இரு கவிகள் அ.முத்துலிங்கம் சென்ற வாரம் ரொறொன்ரோவில் இரண்டு கவிகளைச் சந்தித்தேன். தனித்தனியாக. ஒரு கவியை சந்திப்பதே சிரமமான காரியம். ஆனால் சில அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அன்று காலையே சந்தைப்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் வரத்தொடங்கிவிட்டன. தலைமைப் பண்பு எனத் தொடங்கும் ஓர் அழைப்பு வந்ததும்...
என்னை விட்டு தப்புவது
என்னைவிட்டு தப்புவது அ.முத்துலிங்கம் 2017 முழுக்க எனக்கு கூகிள் வருடமாக அமைந்தது. ஒவ்வொரு வார்த்தையாக கூகிளில் தேடினேன். என்னுடைய தேடலில் நான் எழுதிய கட்டுரை ஒன்றுதான் வந்தது. ’அட, இங்கேயும் அப்படியா?’ என்று கம்புயூட்டரை மூடிவைத்தேன். எழுத்தாளர் மூளையிலே கரு எப்படி உதிக்கிறது என்பதுதான் கேள்வி. பல காரணங்களைச் சொல்லலாம்...
உள்ளே வராதே
உள்ளே வராதே அ.முத்துலிங்கம் சிறுவயது ஞாபகங்கள் என்றும் மனதிலிருந்து அழிவதில்லை. இன்று காலை என்ன உணவு சாப்பிட்டேன்? ஞாபகமில்லை. நேற்று பத்திரிகை தலைப்பு செய்தி என்ன? ஞாபகம் இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னர் நடந்தவை இன்னும் நினைவில் அப்படியே நிற்கின்றன. அதுமட்டுமல்ல, அப்போ நடந்தவற்றையும், படித்தவற்றையும்...
ஆறாம் திணை
ஆறாம் திணை அ.முத்துலிங்கம் நாங்கள் அப்போது இலங்கையில் மவுண்லவினியா என்னும் இடத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டுக்குச் சொந்தக்காரர் பெயர் பிரீஸ். அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு சிங்களம் தெரியாது. 1958ம் ஆண்டு மே மாதம் ஓர் இரவு கலவரம் மெல்ல மெல்ல ஊர்ந்து கொழும்புக்கு வந்தது. எந்த நேரமும் எங்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று உணர்ந்து அண்ணர் எங்கள் உயிரையும் உடைமைகளையும்...
தனித்து நின்ற பெண்
தனித்து நின்ற பெண் அ.முத்துலிங்கம் அந்த உணவகத்துக்குள் நுழைந்தபோது நான் முதலில் பார்த்தது அந்த இளம் பெண்ணைத்தான். இரண்டு நாற்காலிகள் போட்ட சதுரமான மேசையில் தனியாக உட்கார்ந்திருந்தார். விருந்துக்குப் புறப்பட்டதுபோல ஒப்பனை செய்யப்பட்ட முகம். நல்ல ஆடையில் அலங்காரமாக காணப்பட்டார். என்னை இழுத்தது நீண்டுபோன அவருடைய கண்கள்தான்...
மீண்டும் படிப்பதில்லை
மீண்டும் படிப்பதில்லை அ.முத்துலிங்கம் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம் திகைத்துப் போய்விட்டேன். அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு...
தமிழ் இருக்கை
தமிழ் இருக்கை அ.முத்துலிங்கம் தமிழ் இருக்கைக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் எப்படியான வரவேற்பு கிடைத்தது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு கிடைத்தது. அமெரிக்காவின் பிரபல மருத்துவர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இருக்கை ஆரம்பிப்பதற்காக கணிசமான தொகையை முன் பணமாக வழங்கியிருந்தார். ஆறுமாதம் கழித்து மீதிப் பணத்தை செலுத்துவதற்காக இரண்டு...
ஐந்து கால் மனிதன்
ஐந்து கால் மனிதன் அ.முத்துலிங்கம் நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார் என்பதும், அவர் துப்புரவுப் பணிப்பெண் என்பதும் பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும்...
லூனாவை எழுப்புவது
லூனாவை எழுப்புவது ஆயிஷா காவாட் (மொழிபெயர்ப்பு) என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா, ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம் செலுத்தும் சுரங்கப் பாதைக்கு எதிரிலும், வீடு திருத்தவேலை சாமான்கள் விற்கும் ஹோம் டிப்போவுக்கு பக்கத்திலும் உள்ளது. இங்கே வசிப்பவர்கள் ஹோம் டிப்போவுக்குப் போய் அங்கே சுத்தியலும்...
மாவோவுக்காக ஆடை களைவது
மாவோவுக்காக ஆடை களைவது தைலா ராமானுஜம் மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம் ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’ ‘மகளே, இதற்கு முன்னர் நான்...
Recent Comments