Authoramuttu

காக்க காக்க

  இது எல்லாம் சரியாக ஒரு நிமிடத்தில் நடந்து முடியும். நான் கண்ணாடிக்கூண்டுக்கு முன் நிராயுதபாணியாக நின்றேன். அதிகாரி ஒரு நிமிடம் என்றார்.   நான் விட்ட பிழை என்னவென்றால் நியூ யோர்க் டைம் சதுக்கத்தில் நிஸான் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து அது கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் புறப்பட்டதுதான். கனடாவுக்கு விமானத்தில் பறப்பவர்கள் முதலில் அமெரிக்க...

கடிதங்கள்

1) நீங்கள் உங்கள் படத்தைப் போட்டு அதற்கு கீழே உங்களுடைய பாடல் ஒன்றைப் போட்டிருக்கிறீர்கள். 'நாடா கொன்றோ காடா கொன்றோ' எதற்காக அவ்வையாருடைய பெயர் அங்கே இருக்கிறது?   2) கம்பர் பாடலின் பொருள் என்ன? 3) geometry – இதற்கு தமிழ் என்ன? 4) நாற்பது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். நீங்கள் இப்பொழுதும் அப்படியே எழுதுகிறீர்கள். 5) ஐயா, நீங்கள்...

கார்ச் சாரதி

  விமான நிலையத்துக்கு போவதற்கு ஒரு வாடகை கார் தேவைப்பட்டது. வழக்கம்போல தொலைபேசியில் அழைத்தேன். அவர்கள் ஒரு வாடகைக் காரை அனுப்பிவைத்தார்கள். என்னுடைய வீட்டிலிருந்து ரொறொன்ரோ விமான நிலையம் போவதற்கு முக்கால் மணிநேரம் பிடிக்கும். ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு காரை அனுப்பும்படி சொல்லியிருந்தேன். அப்படியே அவர்கள் சொன்ன நேரத்துக்கு காரை அனுப்பியிருந்தார்கள்...

நாளை சொல்கிறேன்

இணையம் வந்தபிறகு ஒரு வசதி உண்டு. ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை அவர் அப்படியே இன்னொருவருக்கு அனுப்பலாம். அவர் அதை இன்னொருவருக்கு அனுப்பலாம். இப்படி அது சங்கிலித் தொடர்போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். சில சமயம் நீங்கள் அனுப்பியது ஒரு சுற்றுமுடிந்து உங்களிடம் திரும்பி வருவதும் உண்டு. சமீபத்தில் அப்படி வந்த சுவாரஸ்யமான ஒன்று கீழே:   பொஸ்டன் வழக்கு மன்றத்தில் கணவனும் மனைவியும் விவாக விலக்கு...

நலம், நலமறிய ஆவல்

 பொஸ்டனில் நான் விடுமுறைக்கு போய் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் காலை பத்துமணிக்கு  மனைவியையும் என்னையும் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் பலவருடங்களுக்கு முன்னரே ஓய்வெடுத்த அமெரிக்க தம்பதிகள். எங்களை அழைத்தது தேநீர் குடிப்பதற்கு மாத்திரமல்ல, இன்னொரு காரணமும் இருந்தது. அவர்கள் புதுக்கூரை போட்டால் எங்களை அழைத்துக் காட்டுவார்கள். புதுக் கார்பாதை உருவாக்கினால் எங்களை...

பெரிய இருதயம்

  காதலர்கள் ஒருவருக்கொருவர் எழுதிய சில கடிதங்களைப் பார்த்த்கேன். முழுக்க முழுக்க வன்முறையாகத்தான் இருந்தது. யார் பெண், யார் ஆண் என்பதுகூட தெரியவில்லை. ஒருவருடைய பெயர் தக்காளி, மற்றவருடையது முயல்குட்டி. இருவருமே ஒருவரை ஒருவர் 'டா' போட்டு அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு தெரியுமே ஒழிய இன்னொருவர் அவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து யார் காதலன் யார் காதலி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது...

விருந்தாளி

ஏப்ரல் மாதம் வந்ததும் அதிகாலையிலேயே ரொபினின் சத்தம் கேட்கத் தொடங்கும். வசந்தம் வரும்போது பறவையும் வந்துவிடும். பனிக்காலங்களில் ஒரேயடியாக மறைந்துபோன பறவை அதன் இருப்பை அறிவிப்பதற்கு எழுப்பும் இனிய ஒலி காலை வேளைகளை நிரப்பும். அதன் பாடல் ஏற்ற இறக்கத்துடன் அதன் மொழியில் அதன் ஸ்வரத்தில் இருக்கும்.   எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு வருடமும் ரொபின் வரும். கடந்த மூன்று வருடங்களாக அவை வருவது தவறுவதில்லை...

5000 குழந்தைகள்

5

 சீனாவுக்கு போய்விட்டு திரும்பிய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். இரவிரவாக அவர் சீனாவை பற்றியே பேசிக்கொண்டிருந்தார், அத்தனை விசயங்கள் அவருக்கு சொல்ல இருந்தன. உலகிலேயே அதிவேகமாக ஓடும் காந்த ரயிலைப்பற்றி சொன்னார். அதற்கு சில்லும் இல்லை, எஞ்சினும் இல்லை ஆனால் நிலத்திலிருந்து ஒரு சென்டிமீட்டர் உயரம் எழும்பி 430 கி.மீட்டர் வேகத்தில் பறக்கிறது என்றார். இனிமேல் வரும் மூன்று மாதங்களும் நண்பர் யாரைக்...

கவியாகப் போகிறார்

   சில வருடங்களுக்கு முன்னர் ஆட்டோகிராஃப் என்று ஒரு தமிழ் படம் வந்தது. அதில் பா.விஜய் ஒரு பாடல் எழுதியிருந்தார்.   ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே   வாழ்வென்றால் போராடும் போர்க்களமே இந்தப் பாடல் பெரும் விவாதத்தை தமிழ் அறிஞர்களிடையே கிளப்பியது. 'ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே' என்பது இலக்கணப் பிழை. ஒவ்வொரு பூ என்பதுதான் சரியானது. ஆனால் அவர் ஒரு கவிஞர் என்பதால் அவருக்கு...

ஆர்லிங்டன்

 பரா சுந்தரலிங்கம், அவுஸ்திரேலியாவில் இருந்து கடிதம் போட்டிருக்கிறார். 'வணங்குவதற்கு ஒரு மண்' கட்டுரையை படித்துவிட்டு ஆர்லிங்டன் மயானத்தைப் பற்றிய சில தகவல்கள் அனுப்பியிருக்கிறார்.   1) ஆர்லிங்கடனில் பெயர் தெரியாத போர்வீரனின் சமாதியை இரண்டு போர்வீரர்கள் காவல் காப்பார்கள். 21 அடிகள் வைத்து அணிவகுத்து ஒருவரை ஒருவர் எதிரெதிராகக் கடந்து பின்னர் திரும்பவும் அதே பாதையில் நடப்பார்கள்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta