குறுந்தொகையில் ஒரு பாடலைப் படித்தபோது சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது. இவ்வளவு காலமும் அப்படி தோன்றியதில்லை. இந்த உலகத்தில் பல விசயங்கள் உங்கள் உற்றார் உறவினர் ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயத்தினால்தான் நடக்கின்றன. மனிதன் தன் சொந்த புத்தியால் யோசித்து எடுக்கும் முடிவுகள் குறைவு என்றே படுகிறது. இன்று அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இது தொடங்கிவிட்டது. மனிதனை நல்வழிப் படுத்துவதோ தீ...
விஞ்ஞானியும் கவியும்
'நீங்கள் ஒரு விஞ்ஞானியா?' என்றார் ரொறொன்ரோவின் பிரபலமான கவி. 'அப்படித்தான் சொல்கிறார்கள்' என்றார் விஞ்ஞானி. 'நான் மிகப் பெரிய சோகத்தில் இருக்கிறேன்.' 'அப்படியா?' 'என் மலைப்பாம்பு சாகப் போகுது' என்று சொல்லி கவி விம்மத் தொடங்கினார். இந்த சம்பாசணையை கேட்டு மற்றவர்கள் திரும்பி பார்த்தார்கள். ரொறொன்ரோவின் சீலி மண்டபத்து வரவேற்பு பகுதியில் இது நடந்தது...
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதுகள்
கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருது வழங்கும் விழா இந்த வருடம் இரு பிரிவுகளாக கொண்டாடப்பட்டது. இயல் விருது விழா சென்னையிலும் மற்றைய விருதுகளுக்கான விழா ரொறொன்ரோ பல்கலைக் கழக மண்டபத்திலும் நடைபெற்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழிலக்கியத்தில் தீவிர சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும், திறனாய்வாளராகவும் இயங்கி வந்த திரு கோவை ஞானிக்கும், கல்வெட்டு ஆராய்ச்சிகள் மூலம் தமிழின் தொன்மையை...
கைதட்டல் விழா
இம்முறை பொஸ்டனில் ஒரு பள்ளிக்கூட விழாவுக்கு போயிருந்தேன். ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கான பிள்ளைகளுக்கு நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முடிவில் நடந்த விழா. சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் பாடினார்கள், ஆடினார்கள், நடித்தார்கள். இன்னும் பயிற்சியில் சிலர் பழகின வித்தைகளை செய்துகாட்டினார்கள். அந்தப் பிள்ளைகளின் பெற்றோரும் நண்பர்களும் ஆசிரியர்களும் கண்டு...
பூங்கா
அதிகாலையில் கண்ட அந்தக் காட்சி விசித்திரமானதாக இருந்தது. இதற்கு முன்னர் அப்படியான ஒன்றை நான் பார்த்ததில்லை. வழக்கமாகக் காணும் வெண்நங்கை நேற்றையைப் போலவே கறுப்பு நிறதேகப்பியாச ஆடை அணிந்திருந்தாள். அவளுக்கு வயது 21, 22 இருக்கும். அவளுடன் காணப்படும் கபிலநிற அவுஸ்திரேலியன் செப்பார்ட் நாய் இன்றும் அவள் பக்கத்தில் நின்றது. சாப்பிடுவதற்கு முன்னர் அணில் இரண்டு பக்கமும் பார்ப்பதுபோல அவள் பார்த்தாள். அதிலே...
பசிப்பிணி
ஆங்கில அகராதியை தனியாக முதன்முதலில் செய்தவர் சாமுவல் ஜோன்ஸன் என்பவர். அவர் சேக்ஸ்பியரால் ஆறு வசனங்களை ஒழுங்காக எழுத முடியாது. அதிலே ஏதாவது ஒரு பிழை இருக்கும் என்று சொல்வார். டி.எச். லோரன்ஸ் என்பவர் Lady Chatterley's Lover என்ற நாவலை எழுதினார். அதில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்ததால் அதை இங்கிலாந்தில் பதிப்பிக்க முடியவில்லை. ஆகவே அந்த நாவலை இத்தாலியில் வெளியிட்டார். 1960 களில் இங்கிலாந்து...
எங்கள் வீட்டு திறவுகோல்
ஐயா புறப்படுவோம் என்று சொன்னார். எனக்கு நடுக்கம் பிடித்தது. கடந்த இரண்டு மணி நேரமாக அம்மா எங்களை வெளிக்கிடுத்தி வெளிக் குந்தில் வரிசையாக உட்கார்த்தி வைத்திருந்தார். நாங்கள் ஏழுபேர். புறப்படும் சமயத்தில் என்னுடைய இரண்டு வயது தங்கச்சி ஈரம் செய்துவிட்டாள். அம்மா மறுபடியும் அவள் உடுப்பை மாற்றி வெளிக்கிடுத்த வேண்டியிருந்தது. நாங்கள் வரிசை தவறாமல் நடக்கவேண்டும். பெரியண்ணர் முதலில் நின்றார். ஐந்தாவதாக...
கடிதம்
கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்பது பர்றி நான் எழுதிய பதிவு இதோ, பார்க்க: அதிலிருந்து சில வரிகள்: கூந்தல் என்பது ஒரு ஆர்கானிக் பொருள். அதற்கு மணம் உண்டு என்று ப்ளஸ் டூ படிக்கும் மாணவன் கூடக் கூறிவிடுவான். பிறகு ஏன் நக்கீரன் இல்லை என்றார்? ஏனெனில் அப்போது ப்ளஸ் டூ கிடையாது என்று கூறி விடலாமா? உண்மை ஏறத்தாழ நான் மேலே கூறியதுதான். அதாவது அக்காலத்தில் இந்த அறிவு பரவலாக இல்லை. கண்டிப்பாக ஆயுர்வேத...
அரசனின் பள்ளிக்கூடம்
எத்தனை முறை சொன்னாலும் என் மகனைத் திருத்த முடியாது. அவனுக்கு எட்டு வயது, மகளுக்கு நாலு. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இவன் எசமானன், அவள் வேலைக்காரி. இவன் மேசையிலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான். வேலைக்காரி வீடு கூட்டினாள். பின்னர் சமையல் அறையை சுத்தமாக்கினாள். இவன் வயிறார சாப்பிட்டுவிட்டு கதிரையை பின்னாலே தள்ளிவிட்டு எழுந்து சென்றான். அவள் கோப்பையை கழுவினாள். அடுத்த...
எந்திரன் பார்த்தேன்
நான் என் வாழ்க்கையில் எந்த திரைப்படத்தையும் முதல் நாள், முதல் காட்சி பார்த்தது கிடையாது. நாற்பது வருடங்களுக்கு முன்னர் அது இலங்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. கேட் பாய்ந்தோ, சுவரில் தொங்கியோ, ஆட்களின்மேல் நடந்தோ போக சாத்தியப்பட்டவர்களுக்கே அது முடியும். ஆகவே படத்தை 'இன்றோ நாளையோ மாற்றிவிடப் போகிறார்கள்' என்று செய்தி வந்ததும் போய்ப் பார்ப்பேன். அநேகமாக என்னுடைய நண்பர்கள்...
Recent Comments