கடைநிலை ஊழியன் அ.முத்துலிங்கம் எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டிடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின. எந்த ஒரு பெரிய நிறுவனத்திலும் கடை நிலை ஊழியன் என ஒருவன் இருப்பான். கட்டிடத்துக்கு கட்டிடம், நிறுவனத்துக்கு நிறுவனம், அவன் செயல்பாடு ஒரே மாதிரித்தான். ஒரு கதை இருக்கிறது. மிகப் பெரிய நிறுவனம் ஒன்றுக்குள் ஒரு புலி ரகஸ்யமாக புகுந்து...
கல்வீட்டுக்காரி
கல்வீட்டுக்காரி அ.முத்துலிங்கம் தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன. அவர் ஒன்றும் சொந்த மனைவி சாப்பிடுவதற்கு எதிரியல்ல. நல்ல மனுசர். எதற்காக அவரிடமிருந்து மனைவி மறைத்தார்? பசிக்கு சாப்பிடுவதும் ஒரு குற்றமா? ’நான் உம்முடைய புருசன்தானே. இதிலே என்ன ஒளிவுமறைவு’ என்றார். ஒரு வருடமா? இரண்டு வருடமா? 20 வருடங்களாக அவரிடமிருந்து...
யானையின் சம்பளம்
யானையின் சம்பளம் அ.முத்துலிங்கம் வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச் செய்ய முடியாதா?’ என்றான். எல்லா பிரச்சினைகளுக்கும் அவனிடம் தீர்வு இருந்தது. அநேக சமயங்களில் பிரச்சினையை உண்டாக்குவதும் அவனாகவே இருக்கும். லாம்ரெட்டா கம்பனி ஆரம்பித்தபோது இளம்வயது பயிற்சியர் தேவைப்பட்டார்கள். கடைநிலை வேலை; சம்பளம் குறைவு. ...
காலைத் தொடுவேன்
காலைத் தொடுவேன் (நிதி திரட்டிய அனுபவங்கள்) அ.முத்துலிங்கம் ஹார்வர்ட் தொடக்கம் அமெரிக்காவில் இரண்டு பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும் மருத்துவர் சுந்தரேசன் சம்பந்தமும் தமிழ் இருக்கை தொடர்பாக ஆர்வத்தோடு ஹார்வர்டு அதிகாரிகளைச் சந்தித்தபோது நானும் கூட இருந்தேன். ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள் நன்கொடை வழங்கி நிதி திரட்டலை ஆரம்பித்து வைத்தார்கள். தேவையான இலக்கு 6 மில்லியன் டொலர்கள். அது...
இல்லை என்பதே பதில்
இல்லை என்பதே பதில் அ.முத்துலிங்கம் தொடக்கம் பெர்சி ஸ்பென்சர் என்பவர் 5ம் வகுப்பு மட்டுமே படித்த ஓர் அமெரிக்கர். இவர் பின்னர் தானாகவே கற்றுக்கொண்டு விஞ்ஞானி ஆனார். 1945ல் ஒரு குளிர்கால பகல் நேரத்தில் கதிர் அலை பற்றிய பரிசோதனை முடிவில் அவர் சட்டைப் பையில் இருந்த சொக்கலெட் உருகிவிட்டது. அது ஏன் நடந்தது என்று வியப்பு மேலிட தொடர்ந்து ஆராய்ச்சி செய்து நுண்ணலை அடுப்பை கண்டுபிடித்தார்...
Recent Comments