என் மனைவி ஒரு கதை சொன்னர். அவர் மாணவியாக இருந்த சமயம் அவருடைய ஆசிரியை யப்பானுக்கு போய் வந்திருந்தார். அங்கே ஒரு ரயில் நிலையத்தில் ஆசிரியை கைப்பையை மறதியாக விட்டுவிட்டு ரயில் ஏறிவிட்டார். இரண்டு மணி நேரம் கழித்து அவர் திரும்பவும் வந்தபோது அந்த கைப்பை வைத்த அதே இடத்தில் இருந்ததாம். யப்பானியர்கள் நாணயமானவர்கள் என்று என் மனைவி தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். ஒருவருடம் முன்பு யப்பானிய அமைச்சர் ஒருவர்...
ரொறொன்ரோ பெண்
ரொறொன்ரோப் பெண் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ...
கொக்குவில்
கொக்குவில் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் பிறந்தேன். ஒரு முழுநாள் அம்மாவை வலியில் துடிக்கவைத்து, கால்களை முதலில் வெளியே தள்ளி, இப்பூமியில் உதித்தேன். ஆனால் மூச்சு விடமுடியாமல் கிடந்தேன். மருத்துவச்சி என்னை தலைகீழாகத்தூக்கி குலுக்கி, நெற்றியிலே பழுக்கக் காய்ச்சிய ஊசியால் சூடு வைத்தபோது என்னிடமிருந்து முதல் அழுகை வெளிப்பட்டது. ஆண்பிள்ளை பிறந்தால் எங்கள் ஊரில் உலக்கையை...
Recent Comments