ArchiveFebruary 2012

முனைவர் ப.சரவணன்

முனைவர் ப.சரவணனுக்கு என் நன்றி. நான் என்ன எழுதினாலும் அதைப் படித்துவிட்டு முதலில் கருத்து தெரிவிப்பது அவர்தான். அவரைச் சந்தித்ததில்லை. இதுவரை பேசியதும் இல்லை. இந்தியாடுடேயில் வந்ததை எங்கோ சென்று ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார். கனடாவில் இந்தியாடுடே வாங்கமுடியாது. 300,000 தமிழர்கள் வசிக்கும் நாட்டுக்கு 50 பிரதிகள் வருகின்றன. நான் எப்பொழுது போய் கேட்டாலும் கடைக்காரர் முடிந்துவிட்டது என்று...

ரயில் போய்விடும்

நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி.. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்து கணக்காளர். கிராமத்தில் என்ன கணக்கு பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்து வைப்பார். நான் போனபோது வாயில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம்...

தாய்மொழி நாள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது.   இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழ் உலக மொழிகளில் 15வது...

புகழுமாறு ஒன்றறியேன்

நைரோபியில் Isak Dinesen வாழ்ந்த வீட்டை அருங்காட்சியமாக மாற்றியிருக்கிறார்கள். நான் அங்கே வாழ்ந்த நாட்களில் இந்த மியூசியத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். ஐஸக் டெனிஸனின் படுக்கை அறையையும், அவர் எழுதிய மேசையையும், உட்கார்ந்த கதிரையையும், எழுதிய பேனையயும், படித்த புத்தகங்களையும் அவர்கள் பாதுகாத்தார்கள். நான் அவருடைய ‘Out of Africa’ நாவலை படித்திருந்தேன். நாவலைப் படித்தபோது பலதடவை இவருக்கு...

ஆஸ்கார் விருது

  அன்பின் முத்துலிங்கம் அவர்களுக்கு,       தமிழ் ஸ்டுடியோ நடத்தும், ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது படங்களின் திரையிடல் நிகழ்வை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். வாய்ப்பிருந்தால் அதனை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும். குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. எனவே அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைகிறேன். நன்றி.         ...

தீர்வு

அடகு வைப்பதற்கு வீட்டிலே ஒன்றும் இல்லாவிட்டால், எல்லா பெறுமதியான பொருள்களும் முடிந்துவிட்ட நிலையில், குறுக்கு மூளை அப்பா அவனை அடகு வைப்பார். அவன் பெயர் உக்கோ. ஏப்ரல்  மாதம் வரும்போது அவன் தயாராகிவிடுவான். ஆப்பிரிக்காவில் ஏப்ரல் மாதக் கடைசியில்தான் மழைக்காலம் ஆரம்பமாகும். அடகு வைத்தால் மூன்று நான்கு மாதம் கழித்துதான் அவன் மீட்கப்படுவான். ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து தன் உடுப்புகளை அதற்குள்...

பரிசு அறிவித்தல்

 அமெரிக்கா உளவாளி: போட்டி        திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும்  சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.  இவ்வாண்டு பரிசு பெற்ற  நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’.            தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற...

நான் காரை நிறுத்திய இடத்துக்குப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் நிறுத்தினார். நான் கதவை திறந்து இறங்கிய அதே சமயம் அவரும் இறங்கினார். நான் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கியதும் அவரும் நடந்தார். இருவரும் சமமான வேகத்தில் சமமான தூரத்தில் சமமான இடைவெளியில் நடந்தோம். வங்கியின் வாசலை அடைந்ததும் ரேஸ் குதிரை கடைசி மூச்சில் தலையை நீட்டுவதுபோல ஓர் அடி சட்டென்று முன்னே வைத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டார்...

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ம் ஆண்டுக்கான இயல் விருதை ஏற்கனவே  அறிவித்திருந்தது. ‘உயிர்மை’ ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 2012, பிப்ரவரி 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டுரை.

 

 

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் உரை

 

கடிதம்

திரு செல்வா முக்கியமான கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். இந்த தகவலைப் பார்த்து நாங்கள் கொஞ்சம் பூரிப்படையலாம்.     அன்புள்ள முத்துலிங்கம் ஐயா, வணக்கம். நீங்கள் நலமா? சொல்வனம் இணைய இதழில் "ஆற்றேன் அடியேன்" என்னும் உங்கள் எழுத்தைப் படித்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சியாய்இருந்தாலும், நீங்கள் சொல்லியது (வருத்தப்பட்டு சொல்லியது)...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta