ArchiveNovember 2013

என்ன செய்வது?

  இன்றைக்கும்  மனைவி என் அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ராணுவத்தை பார்வையிட வந்த ஜெனரல்போல இரண்டு பக்கமும் பார்த்தார். பல புத்தகங்கள் திறந்து நிலத்தில் கிடந்தன. நோட்டுப் புத்தகங்கள் பாதி எழுதியபடி சிதறியிருந்தன. கம்புயூட்டரில் நான் வேகமாக தட்டச்சு செய்துகொண்டிருந்தேன். மனைவி கேட்டார். ’இதுவெல்லாம் குப்பையாக கிடக்கிறதே. ஒழுங்காய் அடுக்கி வைக்க ஏலாதா? அதன் பின்னர்...

போரில் தோற்றுப்போன குதிரைவீரன்

போரில் தோற்றுப்போன குதிரை வீரன் அ.முத்துலிங்கம் அடுத்து வரும் ஞாயிறில் இருந்து அவ னுடைய காதலியாக இருப்பதற்கு அவள் சம்மதித்துவிட்டாள். ஞாயிறு வருவதற்கு இன்னும் மூன்றே மூன்று நாட்கள் இருந்தன. அதுவரைக்கும் பொறுத்திருப்பது சிரமமான காரியம்தான். உடனேயே காதலி கிடைப்பதில் அவனுக்கு ஒரு தடை இருந்தது. தற்சமயம் அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவனுக்கு வேலை மாற்றலாகி 2000 மைல் தூரத்துக்குப் போகிறான். இனிமேல்...

இரண்டு சந்தோசங்கள்

                    இரண்டு சந்தோசங்கள்                               இன்று எனக்கு இரண்டு சந்தோசங்கள். கனடாவில் நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்கு தள்ளி வைக்கும் நாள் இது. அதாவது ஒரு மணி நேரத்தை மீண்டும் வாழலாம். மொத்தத்தில் எனக்கு இன்று 25 மணித்தியாலங்கள் கிடைக்கும். ஒரு வருடத்தில் ஒருமுறை மட்டுமே இப்படி நடக்கும். ஆகையால் நான் இந்த நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பேன்.   இரண்டாவது சந்தோசம் நான்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta