இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.
பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது.
இந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Don Bosco Institute of Communication Arts (DBICA) அரங்கில் நடைபெற உள்ளது. திரையரங்கு போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முற்றிலும் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ரசனையை வளர்ப்பதற்கு பார்க்கப்படும் திரைப்படங்களை நல்ல சூழ்நிலையில் பார்க்க வேண்டும். நல்ல குளிர்ச்சியான இந்த அரங்கில் ஒளி ஒலி வசதியும் அருமையாக உள்ளது. எனவே சிறுவர்கள் உலகப் படங்களை பார்ப்பதற்கு ஒரு அருமையான சூழல் முதலில் உருவாகியுள்ளது என்றே நினைக்கிறேன்.
மேலும் சிறுவர்களை அவ்வளவு எளிதாக புரியாத மற்ற மொழிப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. அதுவும் முற்றிலும் தமிழ் திரைப்படங்களை பார்த்து திரைப்படம் என்றாலே பாட்டு, சண்டை, நகைச்சுவை என்று மூழ்கிப் போயிருக்கும் ஒரு தலைமுறையை அவ்வளவு எளிதாக நாம் உலகப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. எனவே சிறுவர்களை முதலில் மனதளவில் அதற்காக தயார் செய்துவிட்டு, தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் (பொழுதுபோக்கு திரைப்படங்கள் அல்ல, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்) அளித்து, சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைக்கவே இந்த முதலாண்டில் முயற்சி செய்கிறோம். இந்த பரிச்சார்த்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களை அழைத்து வந்து இந்த திரைப்பட திருவிழாவில் கலந்துக் கொள்ள செய்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
தமிழில் எல்லாருக்கும் தெரிந்த மாயாஜால கதைகளோ, அறிவுரைக் கதைகளோ, அல்லது சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு கதைசொல்லும் 'பசங்க' போன்ற படங்களோதான் இங்கே சிறுவர் திரைப்படங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழாவில் குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் வாழ்வியலை, அவர்களின் அழகியலோடு படமாக்கி இருக்கும் உலகப் படங்களே திரையிடப்படவிருக்கிறது. இந்த திரைப்பட திருவிழாவில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் குழந்தைகளோடு வாருங்கள். அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளையாவது அழைத்து வாருங்கள்.
இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.
திரையிடப்படவிருக்கும் படங்கள் & நிகழ்ச்சிகள்:
முதல் நாள்: (11-05-2012), வெள்ளிக்கிழமை
காலை 10 மணிக்கு – தொடக்க விழா (விழாவை தொடங்கி வைப்பவர்களும் குழந்தைகளே)
நிகழ்வில் நடிகர் சார்லி உலகின் மிக முக்கியமான சிறுவர் திரைப்படங்களை பற்றி பேசுவார்.
காலை 11 மணிக்கு – சிறுவர் சினிமா – நூல் வெளியீடு – ஆழிப் பதிப்பகம் (வெளியிடுபவர்களும் குழந்தைகளே)
11 :30 மணிக்கு: ஆயிஷா – தமிழ் குறும்படம் திரையிடல் – 30 நிமிடம்
12 மணிக்கு: The Kid – Charly chaplin 50: 20
மதியம் 1:10 மணிக்கு: உணவு இடைவேளை
1.50 மணிக்கு: கதைசொல்லியுடன் ஒரு உரையாடல்
(குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அந்த கதையின் முடிவிலிருந்து சிறுவர்களே ஒரு புதிய கதையை உருவாக்க செய்யும் நிகழ்வு)
கதைசொல்லி: சாத்தூர் கருப்பசாமி
மாலை 3 மணிக்கு: The Way Home – Lee Jeong-hyang – 1.28.13
மாலை 4.30 மணிக்கு: தேநீர் விருந்து
மாலை 5 மணிக்கு: LE PAPILLON – Philippe Muyl – 1.19.22
இரண்டாம் நாள்: (12-05-2012), சனிக்கிழமை
காலை 9 மணிக்கு: TAARE ZAMEEN PAR – AAMIR KHAN – 2.42.16
11.50 மணிக்கு: மோர் பரிமாறுதல்
12 மணிக்கு: வேலு சரவணன் மாணவர்களான "நாடக சாலை" அமைப்பை சார்ந்த அறிவழகன் & சுல்தான் நடத்தும் சுக்கா பக்கா குழந்தைகளுக்கான நாடகம்.
மதியம் 1:20 மணிக்கு: உணவு இடைவேளை
2 மணிக்கு: சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி – பயிற்சியாளர் – சாத்தூர் கருப்பசாமி
2.30 மணிக்கு: Blame it on Fidel – Julie Gavras – 1.34.24
4.05 மணிக்கு: தேநீர் விருந்து
4 .20 மணிக்கு: Eternity and a Day – Theodoros Angelopoulos – 2.07.29
6.30 மணிக்கு: Landscape in the Mist – Theodoros Angelopoulos – 2.00.00
இரவு 8 .30 மணிக்கு: நிறைவு விழா.
(நிகழ்வில் குழந்தைகளுக்கு தேவையான கால இடைவெளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறைய பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சில விமர்சனங்களுக்கும் இடமுண்டு என்று அறிவேன். ஆனால் சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைப்பதற்கு அவர்களை ஒரு திட மனநிலையில் வைத்தே ஆக வேண்டும். இதன் மூலம் மறுநாளே உலகப் படங்களை தேடித் பார்த்துவிடப்போவதில்லை. ஆனால் அதற்கான விதைதான் இந்த சிறுவர் உலகத் திரைப்பட விழா).
எனவே அனைவரும் உங்கள் குழந்தைகளோடு இந்த திரைப்பட திருவிழாவிற்கு வருகை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த நிகழ்விற்கு இடம் தந்து உதவிய DBICA மற்றும், நிதியுதவி அளிப்பதாக சொல்லி இருக்கும் ஆழி செந்தில்நாதன், எஸ்.கே.பி. கருணா (இதில் பங்காற்றிய பவா செல்லதுரை), மற்றும் சிங்கப்பூர் நண்பர் சிவா, எப்போதும் போல் தனது பங்களிப்பை நல்கிய நண்பர் யுகேந்திரன், நண்பர் ஜார்ஜ் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் என்று உரியன.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோர்: மானசி (பவாசெல்லதுரை மகள்), தமிழ்நிலா (கோவி. லெனின் மகள்)
சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவிருக்கும் இந்த நிகழ்விற்கு அதிகமான நிதியுதவி தேவைப்படுகிறது. நீங்களும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.
அருண் மோ. 9840698236
|