடு திப்பென்று சொன்னார். அவரோடு நான் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு…..இதர எத்தனையோ விஷயங்களைப் பேசுபவன் என்பதால் மேற்படி கிரிமினல் குற்றத்தைச் செய்திருப்பவர் எந்தத்...
விகடன்
இந்த வார விகடனில் எழுத்தாளர் ராஜு முருகன் எழுதியது. இதை நண்பர் வேல்முருகன் எனக்கு பொஸ்டனில் இருந்து அனுப்பியிருக்கிறார். நன்றி. அ.முத்துலிங்கத்தின் கதைகள் எனக்குப் புலம்பெயர்வின் சிலிர்க்கச் செய்யும் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருக்கின்றன. தாய் நிலத்தின் தீராத நினைவுகளைச் சதா மீட்டிக் கொண்டே, இளைப்பாற ஒரு நிழல் இன்றி, சிறகுகள் வலிக்க வலிக்கப் பறந்து கொண்டே இருக்கும் ஓர் ஏதிலிப் பறவை யின்...
அறிவிப்பு 3
அன்பின் நண்பருக்கு, வணக்கம். கீழுள்ள அறிவித்தலை உங்கள் வலைத்தளத்தில் இட இயலுமா? என்றும் அன்புடன், எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா 2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி...
அறிவிப்பு 2
உயிர்மை பதிப்பகம் சார்பாக என்னுடைய நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ வெளியீட்டு விழா சென்னையில் 1.1.2012 அன்று நடைபெற்றது. திரு அசோகமித்திரன் வெளியிட திரு சு.கி.ஜெயகரன் நூலை பெற்றுக்கொண்டார். திரு எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் கிடைக்கும். கீழே வருவது நூலின் சமர்ப்பணமும் முன்னுரையும். ...
அறிவிப்பு
அ.முத்துலிங்கம் அவர்களுக்கு, இதை தங்கள் இணையத் தளத்தில் அறிவிப்பாகப் போட முடிந்தால் உதவியாக இருக்கும்.
அன்புடன்
நவீன்
Recent Comments