சிம்மாசனம் அ.முத்துலிங்கம் தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள்...
சிவாஜியின் குரல்
சிவாஜியின் குரல் அ.முத்துலிங்கம் ஒரு வருடமாக நாங்கள் டெலிபோனில் தொடர்ந்து பேசினோம். சில சமயங்களில் நான் ஒரு கேள்வி எழுதி மின்னஞ்சலில் அனுப்புவேன். அவர் பதில் எழுதுவார். இது ஒரு நேர்காணல்போல நடக்கவே இல்லை. அவரும் நினைக்கவில்லை. நானும் அப்படி எண்ணவில்லை. திட்டமிட்டதெல்லாம் கிடையாது. செல்பேசியில் கோடு மெள்ள மெள்ள நிரம்புவதுபோல தகவல்கள் நிரம்பின. ஒருநாள் பேசும்போது அவர் போகிறபோக்கில்...
வெள்ளிக்கிழமை இரவுகள்
வெள்ளிக்கிழமை இரவுகள் அ.முத்துலிங்கம் ஏதோ காட்டு மிருகம் துரத்தியதுபோல உள்ளே பாய்ந்தாள் ஆகவி. பத்து வயதுதான் இருக்கும். அவளுடன் வந்த...
அடுத்த புதன் கிழமை உன்னுடைய முறை
அடுத்தபுதன்கிழமைஉன்னுடையமுறை வாரத்தில்ஏழுநாட்கள்இருப்பதில்தான்முதல்பிரச்சினைஆரம்பமானது. இதைமாற்றுவதுஅவனுடையஆற்றலுக்குஅப்பாற்பட்டது. வாரத்தில்ஆறுநாட்கள்இருந்திருக்கலாம்; எட்டுநாட்கள்கூடபரவாயில்லை. ஒற்றைப்படையாகஏழுநாட்கள்வந்ததில்தான்விவகாரம். 1700 வருடங்களுக்குமுன்புரோமாபுரிபெரும்சக்கரவர்த்திகொன்ஸ்டன்ரைன்வாரத்தில்ஏழுநாட்கள்என்றுதீர்மானித்ததைஅவன்எப்படிமாற்றமுடியும். ...
வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரன் அ.முத்துலிங்கம் சிண்டரெல்லா கதையில் யார் கதாநாயகன் அல்லது நாயகி என்று கேட்டேன். நான் கேட்டது ஓர் ஆறு வயது பெண் குழந்தையிடம். அந்தக் குழந்தை பதில் சொல்ல ஒரு விநாடிகூட எடுக்கவில்லை. ’மணிக்கூடு’ என்றது. நான் திடுக்கிட்டுவிட்டேன். சிண்டரெல்லாவைச் சொல்லலாம்...
ஸ்டைல் சிவகாமசுந்தரி
ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம் யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை...
கிறிஸ்மஸ் தவளை
கிறிஸ்மஸ் தவளை அ முத்துலிங்கம் நான் சொல்லப்போகும் கதை இன்னும் முகநூலில் அடிபடவில்லை. இணையத்தில் யாரும் எழுதவில்லை. சஞ்சிகைகள் கண்டுகொள்ளவில்லை.. எனவே துணிந்து எழுதலாம். இதைப் பதிவு செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன். இது நடந்தது தென்னாப்பிரிக்காவின். ஜோஹான்னஸ்பேர்க் நகரில். அங்கே உள்ள பிரபலமான சுப்பர்மார்க்கெட் ஒன்று சில வருடங்களாக நட்டத்தில் ஓடியது. உரிமையாளர்கள்...
என்னை மறந்துவிட்டீர்களா?
மறந்துவிட்டீர்களா? அ.முத்துலிங்கம் சமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த Being Mortal என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த நூல், கர்ணன் மகாபாரதத்தில் சொன்ன ஒரு வாக்கியத்தோடு தொடங்குகிறது I see it now This world is swiftly passing. இந்த வார்த்தைகளைப் படித்த பின்பு என் மனம் புத்தகத்தில்...
சின்ன ஏ, பெரிய ஏ
சின்ன ஏ, பெரிய ஏ அ.முத்துலிங்கம் ’இன்னும் எப்வளவு நேரம்?’ என்றார். ’மூன்று நிமிடம்’ என்றேன் நான். காசாளரிடம் சென்று பணத்தை கட்டிவிட்டு வந்தார். அவருக்கு அப்படி ஒன்றும் அவசரமில்லை. வீட்டிலே போய்க் கயிற்று ஏணையில் படுப்பதுதான் வேலை. அவ்வப்போது வருவார். இன்று 12 அடி நீளம், 6 அங்குலம் அகலம், 2 அங்குலம் தடிப்பான மரம் வேண்டுமென்றார். அவர் கொடுத்த அளவுக்கு மரத்தை...
குரங்குகள் வாங்கும் பென்சன்
9 வருடங்களுக்கு முன்னர் என் மகன் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமைச் சந்தித்தபோது அதைப் பதிவு செய்தார். நான் அதை மொழிபெயர்த்து அது பிரசுரமானது. இன்று மனித நேயத்தில் உயர்ந்து நிற்கும் இந்த மாமனிதர் நினைவாக மீண்டும் பதிவிடுகிறேன். குரங்குகள்வாங்கும்பென்சன் முனைவர் எம். சஞ்சயன் அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்துவைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது...
Recent Comments