Categoryநாட்குறிப்புகள்

கத்தரிக்காய் கூட்டு

 என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் ஒரு போலந்துக்காரர். அவர் மணமுடித்தது ஒரு ஜேர்மன் பெண்ணை. இவர்கள் இரண்டாம் உலகப்போர் முடிந்த கையோடு தம்பதிகளாக கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். இப்பொழுது அவர்கள் வயதை ஓர் அளவுக்கு கணக்கிட்டுக்கொள்ளலாம். ஒருவர் சொல்வது மற்றவருக்கு கேட்காது என்றபடியால் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.   பனிக்காலம் முடியும்வரை வீட்டுக்குள்ளே பதுங்கியிருப்பவர்கள் வசந்தம்...

காந்தியின் கடிதம்

  'எங்கள் வீட்டுக்கு கிருஷ்ணமேனன் வந்திருக்கிறார்' என்றார் நண்பர். 'எங்கள் வீட்டுக்கு சுபாஷ் சந்திரபோஸ் வந்திருக்கிறார்' என்றேன் நான். 'எங்கள் வீட்டுக்கு விஜயலட்சுமிபண்டிட் வந்திருக்கிறார்' என்றார் நண்பர். 'எங்கள் வீட்டுக்கு மவுண்ட்பேட்டன் வந்திருக்கிறார்' என்றேன் நான். எங்கள் வீட்டுக்கு நேரு வந்திருக்கிறார்' என்றார் நண்பர். 'எங்கள் வீட்டுக்கு...

பிறப்பொக்கும் எல்லா உயிரும்

   அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிகமும் போற்றப்படுபவர் தோமஸ் ஜெஃபர்ஸன். இவர் அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி. 4 ஜூலை 1776 ல் அமெரிக்கா சுதந்திர பிரகடனம் செய்தது. அந்தப் பிரகடனத்தை யாத்தவர் என்ற பெருமை இவருக்குத்தான் உரியது. அதிலே காணப்படும் முக்கியமான ஒரு வசனம் 'பிறப்பில் எல்லா மனித உயிரும் சமம்.' இன்றைக்கும் இந்த ஒரு வசனத்துக்காக அவர் புகழ் பேசப்படுகிறது. திருவள்ளுவர் எத்தனையோ...

காக்க காக்க

  இது எல்லாம் சரியாக ஒரு நிமிடத்தில் நடந்து முடியும். நான் கண்ணாடிக்கூண்டுக்கு முன் நிராயுதபாணியாக நின்றேன். அதிகாரி ஒரு நிமிடம் என்றார்.   நான் விட்ட பிழை என்னவென்றால் நியூ யோர்க் டைம் சதுக்கத்தில் நிஸான் வாகனத்தில் வெடிகுண்டு வைத்து அது கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் புறப்பட்டதுதான். கனடாவுக்கு விமானத்தில் பறப்பவர்கள் முதலில் அமெரிக்க...

கடிதங்கள்

1) நீங்கள் உங்கள் படத்தைப் போட்டு அதற்கு கீழே உங்களுடைய பாடல் ஒன்றைப் போட்டிருக்கிறீர்கள். 'நாடா கொன்றோ காடா கொன்றோ' எதற்காக அவ்வையாருடைய பெயர் அங்கே இருக்கிறது?   2) கம்பர் பாடலின் பொருள் என்ன? 3) geometry – இதற்கு தமிழ் என்ன? 4) நாற்பது வருடங்களுக்கு முன்னர் நீங்கள் எழுதிய சிறுகதைகளைப் படித்து வியந்திருக்கிறேன். நீங்கள் இப்பொழுதும் அப்படியே எழுதுகிறீர்கள். 5) ஐயா, நீங்கள்...

கார்ச் சாரதி

  விமான நிலையத்துக்கு போவதற்கு ஒரு வாடகை கார் தேவைப்பட்டது. வழக்கம்போல தொலைபேசியில் அழைத்தேன். அவர்கள் ஒரு வாடகைக் காரை அனுப்பிவைத்தார்கள். என்னுடைய வீட்டிலிருந்து ரொறொன்ரோ விமான நிலையம் போவதற்கு முக்கால் மணிநேரம் பிடிக்கும். ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு காரை அனுப்பும்படி சொல்லியிருந்தேன். அப்படியே அவர்கள் சொன்ன நேரத்துக்கு காரை அனுப்பியிருந்தார்கள்...

நாளை சொல்கிறேன்

இணையம் வந்தபிறகு ஒரு வசதி உண்டு. ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை அவர் அப்படியே இன்னொருவருக்கு அனுப்பலாம். அவர் அதை இன்னொருவருக்கு அனுப்பலாம். இப்படி அது சங்கிலித் தொடர்போல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும். சில சமயம் நீங்கள் அனுப்பியது ஒரு சுற்றுமுடிந்து உங்களிடம் திரும்பி வருவதும் உண்டு. சமீபத்தில் அப்படி வந்த சுவாரஸ்யமான ஒன்று கீழே:   பொஸ்டன் வழக்கு மன்றத்தில் கணவனும் மனைவியும் விவாக விலக்கு...

நலம், நலமறிய ஆவல்

 பொஸ்டனில் நான் விடுமுறைக்கு போய் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் காலை பத்துமணிக்கு  மனைவியையும் என்னையும் தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் பலவருடங்களுக்கு முன்னரே ஓய்வெடுத்த அமெரிக்க தம்பதிகள். எங்களை அழைத்தது தேநீர் குடிப்பதற்கு மாத்திரமல்ல, இன்னொரு காரணமும் இருந்தது. அவர்கள் புதுக்கூரை போட்டால் எங்களை அழைத்துக் காட்டுவார்கள். புதுக் கார்பாதை உருவாக்கினால் எங்களை...

பெரிய இருதயம்

  காதலர்கள் ஒருவருக்கொருவர் எழுதிய சில கடிதங்களைப் பார்த்த்கேன். முழுக்க முழுக்க வன்முறையாகத்தான் இருந்தது. யார் பெண், யார் ஆண் என்பதுகூட தெரியவில்லை. ஒருவருடைய பெயர் தக்காளி, மற்றவருடையது முயல்குட்டி. இருவருமே ஒருவரை ஒருவர் 'டா' போட்டு அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு தெரியுமே ஒழிய இன்னொருவர் அவர்கள் எழுதிய கடிதங்களிலிருந்து யார் காதலன் யார் காதலி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது...

விருந்தாளி

ஏப்ரல் மாதம் வந்ததும் அதிகாலையிலேயே ரொபினின் சத்தம் கேட்கத் தொடங்கும். வசந்தம் வரும்போது பறவையும் வந்துவிடும். பனிக்காலங்களில் ஒரேயடியாக மறைந்துபோன பறவை அதன் இருப்பை அறிவிப்பதற்கு எழுப்பும் இனிய ஒலி காலை வேளைகளை நிரப்பும். அதன் பாடல் ஏற்ற இறக்கத்துடன் அதன் மொழியில் அதன் ஸ்வரத்தில் இருக்கும்.   எங்கள் வீட்டுக்கு ஒவ்வொரு வருடமும் ரொபின் வரும். கடந்த மூன்று வருடங்களாக அவை வருவது தவறுவதில்லை...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta