Authoramuttu

தீர்வு

அடகு வைப்பதற்கு வீட்டிலே ஒன்றும் இல்லாவிட்டால், எல்லா பெறுமதியான பொருள்களும் முடிந்துவிட்ட நிலையில், குறுக்கு மூளை அப்பா அவனை அடகு வைப்பார். அவன் பெயர் உக்கோ. ஏப்ரல்  மாதம் வரும்போது அவன் தயாராகிவிடுவான். ஆப்பிரிக்காவில் ஏப்ரல் மாதக் கடைசியில்தான் மழைக்காலம் ஆரம்பமாகும். அடகு வைத்தால் மூன்று நான்கு மாதம் கழித்துதான் அவன் மீட்கப்படுவான். ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து தன் உடுப்புகளை அதற்குள்...

பரிசு அறிவித்தல்

 அமெரிக்கா உளவாளி: போட்டி        திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும்  சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.  இவ்வாண்டு பரிசு பெற்ற  நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’.            தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற...

நான் காரை நிறுத்திய இடத்துக்குப் பக்கத்தில் அந்தப் பெண்ணும் நிறுத்தினார். நான் கதவை திறந்து இறங்கிய அதே சமயம் அவரும் இறங்கினார். நான் வங்கியை நோக்கி நடக்கத் தொடங்கியதும் அவரும் நடந்தார். இருவரும் சமமான வேகத்தில் சமமான தூரத்தில் சமமான இடைவெளியில் நடந்தோம். வங்கியின் வாசலை அடைந்ததும் ரேஸ் குதிரை கடைசி மூச்சில் தலையை நீட்டுவதுபோல ஓர் அடி சட்டென்று முன்னே வைத்து கதவைத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டார்...

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ம் ஆண்டுக்கான இயல் விருதை ஏற்கனவே  அறிவித்திருந்தது. ‘உயிர்மை’ ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 2012, பிப்ரவரி 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டுரை.

 

 

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் உரை

 

கடிதம்

திரு செல்வா முக்கியமான கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். இந்த தகவலைப் பார்த்து நாங்கள் கொஞ்சம் பூரிப்படையலாம்.     அன்புள்ள முத்துலிங்கம் ஐயா, வணக்கம். நீங்கள் நலமா? சொல்வனம் இணைய இதழில் "ஆற்றேன் அடியேன்" என்னும் உங்கள் எழுத்தைப் படித்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சியாய்இருந்தாலும், நீங்கள் சொல்லியது (வருத்தப்பட்டு சொல்லியது)...

ஆற்றேன் அடியேன்

சிதம்பரத்தில் இருந்து கிழக்காகவோ தெற்காகவோ இரண்டு மணித்தியாலம் காரை ஓட்டிக்கொண்டு போனால் ஒரு சின்னக் கிராமம் வரும். அப்போது பார்த்து எனக்கு பசி பிடித்துக்கொண்டது. ஆட்களிடம் விசாரித்தால் எல்லோரும் ஒரு சிறிய கடையை காட்டினார்கள். வேறு தெரிவுகள் அங்கு கிடையாது என்பதால் அங்கே போனோம். சிரித்தபடி ஒரேயொரு மனிதர் வரவேற்றார். மதியம் மூன்று மணியாகிவிட்டபடியால் பசிக்கு இட்லி பரிமாறி எங்கள் பசியை ஆற்றினார்...

யானையின் படிக்கட்டு

  இம்முறையும் நான் மொன்ரானா போனபோது ஒரு சம்பவம் நடந்தது. சுப்பர்மார்க்கட்டில் சில சாமான்கள் வாங்கி அவற்றை ஓடும் பெல்ட்டில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தேன். காசாளர் பெண்மணி படு வேகமாக ஒவ்வொரு பொருளாக எடுத்து சிவப்புக் கோட்டில் காட்டி விலையை பதிந்துகொண்டு வந்தார். அவருக்கு ஓர் ஐம்பது வயது இருக்கும். அவர் பொருளை எடுத்து பதிந்த விதம் அவரை அனுபவப் பட்டவராகக் காட்டியது. வேகமாக வேலைசெய்த அவருடைய கைகள்...

மனுஷ்யபுத்திரனின் கேள்வி.

சமீபத்தில் உயிர்மை பத்திரிகையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் என்னிடம் உயிர்மை பத்திரிகைக்காக ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி இதுதான். புலம்பெயர் எழுத்து என்பது பிரதேச அடையாளங்களைக் கடந்த எழுத்தா அல்லது அவற்றை மீளுருவாக்கம் செய்யும் எழுத்தா? என்னுடைய பதில் இது. பல வருடங்களுக்கு முன்னர் என்னை அறிமுகப்படுத்தும்போது ’புலம்பெயர்ந்த எழுத்தாளர்’ என்று ஒருவர் கூறியது ஞாபகத்துக்கு வருகிறது...

காயத்ரி சித்தார்த்

பண்புடன் என்று ஒரு மின்னிதழ்.(www.panbudan.com). இரண்டு நாள் முந்தித்தான் அதுபற்றி அறிந்துகொண்டேன். அதில் நல்ல தரமான கதைகள் கட்டுரைகள், கவிதைகள் நூல்மதிப்பீடுகள் என்று அனைத்துமே படிக்கக்கூடியதாக இருந்தன. மதிப்புமிக்க எழுத்தாளர்கள் எல்லாம் எழுதுகிறார்கள். காயத்ரி சித்தார்த் எழுதிய கட்டுரையை இரண்டு தடவை படித்தேன். அவர் எழுதியிருந்த ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. அதை உங்களுடன்...

மறதி

கதவு பூட்டியிருந்தது. வீட்டுக்குள் செல்லவேண்டும் என்றால் கதவை திறக்க வேண்டும். கதவை திறக்கவேண்டும் என்றால் திறப்பை துவாரத்தினுள்  நுழைக்கவேண்டும். அதற்கு முதலில் திறப்பை கண்டுபிடிக்கவேண்டும். அது மனைவியின் கைப்பையில் கிடந்தது.  மனைவியின் அதே கைப்பையில் வேறு 256 பொருட்களும் வசித்தன. மனைவி கைப்பையை வாசலில் கவிழ்த்து கொட்டி திறப்பைத் தேடத் தொடங்கினார். அதற்கு குறைந்தபட்சம் பத்து நிமிடம்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta