இருபது வருடங்களுக்கு முன்னர் நான் பாகிஸ்தானில் வேலை செய்த காலத்தில் முதன்முதலாக செல்பேசி அங்கே அறிமுகப்படுத்தப் பட்டது. ஒன்றின் விலை ஆயிரம் டொலருக்கு மேலே. என்னிடம் ஒன்றிருந்தது. இடது கையால் தூக்க முடியாது, அத்தனை பாரம். ஆறு மணி நேரத்துக்கு ஒரு தடவை மின்னேற்ற வேண்டும். அப்படியும் பேசும்போது அடிக்கடி தொடர்பு அறுந்துவிடும். சில இடங்களில் இருந்து எவ்வளவு முயன்றாலும் தொடர்பு கிடைக்காது. அது...
இலவசம்
பல வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் ரொறொன்ரோவின் பிரபலமான பல்கடை அங்காடி ஒன்றுக்குச் சென்றேன். நண்பர் தேடிப்போன பொருள் கிடைக்கவில்லை. உடனே திரும்ப வேண்டியதுதானே. நண்பர் விளம்பரப் பலகையில் கழிவு விலையில் விற்கப்படும் சாமான்களின் விவரங்களைப் படித்து அதனால் கவரப் பட்டார். ’இரண்டு காட்டு அரிசி பக்கெட் வாங்கினால் ஒரு கத்தரிக்கோல் இலவசம்’ என்றிருந்தது. யோசிக்காமலே இரண்டு பக்கெட்...
விஷ்ணுபுரம் விருது 2011
அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த...
இரண்டு சிறுகதைகள்
அண்டன் செக்கோவின் கண்ணாடி சிறுகதை 1600 வார்த்தைகள்தான். புதுமைப் பித்தனின் மகாமசானம் சிறுகதை 1000 வார்த்தைகள். இவை வார்த்தைகளின் கனதியாலும் வசனங்களின் அமைப்பாலும் சொன்ன விசயத்தினாலு,ம் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் படைத்த அன்று கிடைத்த அதே புதுமையுடன் இன்றைக்கும் இருக்கின்றன, சிந்திக்க வைக்கின்றன. உங்கள் பார்வையை மாற்றுகின்றன. உலகத்தின் ஆகச் சிறிய சிறுகதை என்று ஒன்றைச் சொல்வார்கள். மூன்றே மூன்று...
குறும்படம்
ஒருமுறை நான் பொஸ்டனில் இருந்தபோது வழக்கம்போல காலை குளியலறையில் முகத்தில் நுரை தடவிவிட்டு, சவரம் செய்வதற்கு முன்னர் ஒரு நிமிடம் என் முகத்தை நானே கண்ணாடியில் உற்று நோக்கினேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தேன். அந்தக் கணம் என் மூளையில் ஏதோ ஒன்று உதித்தது. எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு சின்னக் கதை. ஒன்றரைப் பக்கம்தான். அந்த நிமிடத்தில் அதை எழுதி முடித்தேன். இதிலென்ன...
இன்னும் சிறிது தூரம்தான்
இரண்டு புறநானூறுப் பாடல்கள் நினைவுக்கு வரும்படி ஒரு சம்பவம் நேற்று நடந்தது. நான் மருத்துவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன். கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவ அறைகளில் காத்திருந்த மணித்தியாலங்களின் கூட்டுத்தொகை பத்து முழு நாட்களுக்கு சமமாக இருக்கும். அப்பொழுது அந்த தம்பதியினர் வந்தனர். இருவரும் முதியவர்கள். ஆணுக்கு 70 வயதுக்கு மேலே; பெண் கொஞ்சம் இளமையானவராகத் தோன்றினார். அந்த மனிதர் அவர்...
காலத்தை முந்தியவர்
நான் படித்த அவருடைய சிறுகதையின் பெயர் ’மைசூர் ராசா.’ அதுதான் அவர் எழுதிய முதல் சிறுகதையோ தெரியாது. ஆனால் நான் முதலில் படித்தது அதைத்தான். பத்து வருடத்திற்கு முன்னர் என்று நினைக்கிறேன். அசிரத்தையாகத்தான் படிக்கத் தொடங்கினேன். அதை எழுதியவரின் பெயரை நான் வேறு எங்கேயும் கண்டதில்லை. ஒரு காலத்தில் இலங்கையில் பருப்பு தட்டுப்பாடு இருந்தது. செல்வந்தர் வீட்டில் மட்டுமே அது அகப்படும்...
பத்மினியின் முத்தம்
நடிகை பத்மினியின் முதல் படம் ‘மணமகள்’ என்று நினைக்கிறேன். அது யாழ்ப்பாணத்து தியேட்டரில் ஓடத் தொடங்கியபோது நான் விடுதியில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்தை மாற்ற முன்னர் எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என ஆர்வம். நானும் இன்னொரு நண்பனும் இரவு களவாக விடுதி கேட் ஏறிப் பாய்ந்து சென்று இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்தோம். மணமகள் படத்தில் வந்த யௌவன பத்மினியின் அழகும் ஆட்டமும் என்னைப்...
நினைத்தபோது நீ வரவேண்டும்
அதிகாலை ஐந்து மணிக்கு டெலிபோன் அடித்தது. அழைத்தவர் ரொறொன்ரோ பல்கலைக் கழகம் ஒன்றில் கடமையாற்றும் இயற்பியல் பேராசிரியர். பெயரை செல்வேந்திரன் என்று இப்போதைக்கு வைத்துக்கொள்வோம். அவரிடம் ‘என்ன?’ என்று கேட்டேன். ’நினைத்தபோது நீ வரவேண்டும்’ பாடலைப் பாடியவர் டி. எம். சௌந்தரராஜன் என்பது தெரியும். பாடலை எழுதியவர் யார்?’ என்றார். இதனிலும் பார்க்க முக்கியமான கேள்வியை காலை ஐந்து...
இரண்டு பெண்கள்
மங்களநாயகம் தம்பையா என்பது மிகவும் பரிச்சயமான பெயர். பல வருடங்களுக்கு முன்னரே இவர் எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’நாவல் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஓர் இலங்கைப் பெண் எழுதிய முதல் தமிழ் நாவல். இந்தியாவில் அ.மாதவையா ‘பத்மாவதி சரித்திரம்’ எழுதி 16 வருடங்களின் பின்னர் மங்களநாயகம் தன் நாவலை எழுதி வெளியிட்டார். இந்த நாவலை நான் பலமுறை படிக்கத் திட்டமிட்டு தோற்றிருந்தேன். இதை...
Recent Comments