ArchiveMarch 2017

என்னைத் திருப்பி எடு

என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...

குமர்ப்பிள்ளை

   குமர்ப் பிள்ளை                         அ.முத்துலிங்கம்   கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.   வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து நான் நிறையச் சம்பாதித்தேன். மனைவி போன பின்னர் நாலு பிள்ளைகளும் நாலு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக்...

லூனாவை எழுப்புவது

                      லூனாவை எழுப்புவது                                  ஆயிஷா காவாட் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம் செலுத்தும் சுரங்கப் பாதைக்கு எதிரிலும், வீடு திருத்தவேலை சாமான்கள் விற்கும் ஹோம் டிப்போவுக்கு பக்கத்திலும் உள்ளது. இங்கே வசிப்பவர்கள் ஹோம் டிப்போவுக்குப் போய் அங்கே சுத்தியலும், சுவருக்குப் பூசும்...

அதுவாகவே வந்தது

                    அதுவாகவே வருகிறது                                 அ.முத்துலிங்கம் ஒரு வெள்ளைக்காரர் கும்பகோணம் சந்நிதித் தெருவில் அலைந்து திரிந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். வருடம் 1988. அரைக்கை சட்டை அணிந்திருந்தார். தலை கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை ஓடியது. ‘யாரை தேடுகிறீர்கள்?’ ‘நான் அமெரிக்காவிலிருந்து வருகிறேன். என் பெயர் ரொபர்ட் கானிகல். சுந்தரேசன் என்பவரைச் சந்திக்கவேண்டும்.’...

வேட்டைக்காரர்கள்

வேட்டைக்காரர்கள் அ.முத்துலிங்கம் ’மதிய உணவுக்கு வாருங்கள்.’ இப்படித்தான் அழைப்பு வந்தது. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்திலிருந்து சிலர் கூட்டாக  அனுப்பிய அழைப்பு. பல வருடங்களுக்கு முன்னர் இவர்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவர், விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர். இவர்களிடமிருந்த ஒரே ஒற்றுமை எல்லோருமே...

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்   அ.முத்துலிங்கம் அழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல்  என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது. சனங்களின் குழப்பத்தை...

பொன்னுருக்கு

பொன்னுருக்கு                                          அ.முத்துலிங்கம் நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன?’சமீபத்தில் ரொறொன்ரோவில் நடந்த பொன்னுருக்கு சடங்கு ஒன்றுக்குப் போயிருந்தேன். அதைப் படம் பிடித்து முகப்புத்தகத்தில் போட்டபோது என் நண்பரும் வேறு சிலரும் இதே கேள்வியை கேட்டார்கள். அப்பொழுதுதான் இந்தியாவில், அதுவும்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta