எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது 2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி...
கடிதம்
அன்பு நண்பர் ஒருவரின் கடிதம் அன்புத் தோழர் அ முத்துலிங்கம் அவர்களுக்கு இன்று அதிகாலை என்னை அலைபேசியில் அழைத்த எனது நண்பர் இளம் தோழர் மோகன் (காஞ்சிபுரம்) அவர்கள் அந்த ஆள் ஒரு கொலைகாரர் தான் சந்தேகமே இல்லை என்று திடு திப்பென்று சொன்னார். அவரோடு நான் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு…..இதர எத்தனையோ விஷயங்களைப் பேசுபவன் என்பதால் மேற்படி கிரிமினல் குற்றத்தைச் செய்திருப்பவர் எந்தத்...
விகடன்
இந்த வார விகடனில் எழுத்தாளர் ராஜு முருகன் எழுதியது. இதை நண்பர் வேல்முருகன் எனக்கு பொஸ்டனில் இருந்து அனுப்பியிருக்கிறார். நன்றி. அ.முத்துலிங்கத்தின் கதைகள் எனக்குப் புலம்பெயர்வின் சிலிர்க்கச் செய்யும் ஆச்சர்யங்களை அளித்துக்கொண்டே இருக்கின்றன. தாய் நிலத்தின் தீராத நினைவுகளைச் சதா மீட்டிக் கொண்டே, இளைப்பாற ஒரு நிழல் இன்றி, சிறகுகள் வலிக்க வலிக்கப் பறந்து கொண்டே இருக்கும் ஓர் ஏதிலிப் பறவை யின்...
அறிவிப்பு 3
அன்பின் நண்பருக்கு, வணக்கம். கீழுள்ள அறிவித்தலை உங்கள் வலைத்தளத்தில் இட இயலுமா? என்றும் அன்புடன், எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா 2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி...
அறிவிப்பு 2
உயிர்மை பதிப்பகம் சார்பாக என்னுடைய நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ வெளியீட்டு விழா சென்னையில் 1.1.2012 அன்று நடைபெற்றது. திரு அசோகமித்திரன் வெளியிட திரு சு.கி.ஜெயகரன் நூலை பெற்றுக்கொண்டார். திரு எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் கிடைக்கும். கீழே வருவது நூலின் சமர்ப்பணமும் முன்னுரையும். ...
அறிவிப்பு
அ.முத்துலிங்கம் அவர்களுக்கு, இதை தங்கள் இணையத் தளத்தில் அறிவிப்பாகப் போட முடிந்தால் உதவியாக இருக்கும்.
அன்புடன்
நவீன்
திட்டமிடாத கவிதை
சில வாரங்களுக்கு முன்னர் ஒரு புத்தகப் பார்சல் வந்தது. நான் அமேஸன்.கொம்மில் ஆணை கொடுத்த புத்தகங்கள்தான். அவசரமாகப் பார்சலைப் பிரித்து புத்தகங்களை எடுத்து கையிலே பிடித்து தடவி, விரித்து. முகர்ந்து பார்த்து அவற்றை படிப்பதற்கு தயாரானேன். ஆனால் வழக்கம்போல எதை முதலில் படிப்பது என்பதில் குழப்பம். ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. அது நான் ஆணை கொடுக்காத புத்தகம், எப்படியோ தவறுதலாக பொதியில்...
புளிக்கவைத்த அப்பம்
இப்படித்தான் நடந்தது. யூதப் பெண்மணி ஒருவர் எங்களை மாலை விருந்துக்கு அழைத்திருந்தார். இதிலே என்ன அதிசயம். நான் பலவிதமான கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டு சென்றிருக்கிறேன். விருந்துகளும் அனுபவித்திருக்கிறேன். இந்துக்கள், இஸ்லாமியர், புத்தர்கள், கிறிஸ்துவர்களின் சகல பண்டிகைகளிலும் விருந்துகளிலும் பங்கேற்றிருக்கிறேன். யூத வீட்டுக்கு மட்டும் போனது கிடையாது. பெரும் எதிர்பார்ப்பில் நானும் மனைவியும்...
வெள்ளிக்கிழமை
பசிபிக் சமுத்திரத்தில் சமோவா என்ற மிகச் சின்னத் தீவு ஒன்று இருக்கிறது. சர்வதேச தேதிக் கோடு இதற்கு மிகச் சமீபமாகச் செல்கிறது. கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் கோட்டில் இது அமெரிக்கா பக்கம் இருக்கிறது. இந்தக் கோட்டை தாண்டும்போது ஒரு நாள் கூடுகிறது; அல்லது குறைகிறது. அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் ஒருவர் இந்தக் கோட்டை தாண்டியதும் ஒரு முழு நாளை கடந்துவிடுவார். இந்த ஆண்டு...
சரித்திரத்தில் நிற்கும் அறை
இந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ம் தேதி வந்தபோது நான் பெரிதாக எதிர்பார்த்தேன். ஒன்றுமே நடக்கவில்லை. ஒரு பத்திரிகை ஏதோ முணுமுணுத்தது. வானொலியோ தொலைக்காட்சியோ மூச்சுவிடவில்லை. வார இதழ்கள் மௌனம் சாதித்தன. 17ம் தேதி வந்தது போலவே போய்விட்டது. என்ன மகத்தான தேதி? மனித சரித்திரத்தில் நிலைத்து நிற்கவேண்டிய முக்கியமான நாள் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. இந்த வருடத்தின் அதி முக்கியமான நிகழ்வு என்னவென்று...
Recent Comments