பயம் பிடித்துவிட்டது.
முதல் கடிதம் நண்பர் யோகி தம்பிராசாவிடம் இருந்து வந்தது. இவர் தமிழ் படிப்பதே இல்லை.
இரண்டாவது கடிதம் மணி வேலுப்பிள்ளை. இவர் நுட்பமாகப் படிப்பவர்.
நேற்று பாரதி மணி எழுதினார். இவருக்கு நேரமே இல்லை. எப்படி என்னுடைய பக்கத்துக்கு வந்து படிக்கிறார்.
இன்று பா.ராகவன் எழுதியிருக்கிறார். மாட்டிவிட்டோமோ என்று யோசிக்கிறேன். நான் ஒரு பயிற்சிக்காகத்தான் எழுதுகிறேன். எனக்கு சொல்லவேண்டும் என்று படுகிறதை சொல்கிறேன். உயர்ந்த தவிசில் உட்கார்ந்து எழுதவில்லை. நண்பர்கள் பொறுக்கவேண்டும்.
பாடல் 10341 இதுதான்.
வெற்றி வெஞ்சேனையோடும் வெறிப்பொறிப் புலியின் வெவ்வால்
சுற்றுற தொடுத்து வீக்கும் அரையினன் சுழலும் கண்ணன்
கல்திரள் வைரத்திண்தோள் கடும் திறல் மடங்கல் அன்னான்
எற்றுநீர் கங்கை நாவாய்க்கு இறை குகன் தொழுது சூழ்ந்தான்