Categoryநாட்குறிப்புகள்

நல்ல சிறுகதை

  சென்ற முறை நத்தார் விடுமுறையின்போது நண்பர் செல்வம் ஒரு பரிசு தந்தார். 'சொல்வலை வேட்டுவன்' என்பது புத்தகத்தின் பெயர். அதன் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியன். வழக்கம்போல புத்தகத்தை பின்னட்டையில் தொடங்கி வாசித்துக்கொண்டே வந்தபோது ஓர் இடம் வந்ததும் அப்படியே நின்றேன். அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். 'சென்னை மாநகரில் 'அகராதி' என்கிற சொல்லைவிட டிக்சனரி என்னும் வார்த்தையைத்தான்...

பரிசு

சென்ற முறை நத்தார் விடுமுறையின்போது நண்பர் செல்வம் ஒரு பரிசு தந்தார். 'சொல்வலை வேட்டுவன்' என்பது புத்தகத்தின் பெயர். அதன் ஆசிரியர் பா.ரா.சுப்பிரமணியன். வழக்கம்போல புத்தகத்தை பின்னட்டையில் தொடங்கி வாசித்துக்கொண்டே வந்தபோது ஓர் இடம் வந்ததும் அப்படியே நின்றேன். அதை அப்படியே கீழே தந்திருக்கிறேன். 'சென்னை மாநகரில் 'அகராதி' என்கிற சொல்லைவிட டிக்சனரி என்னும் வார்த்தையைத்தான்...

முகமாறாட்டம்

  ஆங்கில சினிமா ஒன்று பார்ப்பதற்காக டிக்கட் வாங்குவதற்கு வரிசையில் நின்றபோது ஓர் இளம் பெண் என்னைப் பார்த்து சிரித்தார். வெள்ளைக்காரப் பெண். ஒரு மாமனாருக்கு மருமகள் கொடுக்கும் சிரிப்புபோல அந்தச் சிரிப்பில் மரியாதை இருந்தது. அல்லது ஒரு மேலதிகாரிக்கு அவர் கீழ் வேலை செய்யும் பெண் எதிர்பாராத விதமாக சந்தித்தபோது கொடுக்கும் சிரிப்பு என்றும்  சொல்லலாம். சில நொடிகளில் அவள் தவறு செய்தது அவளுக்கு...

சிறுமியின் நாட்குறிப்பு

நான் ஸ்கூலில் இருந்து திரும்பியபோது அது நடந்தது. அத்தனை சாதாரணமாவும் நிதானமாகவும் நடந்து முடிந்தது எனக்கே ஆச்சரியம்தான். மயிர் அடர்ந்த வலிமையான கரம் என்னைப் பற்றி இழுத்தது. மரக்குத்தி போல இருந்த மற்றக்கை என் வாயை பொத்தியது. என் கண்களில் தோன்றிய பீதியை பார்த்துவிட்டு அவன் கையை எடுத்திருக்கவேண்டும். பூவரச மரம் ஒன்றுக்கு பக்கத்தில் என்னைக் கிடத்தினான். தோள் மூட்டை அவன் அழுத்திப் பிடித்ததில்...

விடுபட்டுவிட்டது

நான் ஒரு ஜேர்மன் அதிகாரியிடம் சில காலம் வேலை பார்த்தேன். ஜேர்மன் அதிகாரி என்றால் கண்டிப்பானவர் என்பது சொல்லாமலே விளங்கிவிடும். முதல் பிரச்சினை அவர் பெயர். அவருடைய பெயரிலுள்ள எழுத்துக்களுக்கும் உச்சரிப்புக்கும் ஒருவித தொடர்பும் இல்லை. தன் பெயரை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதை தினமும் மினக்கெட்டு சொல்லித் தருவார். உச்சரிப்புக்குத் தக்கமாதிரி எழுத்தை மாற்றிவிடவேண்டியதுதானே. ஆனால் அவரிடம் அதை...

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம் நான் மதிக்கும் பெரிய எழுத்தாளர். ‘கணையாழியின் பரிணாம வளர்ச்சி’ என்ற முக்கியமான தொடரை எழுதியவர். அவர் சமீபத்தில் ‘இவர்களது எழுத்துமுறை’ என்ற தொடரை எழுதிவருகிறார். பல எழுத்தாளர்கள் அனுசரிக்கும் விதவிதமான அணுகுமுறைகள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். இத்தொடரில் அ.முத்துலிங்கம் என்று குறிப்பிட்டு எழுதியது வந்திருக்கிறது. நான் எங்கோ எழுதியது, பேசியது எல்லாவற்றையும்...

ஆறாத் துயரம்

நான் பல சமயங்களில் பலர் ஆறாத் துயரம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்; எழுதியிருப்பதை  படித்துமிருக்கிறேன். நான் நேரில் கண்ட சம்பவம் ஒன்று இரண்டு நாட்கள் முன்புதான் நடந்தது. என் நண்பர் ஒருவர் உடல் நலமில்லாமல் இருந்தார். மூன்று மாதங்களாக பல மருத்துவர்களைப் பார்த்தும் நிறைய மருந்துகள் எடுத்தும் ஒரு பிரயோசனமில்லை. எக்ஸ்ரே, ஸ்கான், ரத்தப் பரிசோதனை என்று நிறையச் செய்து பார்த்துவிட்டார்கள் ஆனால்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta