Authoramuttu

கறுப்பு அணில்கள்

 வசந்தம் வந்துவிட்டது. கனடாவில் வசந்தம் என்று சொல்வதில்லை, துளிர்காலம் என்றுதான் கூறுவார்கள். இலைகள் கொட்டும் காலத்தை உதிர் காலம் என்பதுபோல. துளிர்காலம் என்றால் மரங்கள் மட்டுமல்ல உயிர்கள் துளிர்க்கும் காலமும். மூன்று மாதமாக நீண்ட நித்திரையிலிருந்த சில உயிர்கள் மீண்டும் நடமாட ஆரம்பிக்கும். நிலத்தில்  புதைந்துகிடந்த புற்கள் மறுபடியும் மெல்ல தலை நீட்டும். தெற்கே போன பறவைகள் வடக்கு நோக்கி...

இப்படித்தான் உலகம்

 இன்று நாள் 6.40க்கு விடிந்தது. மாலை 7.58க்கு சூரியன் மறைந்து பகல் முடிவுக்கு வரும். இன்றைய நாள்  ஐந்து டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன், மழை இல்லாமல் மூட்டமுடன் காணப்படும். காற்றழுத்தம் 103 ஆகவும், காற்று  வேகம் வடக்கு திசையில் மணிக்கு 19 கி.மீட்டராகவும், ஈரப்பதன் 61 ஆகவும், பார்வை தூரம் 24 கி.மீட்டராகவும் இருக்கும். வயது ஒரு நாள் அதிகரிக்கும். நான் இன்று ஒரு நல்லவரை சந்திப்பேன்...

பிறர்க்கென முயலுநர்

   இரண்டு நாட்களுக்கு முன் என் இணையப் பக்கத்தில் 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்று தொடங்கும் புறநானூறு பாடல் பற்றி எழுதியிருந்தேன். நல்லவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகிறது என்பது பாடலின் பொருள். அதிலே எனக்கு பிடித்தது 'பிறர்க்கென முயலுநர்' என்று வரும் இடம். இந்தப் பாடலை பேராசிரியர் க.கைலாசபதி தன் மேசையிலே வைத்திருப்பார். ஏனென்றால் தினமும் படித்து மனதில் இருத்தவேண்டிய பாடல் அது...

என்னை மறக்கவேண்டாம்

  [கடவுள் ஒருநாள் எல்லா பூக்களையும் அழைத்து அவற்றிற்கு பெயர் சூட்டினார். பூக்களுக்கு மகிழ்ச்சி, தங்கள் பெயர்களை தாங்களே சொல்லி பார்த்துக்கொண்டன. ஒரேயொரு பூ நிலத்தோடு வளர்ந்த செடியில் இருந்தபடி தன் முறைக்காக காத்து நின்றது. கடவுள் கவனிக்கவில்லை. எல்லா பூக்களுக்கும் பெயர் கொடுத்தாகிவிட்டது. 'என்னை மறக்க வேண்டாம், என்னை மறக்க வேண்டாம்' என்று கீச்சுக் குரலில் இந்தப் பூ கத்தியது. கடவுள்...

தேவையான கோவை

மணி வேலுப்பிள்ளை ஒரு கதை சொன்னார். அவருக்கு தெரிந்தவர் ஒருவர் sound economy என்பதை 'சத்தமிடும் பொருளாதாரம்' என மொழிபெயர்த்தாராம். அதைக் கேட்டதும் எனக்கு சத்தமிட்டு அழவேண்டும் போல தோன்றியது. எனக்கு தெரிந்தவர் beforehand  என்பதை முன்கை என்று மொழிபெயர்த்தார்.  இன்னொருவர் துணிந்து செக்கோவ் மேலேயே கைவைத்துவிட்டார். அவருடைய The Lady with the Dog சிறுகதையை 'சீமாட்டியுடன் கூடிய...

ஆகச் சிறந்த வாசகி

  நேற்று, சனிக்கிழமை, யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் நடத்தும் இரவு விருந்துக்கு அழைப்பு வந்தது. நானும் பழைய மாணவன்தான் ஆகவே கட்டாயம் போகவேண்டும். இந்தப் பழைய மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் என் வாசகர்கள். இப்படியான சந்திப்பின்போது அவர்கள் என்னுடைய எழுத்தை பற்றி ஏதாவது சொல்வார்கள். சிறுவயதில் என்னோடு படித்த ஒருவர் தொடர்ந்து படிப்பதும், அபிப்பிராயம் சொல்வதும் மனதுக்கு உவகை தரும் அனுபவம். எனவே...

வாழ்த்துக்கள் அனுப்புவது

 சமீபத்தில் என் நண்பர் ஒருவருக்கு சட்டப்படி மணவிலக்கு கிடைத்தது. அது அவருக்கு சுலபமாகக் கிடைக்கவில்லை. இரண்டு வருட போராட்டத்தின் பின்னர்தான் கிடைத்தது. இவரும் மனைவியும் இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் கூட்டாகக் கொடுத்தது என் ஊகத்தில் 50,000 டொலர் இருக்கலாம். நண்பர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார். அவருக்கு வாழ்த்து அனுப்புவதா அல்லது அனுதாபம் தெரிவிப்பதா என்று எனக்கு தெரியவில்லை. பிரிவு...

யானை முந்திவிட்டது

 ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களிடம் யார் கிரஹாம் பெல் என்று கேட்டால் உடனே பதில் சொல்வார்கள். அவர்தான் டெலிபோனை கண்டுபிடித்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். மார்டி கூப்பர் யார் என்று கேட்டால் ஒருவருக்குமே தெரியாது. அவர்தான் செல்பேசியை கண்டுபிடித்தார். 1973ல் மோட்டாரோலா கம்பனி செய்த முதல் செல்பேசி நாலரை றாத்தல் எடையிருந்தது. செலவு பத்து லட்சம் டொலர்.   1983ல் ஒரு செல்பேசியின்...

நிலநடுக்க நிபுணர்

 பாக்கியராஜின் ஒரு திரைப்படத்தில் வாத்தியார் கேட்பார். 'ஏண்டா லேட்டு?' 'அதான் லேட்டாயிடுத்து சார்.' 'அதைத்தான் கேட்கிறேன், ஏன் லேட்டு?' 'லேட்டாயிடுத்து சார்.' 'சரி, போய் உட்காரு.'   மருத்துவர் என்னைப்பார்த்து ரத்தப் பரிசோதனை செய்யவேண்டும் என்று சொன்னார். 'ஏன் ரத்தப் பரிசோதனை?' 'பரிசோதனை செய்யத்தான்.' 'அதான் ஏன்?'...

பொய் பேசாத மகள்

 ரொறொன்ரோ தமிழ் மாணவ மாணவிகள் தங்கள் பல்கலைக் கழகங்களை வீட்டிலிருந்து தூரமாகத் தெரிவு செய்கிறார்கள். வீட்டுக்கு கிட்ட நல்ல பல்கலைக் கழகம் இருந்தாலும் தூரமாய் இருக்கும் பல்கலைக் கழகங்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். அப்போது பெற்றோர் கண்காணிப்பும் கண்டிப்பும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம். ஒரு சின்ன அறையை வாடகைக்கு எடுத்து அங்கேயே தங்கி படிப்பதற்கு விரும்புவார்கள். மாதத்தில் ஒருதடவை வந்து...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta