Authoramuttu

தாயும், சேயும்

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக  முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு...

மூளையால் யோசி

இன்றைக்கு அவர்கள் வகுப்புக்கு வரும்போது ஒட்டிக்கொண்டு வந்தார்கள். சமந்தாவும் ஒலேக்கும் காதலர்கள் என்ற விசயம் எனக்கு பல நாட்களாகத் தெரியும். எப்பொழுது அவர்கள் பிரிவார்கள் என்று காத்துக்கொண்டிருந்த  பெண்களில் நானும் ஒருத்தி. ஏனென்றால் ஒலேக் அத்தனை அழகாக இருப்பான். அவன் உக்கிரேய்ன் நாட்டுக்காரன். உயரமாக நீலக் கண்களுடன் முடி நெற்றியில் விழுந்து புரள புத்தகப் பையை ஒரு தோளில் தொங்கவிட்டபடி...

பச்சை விளக்கு

ஒரு நாள் இரவு இரண்டு மணிக்கு நான் தனியாக காரை ஓட்டிக்கொண்டு போனேன். ரொறொன்ரோ நகரத்தின் ஆறு வீதிகளிலும் ஒரு கார் கிடையாது; பஸ் கிடையாது; பாதசாரி கிடையாது. முழு ரோட்டும் எனக்காகவே போட்டிருந்தது. ஒரு சந்தி வந்து அங்கே சிவப்பு விளக்கு எரிந்தது. குறுக்கே போன அகலமான சாலையும் நிசப்தமாக இருந்தது. கார், பாதசாரிகள் என ஒன்றுமே கிடையாது.  சும்மா ஒரு நிமிட நேரம் விளக்கைப் பார்த்தபடி காரில்...

அற்புதம் செய்பவர்கள்

Difficult things we do immediately, miracles take a little longer. கடினமானவற்றை உடனே செய்வோம், அற்புதங்கள் சிறிது நேரம் எடுக்கும். இன்று அருணிடம் இருந்து ஒரு கடிதம் வந்து என்னை ஆச்சரியப் படுத்தியது. அந்தக் கடிதம் கீழே வருகிறது. அதற்கு முதல் முன்கதைச் சுருக்கம்.   எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு பரிசு வாங்கிக் கொடுக்கும்போது நான் ஒலிப்புத்தகங்களாக வாங்கிக் கொடுப்பேன். அவன்...

விமர்சனம்

ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல் வெங்கட் சாமிநாதன்   ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல்தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத்தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்று, சேனனாயக தமிழருக்கு குடியுரிமை மறுக்கத்...

முனைவர் ப.சரவணன்

முனைவர் ப.சரவணனுக்கு என் நன்றி. நான் என்ன எழுதினாலும் அதைப் படித்துவிட்டு முதலில் கருத்து தெரிவிப்பது அவர்தான். அவரைச் சந்தித்ததில்லை. இதுவரை பேசியதும் இல்லை. இந்தியாடுடேயில் வந்ததை எங்கோ சென்று ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார். கனடாவில் இந்தியாடுடே வாங்கமுடியாது. 300,000 தமிழர்கள் வசிக்கும் நாட்டுக்கு 50 பிரதிகள் வருகின்றன. நான் எப்பொழுது போய் கேட்டாலும் கடைக்காரர் முடிந்துவிட்டது என்று...

ரயில் போய்விடும்

நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி.. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்து கணக்காளர். கிராமத்தில் என்ன கணக்கு பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்து வைப்பார். நான் போனபோது வாயில் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு இருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம்...

தாய்மொழி நாள்

சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் (பிப்ரவரி 2010) 85 வயது மூதாட்டி ஒருவர் அந்தமான் தீவில் இறந்துபோனார். அவர் இறந்தபோது அவர் பேசிய மொழியும் இறந்துபோனது. இன்று அதைப் பேச ஒருவரும் இல்லை. அந்த மொழியில் அப்படி என்ன சிறப்பு என்றால் அது 65,000 வருடம் தொன்மையானது. அந்தப் பெண் இறந்தபோது அத்தனை வருடங்கள் வாழ்ந்த மொழி ஒரேயடியாக அழிந்துவிட்டது.   இன்று உலகத் தாய்மொழி நாள். தமிழ் உலக மொழிகளில் 15வது...

புகழுமாறு ஒன்றறியேன்

நைரோபியில் Isak Dinesen வாழ்ந்த வீட்டை அருங்காட்சியமாக மாற்றியிருக்கிறார்கள். நான் அங்கே வாழ்ந்த நாட்களில் இந்த மியூசியத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். ஐஸக் டெனிஸனின் படுக்கை அறையையும், அவர் எழுதிய மேசையையும், உட்கார்ந்த கதிரையையும், எழுதிய பேனையயும், படித்த புத்தகங்களையும் அவர்கள் பாதுகாத்தார்கள். நான் அவருடைய ‘Out of Africa’ நாவலை படித்திருந்தேன். நாவலைப் படித்தபோது பலதடவை இவருக்கு...

ஆஸ்கார் விருது

  அன்பின் முத்துலிங்கம் அவர்களுக்கு,       தமிழ் ஸ்டுடியோ நடத்தும், ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது படங்களின் திரையிடல் நிகழ்வை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். வாய்ப்பிருந்தால் அதனை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும். குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. எனவே அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைகிறேன். நன்றி.         ...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta