வன்னி வீதி அ.முத்துலிங்கம் நேற்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கனடாவில் நான் வசிக்கும் மார்க்கம் நகரசபையின் கூட்டத்தில் அது நடந்தது. நகரபிதா ஸ்கெப்பட்டியும் அங்கத்தவர் லோகன் கணபதியும் உணர்ச்சியுடன் உரையாற்றினார்கள். இறுதியில் ஒரு புது ரோட்டுக்கு நகரசபை ’வன்னி வீதி’ என்று பெயர் சூட்டியதும் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்...
ஒரு காலும், ஒரு கையும்
ஒரு காலும், ஒரு கையும் அ.முத்துலிங்கம் ஒரு கதை சொல்லப்பட்டு வருகிறது. கடவுள் உலகத்தைப் படைத்த பின்னர் முதல் மனிதனை சிருட்டித்தார். அவன் ஆதாம் என அறியப்பட்டான். ஏதேன் தோட்டத்தின் அழகை பருகியபடி அவன் காய் கனிகளைப் புசித்து உயிர் வாழ்ந்தான். கவலை என்பது என்னவென்று தெரியாத வாழ்க்கை எனினும் தனிமை அவனை வாட்டியது. அவனை படைத்த ஆண்டவனை அழைத்தான். அந்தக் காலங்களில் எல்லாம் ஆதாம் அழைத்தவுடன்...
கையுறை
என் மனைவி ஒரு கதை சொன்னர். அவர் மாணவியாக இருந்த சமயம் அவருடைய ஆசிரியை யப்பானுக்கு போய் வந்திருந்தார். அங்கே ஒரு ரயில் நிலையத்தில் ஆசிரியை கைப்பையை மறதியாக விட்டுவிட்டு ரயில் ஏறிவிட்டார். இரண்டு மணி நேரம் கழித்து அவர் திரும்பவும் வந்தபோது அந்த கைப்பை வைத்த அதே இடத்தில் இருந்ததாம். யப்பானியர்கள் நாணயமானவர்கள் என்று என் மனைவி தன் தீர்ப்பை சொல்லி முடித்தார். ஒருவருடம் முன்பு யப்பானிய அமைச்சர் ஒருவர்...
இரண்டுநாள் நண்பர்
இரண்டு நாள் நண்பர் இன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. நண்பர் ரிஸ்டோ ஸெலேகெவிக் இறந்துவிட்டார். இரண்டு தடவை மட்டுமே சந்தித்த ஒருவர், ஆனால் அவரை மறக்க முடியவில்லை. குவைத்தில் லாரி அடித்து அந்த இடத்திலேயே மரணமாகிவிட்டார் என்று செய்தி சொன்னது. முதல் தரம் ஒரு மதிய உணவின்போது...
இரவு யானைகள்
இரவு யானைகள் அ.முத்துலிங்கம் பல வருடங்களுக்கு முன்னர் கென்யாவில் நான் வசித்து வந்த காலத்தில் அங்கே உள்ள ‘சாவோ’ (Tsavo) தேசிய வன காப்பகத்துக்கு ஒருமுறை போயிருக்கிறேன். கென்யாவில் உள்ள ஆகப் பெரிய வனகாப்பகம் அதுதான். 22,000 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. எங்கள் விடுதியை நோக்கி காட்டுக்குள்ளால் பயணித்துக்கொண்டே இருந்தோம். இருள் வேகமாக வந்தது. எங்கள் சாரதி வழியை...
ஆகச் சிறந்த பிழை
ஆகச் சிறந்த பிழை அ.முத்துலிங்கம் என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும்...
தீர்மானம்
தீர்மானம் அ.முத்துலிங்கம் புது வருடம் பிறந்தபோது ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களை வேஸ்ட் செய்யவேண்டும் என்று. அதன் பிரகாரம் நேற்று முந்தாநாள் ’டோஸ்தானா’ என்ற ஹிந்திப்படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்னர்கூட டோஸ்தானா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அபிஷேக் பச்சன், ஜோன் ஆப்பிரஹாம், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தது...
புது வருடம்
புது வருடம் அ.முத்துலிங்கம் ’2013 புதுவருடம் பிறக்கிறது, என்ன செய்யலாம்?’ என்றார் நண்பர். ’அது நல்ல காரியம். அதை தடுக்கக்கூடாது’ என்றேன் நான். ’கொண்டாடப்போவதில்லையா?’ என்றார். ’வேறு என்ன, இரவு விருந்துதான்’ என்றேன். அப்படித்தான் தீர்மானமானது. விருந்துக்கு எட்டுப் பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். 200 பேர் ஒரே சமயத்தில் இருந்து...
பழைய படம்
பழைய திரைப்படம். அ.முத்துலிங்கம் இன்று ஒரு பழைய திரைப்படம் பார்த்தேன். இதே திரைப்படத்தை ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். அப்பொழுது நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இயற்பியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. பேராசிரியர் Distribution coefficient ratio என ஆரம்பித்தார். வார்த்தைகளை மனனம் செய்து எழுத்துக்கூட்ட பழகிக்கொண்டு அவற்றின் பொருளை அடுத்தநாள்...
இரண்டு வயிறுகள்
என்னுடைய மனைவி சொல்வார் என் உடம்பு கண்ணாடித் தன்மை வாய்ந்தது என்று. அது முற்றிலும் உண்மை. நேற்றிரவு நடந்த விருந்திலும் அதை உறுதிசெய்ய முடிந்தது. ஒரு பெண் சிற்றுண்டியை தட்டத்தில் ஏந்தியபடி ஒவ்வொருவராக கொடுத்துக்கொண்டு வந்தார். வரிசையில் அடுத்தது நான். என் முறை வந்ததும் தட்டத்தை அப்படியே சுழற்றி எடுத்து அடுத்தவருக்கு நீட்டிக்கொண்டு போனார். காரணம் என்னை அவர் கண்கள் பார்க்கவில்லை. விருந்துகளில் என்னை...
Recent Comments