எழுத்தாளரும் புகைப்படமும் அ.முத்துலிங்கம் ஏதாவது பத்திரிகையிலிருந்து புகைப்படம் கேட்டு எழுதினால் உடனேயே சிக்கல் தொடங்கிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் இப்படி ஒரு பத்திரிகை கேட்டதும் நான் என்னிடம் இருந்த படம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அவர்களுக்கு அது பிடிக்கவில்லை. வேறு படம் இருக்கிறதா என்று எழுதிக் கேட்டார்கள். இன்னும் சில படங்கலைத் தேடி எடுத்து அனுப்பினேன். மறுபடியும் ‘கனதி...
ரயில் புறப்பட்டுவிட்டது
விகடன் தடம் இதழ் நேர்காணல் – ஏப்ரல் 2017 ரயில் புறப்பட்டுவிட்டது புனைவு என்ற வார்த்தையை, அதன் சாத்தியங்களை முழுமையாக எப்போது உணர்ந்தீர்கள்? அந்த கணம் நினைவிருக்கிறதா? நிச்சயமாக. எங்கே எந்த நேரத்தில் என்ன படித்தேன் என்பதும் நினைவில் இருக்கிறது. கல்கி, மு.வரதராசனார், காண்டேகர் எல்லோரையும் படித்துவிட்டேன். புதுமைப்பித்தன் இரவலாகக் கிடைத்து முதன்முதலாக ‘பொய்க்குதிரை’ சிறுகதையை...
ஒரு மணிநேரம் முன்பு
ஒரு மணி நேரம் முன்பு அ.முத்துலிங்கம் உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தரவேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ’ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ...
நீண்ட பயணம்
நீண்ட பயணம் மொகமட் நசீகு அலி மொழிபெயர்ப்பு அ.முத்துலிங்கம் எட்டு வருடங்களாக இதுதான் அமெரிக்காவில் என்னுடைய கடைசி மாதம் என எண்ணியபடியே வாழ்ந்தேன். ஆனால் சில தனி நபர்களின் பெருந்தன்மையால் எனக்கு ஏற்பட்ட இடையூறுகளை என்னால் கடக்க முடிந்தது. 1995 கோடைக்காலத்தில் நியூயோர்க் நகருக்குள் நான் நுழைந்தபோது கலைஞர்களுக்கே உரித்தான முரட்டு இலட்சியவாதம் என்னை நிறைத்திருந்தது. அப்பொழுது நான் பெனிங்டன்...
கந்தையா வாத்தியார்
கந்தையா வாத்தியார் அ.முத்துலிங்கம் மாமரத்தின் கீழ் வாத்தியார் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வீட்டில் சொல்லிச் செய்வித்த ஆறு சுற்று முறுக்கு அது. அவர் அண்ணாந்து கடித்து சாப்பிட்ட படியால் அதிலிருந்து தெறித்த துகள்கள் மறுபடியும் அவர் வாய்க்குள் விழுந்தன. வாத்தியார் அதை முடித்துவிட்டு மூக்குப்பொடி போட்டார். முறுக்கு மணத்தை தள்ளிவிட்டு மூக்குப்பொடி மணம் சூழ்ந்தது. வாத்தியார் நாற்காலியில்...
இளையவரும், முதியவரும்
இளையவரும், முதியவரும் சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரே பத்து கேள்விகளை சில எழுத்தாளர்களிடம் கொடுத்து அவர்கள் பதில்களை வெளியிட்டிருந்தார்கள். தமிழிலும் அப்படிச் செய்து பார்க்கும் ஆர்வம் வந்தது. அதே பத்து கேள்விகளை இரு எழுத்தாளர்களிடம் கொடுத்து பதில்களைப் பெற்றேன். ஒருவர் பேராசிரியர். மற்றவர் மாணவி. கேள்விகளும் பதில்களும் கீழே. அஞ்சலி விவேகானந் – வயது 16. கனடாவில், உயர்நிலைப் பள்ளி ஒன்றில்...
மாவோவுக்காக ஆடை களைவது
மாவோவுக்காக ஆடை களைவது தைலா ராமானுஜம் மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம் ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’ ‘மகளே, இதற்கு முன்னர் நான் வெளிநாட்டுக்கு பயணமே செய்ததில்லையா?’ ‘அம்மா, ஆசியா புடாபெஸ்ட் இல்லை; அங்காரா இல்லை. மன்னிக்க...
இரண்டு டொலர்
இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல். தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம் மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும் பார்க்க உயர்ந்த வேலை எனக்கு...
ஸ்டைல் சிவகாமசுந்தரி
ஸ்டைல் சிவகாமசுந்தரி அ முத்துலிங்கம் யாழ்ப்பாணம் டவுனுக்குப் போவதற்கு பஸ் டிக்கட் 10 சதம்தான். கொக்குவில் என்றால் 50 சதம். வவுனியாவுக்கு 4 ரூபா; கொழும்புக்கு 12 ரூபா. கொழும்புத்துறைக்கு ஒன்றுமே கொடுக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவள்வீடு அங்கேதான் இருந்தது. பெயர் சிவகாமசுந்தரி. வயது 15. படித்த பள்ளிக்கூடம் வேம்படி. வருடம் 1965. தினமும் அவளுடைய அப்பா அவருடைய காரில் அவளை...
என்னைத் திருப்பி எடு
என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...
Recent Comments