Authoramuttu

மீண்டும் படிப்பதில்லை

                                    மீண்டும் படிப்பதில்லை                                           அ.முத்துலிங்கம் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலின்போது என்னை நேர்கண்டவர் ஒரு கேள்வி கேட்டார். நான் அப்படியான கேள்வி ஒன்றுக்கு என்னைத் தயார் செய்யவில்லை. ஆகவே சற்று நேரம் திகைத்துப் போய்விட்டேன். அவர் கேட்ட கேள்வி இதுதான். ‘உங்களுக்கு சொந்தமான முதல் புத்தகம் என்ன?’ இதுபற்றி நான் இதற்கு...

தமிழ் இருக்கை

தமிழ் இருக்கை அ.முத்துலிங்கம் தமிழ் இருக்கைக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில்  எப்படியான வரவேற்பு கிடைத்தது என்பதை நேரில் பார்க்கும் வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு கிடைத்தது. அமெரிக்காவின் பிரபல மருத்துவர் ஒருவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு தமிழ் இருக்கை ஆரம்பிப்பதற்காக கணிசமான தொகையை முன் பணமாக  வழங்கியிருந்தார். ஆறுமாதம் கழித்து  மீதிப் பணத்தை செலுத்துவதற்காக  இரண்டு...

ஐந்து கால் மனிதன்

ஐந்து கால் மனிதன் அ.முத்துலிங்கம் நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார் என்பதும், அவர் துப்புரவுப் பணிப்பெண் என்பதும் பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும்...

லூனாவை எழுப்புவது

                      லூனாவை எழுப்புவது                                  ஆயிஷா காவாட் (மொழிபெயர்ப்பு) என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா, ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம் செலுத்தும் சுரங்கப் பாதைக்கு எதிரிலும், வீடு திருத்தவேலை சாமான்கள் விற்கும் ஹோம் டிப்போவுக்கு பக்கத்திலும் உள்ளது. இங்கே வசிப்பவர்கள் ஹோம் டிப்போவுக்குப் போய் அங்கே சுத்தியலும்...

மாவோவுக்காக ஆடை களைவது

                              மாவோவுக்காக ஆடை களைவது                              தைலா ராமானுஜம்                              மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம்  ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’ ‘மகளே, இதற்கு முன்னர் நான்...

என்னைத் திருப்பி எடு

என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...

எங்கேயோ இப்ப மூன்று மணி

                                எங்கேயோ இப்ப மூன்று மணி                                        அ.முத்துலிங்கம் நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப் போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன. சந்திரசேகரம் உள்ளே நுழைந்துவிட்டதால் ஆபத்து இல்லை என்று பட்டது. கட்டுநாயக்கா  விமான நிலையம் பரபரப்பாக இயங்கியது. எனக்கு முன் நிற்பவனின் பெயர் பத்மநாதன். எனக்கு...

ஒரு மணி நேரம் முன்பு

                                 ஒரு மணி நேரம் முன்பு                                         அ.முத்துலிங்கம் உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன  வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும்.  ‘உன் அம்மாவிடம்  12 ரூபாய் 30 சதம் அவ தரவேண்டும் என்று சொல்’ என்றான். நீ...

இங்கே நிறுத்தக்கூடாது

                           இங்கே நிறுத்தக்கூடாது                                அ.முத்துலிங்கம் ஒரு நாள் எப்படி தொடங்கி எப்படி முடியவேண்டும் என்பதை தீர்மானிப்பது அவன் மனைவிதான். 1983ல் கனடா வந்தபோதும் அவர் மனைவிதான் முடிவுகளை எடுத்தார். இப்போது 2010 லும் அவர்தான் எடுப்பார். அன்றைய நாளை நினைத்தபோது கொஞ்சம் நடுக்கம் எடுத்தது. அவருடைய பெயர் பரமேஸ்வரன். அதைச் சுருக்கி பரமேஸ் என்றார் இப்பொழுது பரம்...

குமர்ப் பிள்ளை

                   குமர்ப் பிள்ளை                         அ.முத்துலிங்கம் கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து நான் நிறையச் சம்பாதித்தேன். மனைவி போன பின்னர் நாலு பிள்ளைகளும் நாலு நாடுகளில் தங்கிவிட்டார்கள். குளிர் கூடக்கூட பகல் குறையும் நாடு அது. என் பிறந்த ஊரில் மீதி வாழ்நாளைக்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta