றிக் பாஸ் என்பவர் அமெரிக்க எழுத்தாளர். இவரை நான் மூன்று தடவை சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு அருமையானவர். இவருடைய சிறுகதைகள் அமெரிக்க சிறந்த கதைகளில் தெரிவாகியிருக்கின்றன. இவர் எழுதும் சிறுகதைகள் இயற்கையோடு சம்பந்தப்பட்டவை. மிகவும் நுட்பமாக எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை நான் திரும்ப திரும்ப படிப்பதுண்டு. இயற்கையோடு ஒட்டி இவர் வாழ்வதால் இவருடைய வாழ்க்கை சாகசம் நிறைந்ததாகவும், கேளிக்கை...
சமயோசிதம்
சமயோசிதம் என்றால் உடனுக்குடன் ஒன்றை யோசித்து செய்வது; அல்லது சொல்வது. வின்ஸ்டன் சேர்ச்சில் அதில் கெட்டிக்காரர் என்று சொல்வார்கள். அவருடைய புகழ் உச்சத்தில் இருந்த சமயம் ஒரு பெண் அவரிடம் வந்து 'வின்ஸ்டன், உங்களிடம் எனக்கு பிடிக்காதது இரண்டு விசயம்தான். உங்களுடைய மீசை; மற்றது உங்கள் அரசியல்' என்றார். அதற்கு சேர்ச்சில் 'அம்மணி, விசனம் வேண்டாம். இரண்டுக்கும் அருகாமையில் வரும் வாய்ப்பு...
நாலாவது நிலநடுக்கம்
கனடாவுக்கு வரமுன்னர் நான் என் வாழ்க்கையில் மூன்று நிலநடுக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். பாகிஸ்தானில் இருந்தபோது பெசாவார் என்ற இடத்தில் வேலை செய்தேன். ஆனாலும் ஆப்கானிஸ்தானுக்கு அடிக்கடி போய்வரவேண்டும். சிலவேளைகளில் சின்ன தனியார் விமானத்தில் பறந்து போவோம், சிலவேளைகளில் வாகனத்தில் பயணிப்போம். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் வரும். அதன் அதிர்வுகள் பாகிஸ்தானின் பெசாவார் பகுதிகளையும்...
கம்புயூட்டரில் தமிழ்
நாலு வருடங்களுக்கு முன்னர் 'தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்' என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கம்புயூட்டரைப் பற்றி அப்பொழுது எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்பொழுதும் தெரியாது. ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு கம்புயூட்டர் முக்கியம் என்பது தெரிந்திருந்தது. என்னுடைய கட்டுரை இப்படி ஆரம்பமாகியிருந்தது. 'கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன்...
கூகிள்
கூகிள் பற்றி தெரியாதவர்கள் குறைவு. மாணவர்களிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் வரை இன்று கூகிளைப் பாவிக்கிறார்கள். ஒருநாளில் ஐம்பது அறுபது தடவை கூகிளை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஒரு வார்த்தையின் முதல் எழுத்தை அடித்ததும் கூகிள் பத்து வார்த்தைகளை உங்களுக்கு தெரிவு செய்கிறது. வார்த்தையின் அடுத்த எழுத்தை எழுதியதும் கூகிள் இன்னொரு பத்து வார்த்தைகளை காட்டுகிறது. இப்படியே கூகிள் நீங்கள் என்ன வார்த்தையை...
48 மணி நேரம்
ஒரு காலத்தில் தசாவதானி, அட்டாவதானி என்றெல்லாம் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கக்கூடும், நான் சந்தித்ததில்லை. அட்டாவதானி ஒரே நேரத்தில் எட்டு விசயங்களில் கவனம் செலுத்துவார். தசாவதானியால் ஒரே நேரத்தில் பத்து விசயங்களில் கவனம் செலுத்தமுடியும். அவர்களுக்கு பரீட்சைகூட இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் பொருளில் அவர் ஒரு வெண்பா இயற்றுவார். அதே சமயம் நான்கு தானத்தை நான்கு...
ஒரு கடிதம்
ஐயா வணக்கம். 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' வாசித்து முடித்து நிறைவாக நெஞ்சோடு புத்தகத்தை அணைத்திருந்த கையோடு உங்களுக்கு எழுதுகிறேன். (ஜெயகாந்தன் சொல்லுவார், 'உங்கள் கைகளில் தவழ்வது புத்தகம் அல்ல; எழுதியவனின் இதயம் என்று'.) மனம் நிறைந்த வாசிப்பனுபவம். ஒரு மனிதருடைய வாழ்க்கை கண் முன்னே பல்வேறு சம்பவங்களோடு நிகழ்கிறது. வாழ்க்கையின் அன்றாட விஷயங்களின் மீது உள்ள உங்களுடைய தேர்ந்த...
பயங்கரமான ஆயுதம்
குறுந்தொகையில் ஒரு பாடலைப் படித்தபோது சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. இவ்வளவு காலமும் அப்படி தோன்றியதில்லை. இந்த உலகத்தில் பல விசயங்கள் உங்கள் உற்றார் உறவினர் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தினால்தான் நடக்கின்றன. மனிதன் தன் சொந்த புத்தியால் யோசித்து எடுக்கும் முடிவுகள் குறைவு என்றே படுகிறது. இன்று அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ...
விஞ்ஞானியும் கவியும்
'நீங்கள் ஒரு விஞ்ஞானியா?' என்றார் ரொறொன்ரோவின் பிரபலமான கவி. 'அப்படித்தான் சொல்கிறார்கள்' என்றார் விஞ்ஞானி. 'நான் மிகப் பெரிய சோகத்தில் இருக்கிறேன்.' 'அப்படியா?' 'என் மலைப்பாம்பு சாகப் போகுது' என்று சொல்லி கவி விம்மத் தொடங்கினார். இந்த சம்பாசணையை கேட்டு மற்றவர்கள் திரும்பி பார்த்தார்கள். ரொறொன்ரோவின் சீலி மண்டபத்து வரவேற்பு பகுதியில் இது நடந்தது...
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்பட்டது. இயல் விருது விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்திலும் நடைபெற்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வந்த திரு கோவை ஞானிக்கும், கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தமிழின் தொன்மையை...
Recent Comments