சில நாட்கள் ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் பிழைக்கும். என்ன செய்தாலும் பிழையான ஒன்றுதான் நடக்கும். தேவிபாரதியுடனான சந்திப்பு அந்த வகையைச் சேரும். சந்திப்புக்கு நாலு பேர் சேர்ந்து போவதாகத் தீர்மானித்தோம். செல்வம், வரன், டானியல் ஜீவா மற்றும் நான். இந்த நால்வரில் தேவிபாரதியுடன் முகப் பழக்கம் கொண்டவர் செல்வம்தான். என்னுடைய பழக்கம் மின்னஞ்சலோடு நின்றது. மற்ற இருவருக்கும் அதுவும் இல்லை. தேவிபாரதி...
அபாயத்தை தேடுவோர்
நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் கிராமத்தில் ஒருவர் தட்டச்சு மெசினில் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். அவருடைய விரல்கள் பரபரப்பாக இயங்கும். ஓங்கி உயர்ந்து விசைகளைத் தட்டும். அதிலே செருகியிருக்கும் பேப்பர் ஒவ்வொரு வரியாக உயரும். உருளை இடது பக்க எல்லையை அடைந்ததும் மறுபடியும் வலது பக்கம் தள்ளிவிட்டு வேகமாக அடிப்பார். ஒவ்வொரு எழுத்தும் பேப்பரில் விழுந்து வார்த்தையாக மாறும். சிலசமயம் எழுத்துக்கள்...
இந்தியா டுடே
நானும், விகடனும்
’எங்கள் ஊரில் ஒரு துப்பாக்கி இருந்தது.’ இப்படி ஒருசிறுகதை ஆரம்பிக்கும். அதுபோல நானும் தொடங்கலாம் என்று நினைக்கிறேன். எங்கள் ஊரில் ஒரு ரயில் நிலையம் இருந்தது. உலகத்தினுடனான எங்கள் தொடர்பு அதுதான். எங்கள் ஊரில் ஒரு தட்டச்சு மெசின் இருந்தது. அது எப்படித் தெரியுமென்றால் அரசாங்கத்துக்கு யாராவது கடிதம் எழுதவேண்டுமென்றால் அந்த மெசினில் தட்டச்சு செய்துதான் அனுப்பிவைப்பார்கள்...
மதுமிதா
வட அமெரிக்காவில் கலியோப் தேன்சிட்டு என ஒரு பறவை இருக்கிறது. திடீரென்று மறைந்து போகும். மறுபடியும் ஆறு மாதம் கழித்து திடீரென்று தோன்றும். மதுமிதாவும் அது போலத்தான். திடீர் திடீரென்று காணாமல் போய்விடுவார். ஆனால் பெயரிலேயே மது வைத்திருப்பவர் திரும்பும்போது தேன் கொண்டு வருவார். இதோ அவர் எழுதிய கடிதம். அன்பு அ. முத்துலிங்கம் அவர்களுக்கு வணக்கம். விகடனில் நானும் விகடனும் வாசித்தேன்...
எதிர்பாராமல் வந்தவர்
குமுதம் இதழை வாங்கியவுடன் ‘அரசு பதில்கள்’ பகுதியைத்தான் பலரும் முதலில் படிப்பார்கள். அத்தனை பிரபலமானது. பதில்கள் ‘நறுக் நறுக்’ என இருக்கும். வாசகர்கள் எதிர்பாராத ஒரு பதிலைக் கொடுப்பதில்தான் சாமர்த்தியம் இருந்தது. ஒரு முறை வாசகர் இப்படி கேள்வி கேட்டார். ’உங்களுக்கு பிடித்த தமிழ்...
Recent Comments