ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம்...
எஸ்.ராமகிருஷ்ணனின் உரை
சென்னையில் உயிர்மை நடாத்திய அ. முத்துலிங்கத்தின் ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ நூல் வெளியீட்டின்போது திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஜனவரி 2012ல் ஆற்றிய உரை. ( ஒலியிலிருந்து எழுத்து – றஞ்சி திரு ) எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். முத்துலிங்கத்தினுடைய கட்டுரைத் தொகுப்பைப் பற்றி பேசுவதற்காக நான் இன்று இங்கு வந்திருக்கிறேன்...
மு.இராமனாதன்
புலம் பெயர்ந்தவர்களின் அடையாளம் : முத்துலிங்கத்தின் வெளி புலம் பெயர்ந்து வாழ்பவர்களில் தங்கள் பிறந்த மண்ணின் அடையாளங்களைத் தக்க வைத்துக் கொள்கிறவர்கள் உண்டு. புலம் பெயர்ந்த மண்ணின் அடையாளங்களைச் சுவீ்கரித்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிலிருந்தும் தங்களுக்கு வேண்டுவனவற்றை எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. இரண்டிற்கும் இடையில் ஊசலாடுபவர்களும் உண்டு. இவற்றையெல்லாம் அ.முத்துலிங்கம்...
இன்றைய நாள்
இன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள். முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட...
எங்கள் வீட்டு மணிக்கூடு
அது மிகப் பழைய மணிக்கூடு. மனைவி சொல்கிறார் அதற்கு 40 வயது இருக்கும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் 20 வருடம் கூடுதலாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு மணிக்கும் டங் டங் என்று இசையுடன் அடிக்கும். ஐந்து மணிக்கு, ஐந்து டங், ஆறு மணிக்கு ஆறு டங். இப்படி எங்கள் வீட்டு வாழ்க்கையில் அவ்வப்போது மணி பார்த்து அதன் பிரகாரம் சகல காரியங்களும் நிறைவேறிக்...
ஒலி, ஒளிப்பதிவுகள்
திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஜனவரி 2012ல் சென்னையில் அ.முத்துலிங்கத்தின் “ஒன்றுக்கும் உதவாதவன்” உயிர்மை புத்தக வெளியீட்டின்போது ஆற்றிய உரை
முத்துலிங்கம் சிறுகதைகள் – மகாராஜாவின் ரயில் வண்டி
முத்துலிங்கம் சிறுகதைகள் – அமெரிக்கக்காரி
Muttulingam Short Stories – Inauspicious Times
Recent Comments