என் மகள் பிறந்து மூன்று மாதத்திலேயே அவளுக்கு என் முகம் பரிச்சயமாகிவிட்டது. என் முகத்தை தொட்டிலுக்கு மேலே கண்டதும் உடம்பை தூக்கி தூக்கி அடிப்பாள். தன்னைத் தூக்கவேண்டும் என்ற செய்தியை அப்படித்தான் முழு உடம்பாலும் சொல்வாள். வெகு சீக்கிரத்திலேயே நான் வீட்டை விட்டு வெளியே போகமுடியாமல் போனது. கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த திசையில் திரும்பி பார்த்து அழத் தொடங்குவாள். நான் வெளியே போகிறேன் என்பது...
இப்பவேயா
பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. என் மகனுக்கு அப்ப சின்ன வயது. பள்ளிக்கூடங்கள் சிறுவர்களை தண்டிப்பதற்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பதை அவன் அந்த வயதிலேயே கண்டுபிடித்துவிட்டான். பள்ளிக்கூட நாட்களில் காலையில் அவனை உருட்டி உருட்டித்தான் எழுப்பவேண்டும். பள்ளிக்கு போகமுன்னர் ஒவ்வொருநாளும் உணவு மேசையை சுற்றி பத்து தடவை ஓடிவிட்டுத்தான் புறப்படுவான். ஆனால் சனி, ஞாயிறு நாட்களில் அதிகாலையிலேயே எழும்புவான்...
சிரிப்பு
புகைப்படம் எடுக்கும்போது என்னைச் சிரிக்கவைக்கப் பாடுபட்டு பலர் தோற்றுப் போயிருக்கிறார்கள். புகைப்படத்தில் சிரிப்பது செயற்கையாக இருக்கும். அதில் தெரிவது வேறு யாரோ. ஆனால் நீங்கள் அறியாமல் உங்களை யாராவது படம் பிடித்தால் அது உண்மையாக இருக்கும். படத்தை பார்த்தவுடனேயே புரிந்துவிடும். ஏனென்றால் அந்தச் சிரிப்பு இதயத்தில் உதித்து வெளியே வந்திருக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் கனடா வந்திருந்தபோது பலர் அவருடன்...
நாடற்றவன்
ஜூலை 27ம் தேதி ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆரம்பமாகும். வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம்...
இன்றைய நாள்
இன்று முதலைகளைப் பற்றி படிக்கும் நாள். காலையிலிருந்து அதைத்தான் செய்கிறேன். புத்தகத்தில் படிப்பதும் ஏதாவது புது சந்தேகம் ஏற்பட்டால் கம்புயூட்டரில் தேடுவதுமாக நீண்ட நேரம் என் ஆராய்ச்சி நடந்தது. நான் ஒருமுகமாக வேறு கவனம் இல்லாமல் இந்த ஆய்வில் மூழ்கியிருந்ததைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ முனைவர் பட்டத்துக்கு தீவிரமாகப் படிப்பதாக நினைத்திருப்பார்கள். முதலைகள் குளிர் ரத்தப் பிராணிகள். அவை சாப்பிட்ட...
எங்கள் வீட்டு மணிக்கூடு
அது மிகப் பழைய மணிக்கூடு. மனைவி சொல்கிறார் அதற்கு 40 வயது இருக்கும் என்று. நான் அப்படி நினைக்கவில்லை. இன்னும் 20 வருடம் கூடுதலாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரு மணிக்கும் டங் டங் என்று இசையுடன் அடிக்கும். ஐந்து மணிக்கு, ஐந்து டங், ஆறு மணிக்கு ஆறு டங். இப்படி எங்கள் வீட்டு வாழ்க்கையில் அவ்வப்போது மணி பார்த்து அதன் பிரகாரம் சகல காரியங்களும் நிறைவேறிக்...
சன்மானம்
கடந்த வாரம் ஒருநாள் நான் வழக்கம்போல கீழ் அறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். மனைவி மேலே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று மேலேயிருந்து சத்தம் வந்தது. அப்படிக் கத்தினால் இரண்டு காரணம்தான் இருக்கும். ஒன்று, சுடுதண்ணீர் பானையை காலிலே போட்டுவிட்டார். இரண்டு, 649 லொத்தரில் 10 மில்லியன் டொலர் விழுந்துவிட்டது. இரண்டையும் சமாளிக்கும் தைரியத்தை மனதில் உண்டாக்கிக்கொண்டே மேலே ஓடினேன்...
முதல் பரிசு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2011ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளை அறிவித்திருக்கிறது. விஜயன் விக்னேஸ்வரன் இயக்கிய ’சித்ரா’ குறும்படத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இரண்டு வருடத்திற்கிடையில் இவர் இயக்கிய திரைப்படம் ஒன்று பெரும் புகழ் இவருக்கு ஈட்டிக் கொடுக்கும். இது என்னுடைய தீர்க்கதரிசனம். இதை...
மதுமிதா
வட அமெரிக்காவில் கலியோப் தேன்சிட்டு என ஒரு பறவை இருக்கிறது. திடீரென்று மறைந்து போகும். மறுபடியும் ஆறு மாதம் கழித்து திடீரென்று தோன்றும். மதுமிதாவும் அது போலத்தான். திடீர் திடீரென்று காணாமல் போய்விடுவார். ஆனால் பெயரிலேயே மது வைத்திருப்பவர் திரும்பும்போது தேன் கொண்டு வருவார். இதோ அவர் எழுதிய கடிதம். அன்பு அ. முத்துலிங்கம் அவர்களுக்கு வணக்கம். விகடனில் நானும் விகடனும் வாசித்தேன்...
தாயும், சேயும்
நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தை கடக்கிறார்கள். மணல் தணல் போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு...
Recent Comments