Categoryநாட்குறிப்புகள்

எதிர்பாராதது

எதிர்பாராதது அ.முத்துலிங்கம் ஒரு பிரபலத்தை நேர்காணல் செய்வதற்கு எனக்கு ஒரு வருடகாலம்கூட அலையவேண்டி இருந்திருக்கிறது. என் வாழ்க்கையில் பலரை நேர்காணல் செய்திருக்கிறேன். பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் இலகுவில் நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார்கள். தட்டிக் கழிக்கவே செய்வார்கள். ஆனால் சமீபத்தில் எனக்கு ஒரு சின்ன...

கிறிஸ்மஸ் தவளை

கிறிஸ்மஸ் தவளை   அ முத்துலிங்கம்     நான் சொல்லப்போகும் கதை இன்னும் முகநூலில் அடிபடவில்லை. இணையத்தில் யாரும் எழுதவில்லை. சஞ்சிகைகள் கண்டுகொள்ளவில்லை.. எனவே துணிந்து எழுதலாம். இதைப் பதிவு செய்யும் முதல் ஆளாக நான் இருப்பேன்.   இது நடந்தது தென்னாப்பிரிக்காவின். ஜோஹான்னஸ்பேர்க் நகரில். அங்கே உள்ள பிரபலமான சுப்பர்மார்க்கெட் ஒன்று சில வருடங்களாக நட்டத்தில் ஓடியது. உரிமையாளர்கள் எத்தனையோ முயற்சிகள்...

குரங்குகள் வாங்கும் பென்சன்

9 வருடங்களுக்கு முன்னர் என் மகன் அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமைச்  சந்தித்தபோது அதைப் பதிவு செய்தார். நான் அதை மொழிபெயர்த்து அது பிரசுரமானது. இன்று மனித நேயத்தில்  உயர்ந்து நிற்கும் இந்த மாமனிதர் நினைவாக மீண்டும் பதிவிடுகிறேன்.      குரங்குகள்வாங்கும்பென்சன் முனைவர் எம். சஞ்சயன் அந்த அலுவலகம் பிரம்மாண்டமானதாக, குடைந்துவைத்ததுபோல குறைவான வெளிச்சத்தில் இருந்தது. இடுப்பளவு உயரத்தில் இருந்து...

பிரபலங்கள்

                    பிரபலங்கள்                          அ.முத்துலிங்கம்  இரண்டு பிரபலங்களை ஒரே நேரத்தில் ஒருபோதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டேன். அந்த விழாவில் பிரபலம் இல்லாத ஒருவர் இருந்தார் என்றால் அது நான்தான். என்னுடன் ஒரு பெண்மணியும் இருந்தார். உலகப் புகழ் பெற்ற புகைப்பட நிபுணர் அவர். National Geographic, Time...

அஞ்சலி – செல்வா கனகநாயகம்

         நான் இங்கே இல்லை              அ.முத்துலிங்கம்   முதலில் அவர் அந்தச் செய்தியை சொன்னது என்னிடம்தான். Fellow of the Royal Society of Canada விருது அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருந்தது. அந்தக் கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி பெருமையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். கனடாவில் ஒரு கல்வியாளருக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய கௌரவம் இது. இந்தக் கௌரவம் முதன்முறையாக ஓர்...

வார்த்தைச் சித்தர்

வார்த்தைச் சித்தர் அ.முத்துலிங்கம்   ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்.பொ என்று...

78 ஆணிகள்

7

78 ஆணிகள்   அ.முத்துலிங்கம்   33 நாள் பயணம். குடிவரவு அதிகாரி கேட்கிறார் ‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ ‘3000 ஆண்டு சிலுவை.’ ‘வேறு என்ன?’  ‘30 ஆணிகள்.’ ‘அப்படியா, உள்ளே வா.’ சிலுவையில் தன்னை அறைந்துகொள்ள அவனுக்கு புது நாடு ஒன்று கிடைத்துவிட்டது. செல்வம் அருளானந்தம் எழுதிய கவிதை இது. இப்படி 78 கவிதைகள் தொண்ட தொகுப்பு நூல் கனடாவில் வெளியாகியுள்ளது. உலகத்து சமகால தமிழ்க் கவிகளின் கவிதைகளை...

இன்னொரு வாரம்

இன்னொரு வாரம்   அ.முத்துலிங்கம்   எச்சரிக்கை   வீட்டிலே பொருத்தியிருந்த அபாய மணி வேலை செய்யவில்லை. கதவு மணி, புகை மணி, யன்னல் மணி எல்லாமே வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வீட்டிலே நெருப்பு பிடிக்கலாம். திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லலாம். ஒருவித பாதுக்காப்பும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம்.   அபாய மணி கம்பனிக்கு முறைப்பாடு செய்தேன். அவர்கள் அதைத் திருத்துவதற்கு ஓர் ஆளை...

ஒரு வாரம்

ஒரு வாரம்   அ.முத்துலிங்கம்   விருது   சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான். ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டிய நிகழ்ச்சிதான்.   ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியை பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. நடப்பு வருடம் அவருடைய லாபம்...

இந்த வாரத்தில் 2 நாட்கள்

இந்த வாரத்தில் 2 நாட்கள்   அ.முத்துலிங்கம்   கார் கத்தியது   பெரிய ஹொட்டலில் விருந்து நடந்தது. என் மேசையில் இருந்த நண்பர் கேட்டார், ‘நீங்கள் இப்பவும் அடிக்கடி தொலைந்து போகிறீர்களா?’ நான் சொன்னேன். ‘நான் எங்கே தொலைந்து போகிறேன். ரோட்டுகள் அல்லவா திடீர் திடீரென்று தொலைந்து போகின்றன.’ அதுதான் நடந்தது. நான் புறப்பட்டபோது இரவு 11 மணி. கையிலே ரோட்டு வரைபடம் இருந்தது. செல்பேசியில் போகும் பாதைக் குறிப்பு...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta