பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான்...
சிரிப்பு
புகைப்படம் எடுக்கும்போது என்னைச் சிரிக்கவைக்கப் பாடுபட்டு பலர் தோற்றுப் போயிருக்கிறார்கள். புகைப்படத்தில் சிரிப்பது செயற்கையாக இருக்கும். அதில் தெரிவது வேறு யாரோ. ஆனால் நீங்கள் அறியாமல் உங்களை யாராவது படம் பிடித்தால் அது உண்மையாக இருக்கும். படத்தை பார்த்தவுடனேயே புரிந்துவிடும். ஏனென்றால் அந்தச் சிரிப்பு இதயத்தில் உதித்து வெளியே வந்திருக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் கனடா வந்திருந்தபோது பலர் அவருடன்...
கனகசுந்தரி
இப்படியொரு அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காக தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்திருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள்...
Recent Comments