திரு செல்வா முக்கியமான கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். இந்த தகவலைப் பார்த்து நாங்கள் கொஞ்சம் பூரிப்படையலாம்.
அன்புள்ள முத்துலிங்கம் ஐயா,
வணக்கம். நீங்கள் நலமா?
சொல்வனம் இணைய இதழில் "ஆற்றேன் அடியேன்" என்னும் உங்கள் எழுத்தைப் படித்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சியாய்இருந்தாலும், நீங்கள் சொல்லியது (வருத்தப்பட்டு சொல்லியது) பெரும்பாலும் உண்மையே என்றாலும், அதில் ஒரு சிறு திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை எண்ணிக்கைகள்"official count", ஆனால் "200 எழுத்துகளுக்கும் மேல்" உள்ள கட்டுரைகள் என்னும் எண்ணிக்கை வேறானது. 200 எழுத்துகளில் ஒரு கட்டுரை என்பது வெறும் ஓரிரண்டு வரிகள் கூட இல்லாத கட்டுரை. நீங்கள் சுட்டும் இந்தி மொழியில்மே 2010 இல் 57,000 கட்டுரைகள் இருந்தன, ஆனால் 200 எழுத்துகளுக்கும் கூடுதலாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை 35,000 தான். பல மொழிகள் வெற்றாக பல கட்டுரைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.தமிழில் அப்படி இல்லை. சராசரி கட்டுரையின் பைட் அளவில் தமிழ் விக்கிப்பீடியா உலகில் 10 ஆவதாக நிற்கின்றது. http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm என்னும் பக்கத்தில்கீழே இரண்டாவதாக வரும் அட்டவனையில் பார்க்கலாம்- இதன் தலைப்பு"The following table ranks this project in relation to projectsin other languages with 1000+ articles" என்று இருக்கும். அதில் கடைசியாகக் கிடைக்கும்முழுத் தரவைப் பார்த்தால் (ஏப்பிரல் 2010) உக்கான தரவு- தமிழ் விக்கிப்பீடியாசராசரி பைட்டு அளவில் 10 ஆவதாகவும், மொத்த கலைக்களஞ்சியபைட்டு அளவில் 32 ஆவதாகவும் உள்ளது தெரியவரும். தமிழ் விக்கிப்பீடியா உலகில் முதல் 20 உக்குள் வரும் என்று நம்புகின்றேன். நல்ல பயனுடைய கட்டுரைகளாக ஒரு 20,000-30,000 கட்டுரைகள்இருந்தாலே அது ஒரு மாபெரும் வெற்றி (ஓர் அச்சுத் தொகுதி1000 பக்கம் என்று கொண்டால், ஒவ்வொரு கட்டுரையும்ஒரு பக்கம் என்று கொண்டால், இதுவே 20-30 பெரும் தொகுதிகளாகும்.)வெட்டியான செய்திகளாக பன்னூறாயிரக்கணக்கில் தொகுப்பதினும்பயனுடைய கருத்துகளைச் செறிவாகவும், தெளிவாகவும் தொகுத்துவந்தால் நமக்குப் பயன்படும். நாம் செல்ல வேண்டிய தொலைவுஅதிகம் தான் மறுக்கவில்லை. ஆனால் உலக மொழிகளில் தமிழ்முதல் 10-12 மொழிகளுக்குள் ஒன்றாக நிற்க நிறைய வாய்ப்புக்கூறுகள்உள்ளன.தமிழ் விக்கிப்பீடியா, வரலாறு காணாத அளவுக்கு இலங்கைத் தமிழர்களும்,சிறிய எண்ணிக்கையில் மலேசியத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களுமாகஒன்றிணைந்து உருவாக்கி வரும் பெரிய ஆக்கம். அத்தனையும் இலவசம்.ஏராளமான படங்கள், மிக அரிய, ஆயிரக்கணக்கான அறிவுச் செய்திகள் கொண்ட பெரும் தொகுப்பு. அதில் உள்ள குறைகள் மிக ஏராளம் மறுக்கவே இல்லை, எனினும் ஒரு வரலாறு படைக்கும் படைப்பு என்பதுஅதில் உள்ள அரிய செய்திகளைத் தொகுத்துப் பார்த்தால் தெரியும். எத்தனையோ ஆயிரக்கணக்கான அறிவுச்செய்திகள் வேறு எங்கும் தமிழில் பதிவாகாமல் தமிழில் தமிழ் விக்கிப்பீடியாவில்தான் முதன் முதலாகப் பதிவாகி உள்ளன.சில தமிழ்க் கட்டுரைகளில் உள்ள அறிவியற் செய்திகள் ஆங்கில விக்கியில் கூடக் கிடையாது. கொலோபசுக் குரங்கு, தும்பி முதலான கட்டுரைகளைப்பாருங்கள். சில அறிவியற் செய்திகள் ஆங்கில விக்கியில் வரும் முன்னரே தமிழ் விக்கியில் முதலில் பதிவாகி உள்ளன. இந்திய மொழிகளில் தமிழ்முதல் 1-2 இடத்திலே உள்ளது (வெறும் கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டி)
அன்புடன்
செல்வா