Authoramuttu

கைதட்டல் விழா

  இம்முறை பொஸ்டனில் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போயிருந்தேன். ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கான பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முடிவில் நடந்த விழா.  சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் பாடினார்கள், ஆடினார்கள், நடித்தார்கள். இன்னும் பயிற்சியில் சிலர் பழகின வித்தைகளை செய்துகாட்டினார்கள். அந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் நண்பர்களும் ஆசிரியர்களும் கண்டு...

பூங்கா

அதிகாலையில் கண்ட அந்தக் காட்சி விசித்திரமானதாக இருந்தது. இதற்கு முன்னர் அப்படியான ஒன்றை நான் பார்த்ததில்லை. வழக்கமாகக் காணும் வெண்நங்கை நேற்றையைப் போலவே கறுப்பு நிறதேகப்பியாச ஆடை அணிந்திருந்தாள். அவளுக்கு வயது 21, 22 இருக்கும். அவளுடன் காணப்படும் கபிலநிற அவுஸ்திரேலியன் செப்பார்ட் நாய் இன்றும் அவள் பக்கத்தில் நின்றது. சாப்பிடுவதற்கு முன்னர் அணில் இரண்டு பக்கமும் பார்ப்பதுபோல அவள் பார்த்தாள். அதிலே...

பசிப்பிணி

ஆங்கில அகராதியை தனியாக முதன்முதலில் செய்தவர் சாமுவல் ஜோன்ஸன் என்பவர். அவர் சேக்ஸ்பியரால் ஆறு வசனங்களை ஒழுங்காக எழுத முடியாது. அதிலே ஏதாவது ஒரு பிழை இருக்கும் என்று சொல்வார். டி.எச். லோரன்ஸ் என்பவர் Lady Chatterley's Lover என்ற நாவலை எழுதினார். அதில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்ததால் அதை இங்கிலாந்தில் பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே அந்த நாவலை இத்தாலியில் வெளியிட்டார். 1960 களில் இங்கிலாந்து...

எங்கள் வீட்டு திறவுகோல்

ஐயா புறப்படுவோம் என்று சொன்னார். எனக்கு நடுக்கம் பிடித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக அம்மா எங்களை வெளிக்கிடுத்தி வெளிக் குந்தில் வரிசையாக உட்கார்த்தி வைத்திருந்தார். நாங்கள் ஏழுபேர். புறப்படும் சமயத்தில் என்னுடைய இரண்டு வயது தங்கச்சி ஈரம் செய்துவிட்டாள். அம்மா மறுபடியும் அவள் உடுப்பை மாற்றி வெளிக்கிடுத்த வேண்டியிருந்தது. நாங்கள் வரிசை தவறாமல் நடக்கவேண்டும். பெரியண்ணர் முதலில் நின்றார். ஐந்தாவதாக...

கடிதம்

கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பது பர்றி நான் எழுதிய பதிவு இதோ, பார்க்க: அதிலிருந்து சில வரிகள்: கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா? உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத...

அரசனின் பள்ளிக்கூடம்

  எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நாலு. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள். பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான்.  அவள் கோப்பையை கழுவினாள். அடுத்த...

எந்திரன் பார்த்தேன்

  நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள்...

பாரசூட் கடிதம்

  அன்புள்ள முத்துலிங்கம் அவர்களுக்கு, என்னுடைய மகன் ஓரிரு மாதங்களுக்கு முன்பு, sky diving போவதற்கு என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுத்த போது, அடம்பிடித்து தான் எப்படியும் அதனை செய்து முடிப்பேன் என்று புறப்பட்டான். உலகத்து தெய்வங்களை எல்லாம் வேண்டியபடியே அந்த நாளை மிகவும் சிரமப்பட்டு நகர்த்திக்கொண்டிருந்தேன். வெற்றிகரமாக பரசூட்டிலிருந்து இறங்கி, அந்த நிகழ்வின் படங்களுடன் பாதி ராத்திரியில்...

நாயுடன் கதைப்பவர்

  கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு நண்பர் வந்து என் வீட்டிலே சில தினங்கள் தங்கியிருந்தார். அவர் வீட்டிலே இரண்டு நாய்கள் வளர்த்தார். அதில் ஒன்று ஜேர்மன் ஷெப்பர்ட். அடுத்தது பிட்புல் கலப்பு வகை. நண்பர் நீண்டகாலமாக நாய்கள் வளர்த்து வருகிறார். திறமான பயிற்சியாளர்.  அவருடைய ஜேர்மன் ஷெப்பர்ட் நாய் கட்டளைகளுக்கு தவறாமல் கீழ் படியும். ஆனால் பிட்புல் அப்படியல்ல. எவ்வளவு பயிற்சி கொடுத்தாலும் அது...

நோட்டுப் புத்தகம்

இந்த மாதம் நல்ல மாதம். பரிசுகள் கிடைக்கும் மாதம். மூன்று பரிசுகள் கிடைத்தன. என் மகள் ஒரு நோட்டுப் புத்தகம் பரிசு தந்தார். எழுத்தாளருக்கு இதை விடச் சிறந்த பரிசு என்ன? சிலவேளைகளில் புத்தகங்களும் பரிசாக எனக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால் ஒரு பிரச்சினை உண்டு. அவை வார்த்தைகளால் நிரம்பியிருக்கும். அவற்றை எல்லாம் படிக்கவேண்டும். நோட்டுப் புத்தகம் என்றால் ஒற்றைகள் வெறுமையாக இருக்கும். ஒன்றுமே படிக்கத்தேவை...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta