’அந்தப் புதன் கிழமை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அன்று ஒருவரும் சாகவில்லை. ஏறக்குறைய ஆறுமாதத்தில் ஆக அதிர்ஷ்டம் கூடிய நாள் அதுதான். வழக்கமாக நாளுக்கு ஒன்று, இரண்டு, ஐந்து, பத்துப்பேர் என செத்துக்கொண்டு இருந்தோம். அப்போதுதான் தீர்மானித்தேன். எப்படியாவது நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று.’ அகதி ஒரு நாற்காலியில் கைப்பிடிகளில் முட்டாமல் நடுவே ஒடுங்கி...
மகளும் நானும்
என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது...
சமர்ப்பணம்
சமீபத்தில் என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘குதிரைக்காரன்’ காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதிலே நான் எழுதிய சமர்ப்பணமும், முன்னுரையும் கீழே தரப்பட்டிருக்கின்றன. ...
திருட்டுப் போகும் புகழ்
என்னுடைய நண்பர் ஒருவர் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர். அவர் கனடாவின் வட புலத்துக்கு புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றார். வடதுருவ வட்டத்திற்கு கிட்டவாகப் போனால் குளிர் -50 பாகை செண்டிகிரேட் தொடும். அதனிலும் கீழே கூடப் போகும். அவர் அதற்கெல்லாம் தயாராகத்தான் இருந்தார். பாலைவனங்களுக்கும், வானாந்திரங்களுக்கும் மலைமுகடுகளுக்கும் பயணம் செய்தவர். தகுந்த உடைகளையும், காலணிகளையும் அவர் தேர்வு செய்தபோது நான்...
கூந்தலழகி – விளக்கம்
பத்து கடிதத்திற்கு மேல் வந்துவிட்டது விளக்கம் கேட்டு. 1) ஒரு சிறுமியும் இரண்டு சிறுவர்களும் உதைபந்தாட்டம் விளையாடுவதுடன் கதை ஆரம்பமாகிறது. கதை சொல்லி அந்தச் சிறுமிதான். 2) மாமா கொடுத்த பூஞ்செடிகளை ஆர்வமாக வளர்க்கிறாள். 3) வளர்ந்து எஞ்சினியர் ஆகிறாள். 4) ஒரு நாள் கார் ஓட்டும்போது விபத்து ஏற்படுகிறது. கர்வமான இளைஞன். அழகான தங்கை அவன் பக்கத்தில். இளைஞனை திருமணம் செய்கிறாள். 5) ஒவ்வொரு...
கூந்தலழகி
சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற மருத்துவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. தான் பல வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ’கூந்தலழகி’ சிறுகதையை படித்திருந்ததாகக் கூறினார். அப்பொழுதுதான் அதை தேடிப் பார்த்தேன். ஒரு தொகுப்பிலும் அது சேர்க்கப்படவில்லை. எப்படியோ தவறிவிட்டது. என் கையிலும் பிரதியில்லை. பல மணிநேரமாக இணையத்தில் தேடி அது மீண்டும் கிடைத்துவிட்டது. இது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய...
எட்டாவது சிகரம்
இரண்டு நாட்கள் முன்பு அமர்நாத் குகைக்கு சென்றுவிட்டு வந்த அமெரிக்க பெண் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தலையிலே கறுப்புக் கண்ணாடி குத்திய, கை நகங்களில் பச்சை நிறம் பூசிய பெண். என்னைக் கண்டதும் இதற்காகவே காத்திருந்ததுபோல தான் அமர்நாத் குகைக்கு போய் வந்த சாதனையை சொன்னார். 29 ஜூலை அவர் திரும்பியிருந்ததால் அந்தப் பயணத்தின் அனுபவங்களினால் நிறைந்து போயிருந்தார். என்னிடம் நான் போயிருக்கிறேனா என...
இப்பவேயா
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான்...
சிரிப்பு
புகைப்படம் எடுக்கும்போது என்னைச் சிரிக்கவைக்கப் பாடுபட்டு பலர் தோற்றுப் போயிருக்கிறார்கள். புகைப்படத்தில் சிரிப்பது செயற்கையாக இருக்கும். அதில் தெரிவது வேறு யாரோ. ஆனால் நீங்கள் அறியாமல் உங்களை யாராவது படம் பிடித்தால் அது உண்மையாக இருக்கும். படத்தை பார்த்தவுடனேயே புரிந்துவிடும். ஏனென்றால் அந்தச் சிரிப்பு இதயத்தில் உதித்து வெளியே வந்திருக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் கனடா வந்திருந்தபோது பலர் அவருடன்...
கனகசுந்தரி
இப்படியொரு அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கெல்லாம் காரணம் கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும் அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காக தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று அவள் யோசித்திருக்கிறாள். ரீச்சர் வாய் திறக்கும்போது நாக்கு பிளந்திருக்கிறதா என்று உற்றுப் பார்த்திருக்கிறாள். கனகசுந்தரி அழகாக இருப்பாள்...
Recent Comments