Authoramuttu

யுவராசா பட்டம்

 என் வாழ்க்கையில் நான் சந்தித்த ஆக இக்கட்டான சம்பவம் என்னவாயிருக்கும் என்று சமீபத்தில் நினைத்துப்  பார்த்தேன். உடனே ஒன்றும் மூளையில் தோன்றவில்லை. ஆனால் சில நிமிடங்கள் கழிந்ததுமே ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது. என் உடம்பிலே உயிர் இருக்கும்வரை மறக்கமுடியாத ஒரு சம்பவத்தை எப்படி மறந்தேன் என்பது வியப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது இன்னொன்றும் நினைவுக்கு வந்தது. பேராசை. பேராசை என்றால்...

ஆச்சரியம்

  நான் சில மாதங்கள் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஒரு பெரிய கம்பனியில் அச்சகம் என்பது சிறிய பிரிவு. அந்தப் பிரிவில் கணக்காளர் பகுதியில் எனக்கொரு சின்ன வேலை. கம்பனியின் முதன்மை இயக்குநர் கொழும்பு மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர். பரம்பரை செல்வந்தராக இருக்கவேண்டும். அவருக்கு இந்த அச்சகம் தேவையில்லாத ஒன்று. அச்சகத்துக்கு பொறுப்பான மேலாளர்  சகலதையும் கவனித்தார். ஆனாலும் முதன்மை...

என் குதிரை நல்லது

அமெரிக்காவின் மொன்ரானா மாநிலம் எனக்குப் பிடிக்கும். கனடாவைத் தொட்டுக்கொண்டு இது வாஷிங்டனுக்கு பக்கத்தில் இருந்தது. ஏப்ரஹாம் லிங்கன் காலத்தில் இருந்தது போலவே இயற்கை வளங்கள் இன்றும் மனிதக் குறுக்கீடுகளில் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. நிறைய மலைத் தொடர்களும், ஆறுகளும். நேரம் தப்பாமல் சீறியடிக்கும் சுடுநீர்க் கிணறுகள்; வனவிலங்கு சரணாலயங்கள். இவை எல்லாவற்றையும் மீறி நட்பான மனிதர்கள் அங்கே...

திருடர்கள்

என்னை ஆப்பிரிக்காவுக்கு அழைத்த கம்பனியில் நான் சேர்ந்த ஒன்றிரண்டு வாரங்களுக்குள்ளாகவே அங்கே பெரிய திருட்டுகள் நடப்பதை கண்டு பிடித்தேன். கண்டுபிடித்தேன் என்றால் திருடர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கவில்லை. களவுகள் நடப்பதை ஊகித்தேன்.  ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ்காரரால் ஆரம்பிக்கப்பட்ட மரம் ஏற்றுமதிசெய்யும் கம்பனி அது. காட்டுமரங்களை வெட்டி அதில் நல்ல மரங்களை இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி போன்ற...

பவித்ரா

நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற  மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் பெண்ணுக்கு தம்பதியரைப் பார்த்ததும் ஏதோ விசித்திரமாக பட்டது. ஆனால் அது என்னவென்று அவளால் இனம் கண்டுகொள்ள முடியவில்லை. மனநல மருத்துவரைப் பார்க்க...

வெளிச்சம்

சிலர் செல்பேசியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் பேனாவை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். சிலர் சாவியை தொலைப்பார்கள், பின்னர் கண்டுபிடிப்பார்கள். நான் ஒருமுறை என் காரை தொலைத்தேன். அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில்...

49வது அகலக் கோடு

4

எல்லாப் பக்கத்திலும் வேகம் குறைந்துகொண்டு வந்தாலும் சிவமூர்த்திக்கு வாசிப்பு வேகம் மட்டும் குறையவில்லை. நேற்றிரவு முழுக்க அவர் தேனீயைப் பற்றிப் படித்தார். அதற்கு முதல்நாள் வரலாறு படித்தார். அதற்கும் முதல் நாள் விஞ்ஞானம். ஒவ்வொன்றிலும் வியப்படைவதற்கு ஏதாவது ஒரு விசயம் அவருக்கு அகப்படும். ராணித் தேனீ ஆண் வேண்டுமென்றால் ஆண் முட்டையிடும்; பெண் வேண்டுமென்றால் பெண் முட்டையிடும். ஆண் தேனீ வேலை செய்யவே...

தாமரை பூத்த தடாகம்

என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மேல்நாடுகள்போல இலையுதிர், பனி, இலைதுளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒரு காதல் எனக்கு இருந்தது. ஒரு பருவத்தில் திடீரென்று என்னை இசை மோகம் பிடித்து ஆட்டியது. அதற்கு காரணம் என் நண்பரும்...

மெய்காப்பாளன்

இது எல்லாம் நடந்தது ஒரு சாதாரண நாள் பின்னேரம் சரியாக நாலு மணிக்கு. எப்படி தெரியுமென்றால் அந்தப் பஸ் தரிப்பு நிலையத்துக்கு பின்னாலிருந்த மணிக்கூண்டு டங்கென்று சத்தமிட்டது. நான் ரோட்டுக்கு இந்தப் பக்கம் நின்றேன், பஸ் தரிப்பு எதிர்ப் பக்கம் இருந்தது. மணியை நிமிர்ந்து பார்த்த என் கண்கள் கீழே இறங்கின. இப்படித்தான் என் வாழ்நாளை மாற்றப் போகும் சம்பவம் தொடங்கியது. பின்மதியம் மூன்று மணிக்கு மச்சாள்...

எங்கள் வீட்டு நீதிவான்

ஐயாவுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் பிள்ளைகள் பிறந்ததும் அவர்கள் சாதகத்தை எங்களூரில் பிரபலமான சாத்திரியாரைக் கொண்டு எழுதுவித்தார். நாங்கள் ஏழு பிள்ளைகள். எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொப்பியில் முழுச் சாதகமும் எழுதப்பட்டிருந்தது. அந்த சாதகங்களை ஐயா ஒரு கட்டாக கட்டி பெட்டகத்துக்குள் வைத்து பூட்டிவிடுவார். அவற்றை பார்ப்பதற்கோ ஆராய்வதற்கோ எங்களுக்கு அனுமதியில்லை. அம்மா எங்கள்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta