கேர்ணல்கிட்டுவின்குரங்கு அ.முத்துலிங்கம் என்னுடையபெயர்சிவபாக்கியலட்சுமி. வயது82. எனக்கு மறதிவரவரக்கூடிக்கொண்டேபோகுது. காலையிலேமருந்துக் குளிசையைபோட்டேனாஎன்பதுகூடமறந்துபோகுது. என்மூளையில இருந்துசிலஞாபகங்கள் மறையுமுன்னர்அதைஉங்களுக்கு சொல்லவேண்டும் என்பதுதான்என்ஆசை. ...
ஆகச் சிறந்த பிழை
ஆகச் சிறந்த பிழை அ.முத்துலிங்கம் என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும்...
தீர்மானம்
தீர்மானம் அ.முத்துலிங்கம் புது வருடம் பிறந்தபோது ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களை வேஸ்ட் செய்யவேண்டும் என்று. அதன் பிரகாரம் நேற்று முந்தாநாள் ’டோஸ்தானா’ என்ற ஹிந்திப்படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்னர்கூட டோஸ்தானா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அபிஷேக் பச்சன், ஜோன் ஆப்பிரஹாம், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தது...
புது வருடம்
புது வருடம் அ.முத்துலிங்கம் ’2013 புதுவருடம் பிறக்கிறது, என்ன செய்யலாம்?’ என்றார் நண்பர். ’அது நல்ல காரியம். அதை தடுக்கக்கூடாது’ என்றேன் நான். ’கொண்டாடப்போவதில்லையா?’ என்றார். ’வேறு என்ன, இரவு விருந்துதான்’ என்றேன். அப்படித்தான் தீர்மானமானது. விருந்துக்கு எட்டுப் பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். 200 பேர் ஒரே சமயத்தில் இருந்து...
ரயில் பெண்
ரயில் பெண் அ.முத்துலிங்கம் கனடாவில் அவனுக்கிருந்த முதல் பிரச்சினை அங்கே பனிக்காலம் ஒவ்வொரு வருடமும் வருவதுதான். அவன் மலிவான கோட்டும், மலிவான உள்ளங்கியும், மலிவான சப்பாத்தும் அணிந்திருந்தான். பாதாள ரயிலில் பிரயாணம் செய்தபோதும் அவன் உடம்பு நடுங்கியது. அவனுடைய அகதிக்கோரிக்கை வழக்கை வாதாடும் வழக்கறிஞரிடம் அவன் மூன்றாம் தடவையாகப் போகிறான். அவன் அவரிடம் எழுதிக் கொடுத்தது உண்மைக் கதை. அதை அவரால்...
கல்லறை
– அ.முத்துலிங்கம் பிரான்ஸிஸ் தேவசகாயத்துக்கு இரவு மறுபடியும் அந்தக் கனவு வந்தது. அதனாலோ என்னவோ அவர் வெகு நேரம் தூங்கிவிட்டார். அன்று எப்படியும் காலை 7.30க்குக் கிளம்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார். அப்படி புறப்பட்டால்தான் பொஸ்டன் நகரத்து வீதிகளின் ஒத்துழைப்போடு 8.00 மணிக்கு அலுவலகத்துக்குப் போய்ச் சேரலாம்; 7.35க்குப் புறப்பட்டால் 8.20 மட்டும் இழுத்துவிடும்; 7.40...
தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது
கவிஞர் தேவதேவனுக்கு விஷ்ணுபுரம் விருது 22 டிசெம்பர் 2012 அன்று வழங்கப்படுகிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.
பழைய படம்
பழைய திரைப்படம். அ.முத்துலிங்கம் இன்று ஒரு பழைய திரைப்படம் பார்த்தேன். இதே திரைப்படத்தை ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இயற்பியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் Distribution coefficient ratio என ஆரம்பித்தார். வார்த்தைகளை மனனம் செய்து எழுத்துக்கூட்ட பழகிக்கொண்டு அவற்றின் பொருளை அடுத்தநாள்...
ஜெயமோகன் உரை
Tamil Literary Garden, Canada Iyal Virudhu Ceremony on 18 June 2011 Speech by writer Jeyamohan as a Special Guest கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் இயல் விருது விழா, 18 ஜூன் 2011 எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடைய சிறப்புரை இந்த மேடையிலும், அரங்கிலும் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். நண்பர்களே, இந்த அரங்கிலே ஈழம் உருவாக்கிய முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொ அவர்களைக் கௌரவிக்கும் முகமாக...
இரண்டு வயிறுகள்
என்னுடைய மனைவி சொல்வார் என் உடம்பு கண்ணாடித் தன்மை வாய்ந்தது என்று. அது முற்றிலும் உண்மை. நேற்றிரவு நடந்த விருந்திலும் அதை உறுதிசெய்ய முடிந்தது. ஒரு பெண் சிற்றுண்டியை தட்டத்தில் ஏந்தியபடி ஒவ்வொருவராக கொடுத்துக்கொண்டு வந்தார். வரிசையில் அடுத்தது நான். என் முறை வந்ததும் தட்டத்தை அப்படியே சுழற்றி எடுத்து அடுத்தவருக்கு நீட்டிக்கொண்டு போனார். காரணம் என்னை அவர் கண்கள் பார்க்கவில்லை. விருந்துகளில் என்னை...
Recent Comments